Friday, May 22, 2020

பெற்ற தந்தையால் பெறுகின்ற திருமணத்தடையை நீக்க ஆன்மிக பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, தந்தையால் திருமணத் தடை ஏற்படுமா?

என்பது பற்றியும்.

ஒருவருடைய ஜனன ஜாதகத்தை நாம் எடுத்துக்கொண்டால், அதில் தந்தையைக் குறிக்கின்ற கிரகம் சூரியன். இந்த சூரியன் ஒரு ஜாதகத்திலே 1,5,9 என்ற இடத்திலே, ராகு கேதுவும் இணைந்து இருந்தால் அல்லது ராகுவிற்கோ கேதுவிற்கோ 1,5,9 என்று சொல்லப்படுகின்ற இடத்திலே சூரியன் இருக்கப்பெற்றாலும் ராகு, கேது 1,5,9 என்ற நிலையில் நடுவில் இருந்தாலும், சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தாலும், சூரியன், செவ்வாய் அஸ்தமனமானாலும், சூரியன் நீச்சம் பெற்றாலும், ஒன்பதிலே சனி, ராகு அல்லது கேது இருந்தாலும், சூரியன், லக்கனம் என்று சொல்லப்பட்ட இடத்தில், 7வது இடத்திலே அவர் பாதகாதிபதியாக இருந்தாலும், 7வது இடம் பாதக ஸ்தானத்தில் சூரியன் இருந்தால், மேற்கண்ட இந்த விதிகளில் சூரியன் இருந்தாலும் அந்த சுய ஜாதகத்திற்கு சொந்தக்காரர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்பை உடையவர்கள் விரைவாக திருமணம் முயற்சி செய்யும் இந்த நேரத்திலே தந்தையே திருமணத்திற்கு தடையாக இருந்துவிடுகின்றனர்.

அப்பொழுது அந்த தந்தையை திருமணத்திற்கு முயற்சி செய்கின்ற அந்த முக்கியமான காலகட்டத்தில் ஒதுக்கி நாம் திருமண முயற்சி செய்யும் பொழுது, இந்த ஜோதிட அபிப்பிராயத்தை நாம் தகர்த்தெறிகின்றோம் என்பது மிக முக்கிய ஒன்றாகும்.

அவருடைய ஜாதகத்தைப் பார்க்கும் பொழுது தந்தையால் அந்த திருமணம் தாமதப்படுவதும், தடைபடுவதும் அது அவருக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்துகின்ற செயலாக இருந்தாலும், பொதுவாக நாம் திருமண விஷயத்தில் தந்தையின் ஈடுபாட்டைக் குறைத்து அவருக்கு பதிலாக பொறுப்பான வேறொருவரை அமர்த்தி அந்த திருமணம் முயற்சியை செய்யும்பொழுது, அந்தத் திருமணம் விரைவாகவும் வெற்றிகரமாகவும் முடிந்து விடுகிறது.

இந்த ஜோதிடத்தின் நுட்பத்தையும் இந்த ஜோதிடாத்தி ஆழத்தையும் இந்த பரிகாரத்தை நமக்கு கற்பித்த பெரியவர்களையும் முக்கியமாக நினைவு கூற வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட சூட்சுமங்கள் என்பது ஜோதிடத்தை சாதாரணமாக கணிதம் செய்பவர்களுக்கு வரவே வராது.

ஜோதிடத்திலேயே தங்களை அர்பணித்த விற்பன்னர்களுக்கு மட்டும்தான் இது கண்டிப்பாக வரும். அப்பொழுது உங்களது ஜாதகத்தைப் பார்த்து இதுபோன்று ஒரு நிலை உங்களில் யாருக்கேனும் காணப்பெற்றால் தந்தையின் முயற்சியை ஒதுக்கிவிட்டு அதற்குபதிலாக பொறுப்பான வேறு மனிதரை அமர்த்தி இந்தத் திருமண முயற்சியை செய்யும் பொழுது, நிச்சயமாக வெற்றிகரமான விரைவான திருமண அழைப்பு ஏற்படுத்தும் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment