Wednesday, May 20, 2020

தாயாருக்கு ஏற்படுகின்ற மாங்கல்ய தோஷத்தை தவிக்கின்ற ஆன்மீக பரிகாரம்.

ஒரு ஆண் குழந்தை வெள்ளியன்று "நவமி"

திதியிலே உருவாகுமானால் நீங்கள் பதறவோ, எண்ணம் சிதறவோ, குழந்தையை உதறவோ வேண்டாம்.

நீங்கள் மேற்கொள்ள வேண்டியது,

"திருச்செந்தூருக்கு சென்று குழந்தையை, திருச்செந்தூர் முருகனுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும், விலைக்கு கொடுத்துவிடக்கூடாது. "அப்பனே, முருகன், ஞானப் பண்டிதனே" இந்தக் குழந்தை வெள்ளியன்று நவமி திதியில் உருவாகியதால் இதைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு, அதே நேரத்தில் இந்தக் குழந்தையின் தாயார் மாங்கல்யத்திற்கும் சோதனை வரக்கூடாது... என்று அவரிடம் மனமுருகி வேண்ட வேண்டும். அந்தக் குழந்தையை திருச்செந்தூர் முருகனுக்கு தானம் கொடுக்கும் பொழுது, குழந்தை பெரியவனாகி வளர்ந்து, திருமணம் ஆகின்ற அந்த நேரத்திலே, முருகப்பெருமானிடம் சென்று தானத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

கணவருக்கு அதாவது அந்தக் குழந்தையின் தகப்பனாருக்கு வரும் ஆயுள் பயத்தையும் போக்கி விடலாம்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான பரிகாரத்தை நம் முன்னோர்கள் முத்தாக கொடுத்திருக்கிறார்கள். என்றால் அவர்களுக்கு நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு பரிகாரமும் இருக்கிறது.

வெளியூரில் வசிக்கும் உங்களால் இப்படிப்பட்ட காரியத்தை செய்ய முடியவில்லை என்றால் அந்த ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்துவிட்டால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், உங்கள் குலதெய்வத்தையும், அந்த முருகனையும், நீங்கள் இருக்கின்ற இடத்திலேயே மனதார வணங்கி, இந்தக் குழந்தையை "இறைவா, முருகா" உன்னிடம் தானம் கொடுத்து விட்டோம், தத்து கொடுத்து விட்டோம், இதைக் காப்பாற்றி என் கணவனின் ஆயுள் நிலையை வளர்த்து, என் மாங்கல்யத்தையும் நீதான் காப்பாற்ற வேண்டும். என்று மனம் உருகி வேண்ட வேண்டும். இந்தப் பிரார்த்தனை பலிக்குமா பலிக்காதா என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தீர்களேயானால் நிச்சயமாக பலிக்காது. இறைநம்பிக்கையை ஆழமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நமக்கான இந்த முத்தான பரிகாரங்கள் கொடுத்துச் சென்ற நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பரிகாரங்கள் எல்லாம் உங்களை வந்து அடைகின்றனவே நீங்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்களல்லவா? அதனால் இந்த பரிகாரத்தை தட்டாமல் செய்து அந்தக் குழந்தையின் மீது சாபத்தைப் போடாமல், வெறுப்பைக் காட்டாமல் அதை வருத்தாமல் இருந்து, அன்பைப் பொழிய வேண்டும்.

அந்த முருகன் கடாட்சத்தைப் பெற்று இத்துன்பங்களிலிருந்து விடுபட்டு, அந்தத் தாயார் சுமங்கலியாக வாழலாம். அந்தக் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இப்புவியில் பிறந்த தத்துவத்தை அடைந்து விடுகிறது, என்றால் மிகையாகாது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் , உங்கள் குல தெய்வத்திற்கும், இந்த திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கும் தந்து கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதியின் நோக்கமாகும். என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment