நம்முடைய ஜாதகத்திலே இருக்கின்ற குரு தோஷம் போக்க பயன்படுத்துகின்ற பரிகாரம்.
அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, குரு கிரகம் பாதிக்கப்பட்டால் திருமணம் தடையாவது பற்றியதாகும்.
குரு எப்படியெல்லாம் சொந்த ஜாதகத்திலே பாதிக்கப்படுகின்றார் என்றால் நீச்சமடைந்து, பங்கம் அடையவில்லையென்றால், அதாவது குரு மகரத்திலே நீச்சமடைகின்றார். குரு சுக்கிரனின் வீடான ரிஷபம், துலாமில் இருக்கும்பொழுது, மந்தப்பலனைத் தருவார். குருவின் விரோதியாக இருக்கின்ற சுக்கிரனின் சாரங்களிலே இருக்கின்ற அது 7-ஆவது இடமாக நமது ஜாதகத்திலே இருக்கும் பொழுது, தடைகளையும் தாமதங்களையும் உருவாக்குவார்.
மேலும் குரு பாவ கிரகங்களோடு சேர்ந்து 7 ஆவது இடத்திலே இருக்கும் பொழுது, நமது திருமண வாழ்க்கையை பாதித்துவிடும்.
அப்பொழுது குரு தாமதப்படுகின்ற சூழ்நிலையிலே, நச்சு கிரகங்களின் சேர்க்கையிலோ அது 7- ஆவது இடத்திலே இருக்கும்பொழுது 6,8,12 - இல் குரு மறைந்தாலும் ஜாதகத்திலே குரு பாவியாக இருந்தாலும், அவருடைய காலகட்டத்திலே திருமணம், நடைபெறுவதற்கான சாத்தியம் குறைவு. அதை நிவர்த்தி செய்ய, நாம் செய்ய வேண்டியது "ஆதி குரு சிவனே"
அவர் தட்சிணாமூர்த்தியின் அம்சத்தில் இருப்பதால், தட்சிணாமூர்த்தியின் வழிபாடு இருக்க வேண்டும்.
குரு கிரகத்தால் ஏற்படும் திருமண தோஷங்களுக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போன்று தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், ஆராதனை செய்ய வேண்டும். அன்ன, வஸ்திர தானம் செய்வதால் அவரின் அருள் நமக்கு கிட்டும். அதன் மூலம் காலதாமதமான திருமணத்தை விரைவு படுத்தலாம். குரு ஹோரையில் குருவை வணங்க அவரின் அருள் கிட்டும். அவரின் பார்வையாலே அனைத்து திருமணங்களும் நடந்தேறும். குருவை எவ்வாறெல்லாம் ஆராதித்து பிரீதி செய்ய முடியுமோ அவ்வாறு செய்ய வேண்டும்.வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தட்சிணை அளிக்க வேண்டும். அன்ன, வஸ்திர தானம் செய்ய வேண்டும். குரு கிரக பிரீதி இது அழைத்து வரும். மண வாழ்க்கையை துரிதப்படுத்தும்.
திருமண முயற்சியிலே ஈடுபடுபவர்களுக்கு ஆலங்குடி வழிபாடு, திருச்செந்தூர் வழிபாடு, குருவின் மஞ்சள் நிற குதிரை நம் உடலில் திணித்து சக்கரங்களிலே இணைத்து இயங்கச் செய்வதால் திருமணக் கலை வரும்.
குறிப்பிட்ட ஆலயங்களிலே சென்று வணங்கும்பொழுது குருவின் கருணை நமக்கு முழுமையாகக் கிடைத்து, திருமணம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறி, இனிதே நிறைவு செய்கிறேன்.
No comments:
Post a Comment