Saturday, May 16, 2020

நரசிம்ம வழிபாடு இரண்டாவது பகுதி

நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம் அதனால்தான் பக்தர்கள் இவரை நம்பி வணங்குகிறார் மேலும் உக்கிர தெய்வமாக இருந்தாலும் வக்கிர பிரச்சினைகளை நீக்கக் கூடியவர்.
 பிரகலாதனுக்கு போன்று  நாம் பக்தியோடு  மற்றும் சிரத்தையோடு வணங்கி வந்தால்  எட்டு திசைகளில் பெயர் புகழ்   பரவி வரும். 
 நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டால் மரண பயம்  நீங்கும்.
  நரசிம்ம மூர்த்திக்கு நாளை என்ற பதில் இல்லை இன்று இப்பொழுதே பக்தர்களுடைய  பிரார்த்தனைக்கு செவிசாய்க்கும் கருணாமூர்த்தி  இவரே.
 நரசிம்மர் இருக்கும் ஸ்தலங்கள் ஆஞ்சநேய மூர்த்திஇருப்பார்.
 வைகாசி மாதத்திலேயே வளர்பிறை சதுர்த்தி அன்று  சூரியன் மறையும் நேரத்தில்  அந்திம நேரத்திலே நரசிம்மமூர்த்தி அவதாரம் எடுத்தார்.
  நரசிம்மரின் அவதாரம் என்பது எங்கும் பரவி இருக்கிறார் தூணிலும் இருப்பார் மற்றும் துரும்பிலும் இருப்பார் என்ற வாக்கியம் நரசிம்மருக்கு மிகவும்  பொருந்தும்.
  வைணவசமயத்தின் அதிகமாக வணங்கப்படும்  விஷ்ணு அவதாரமாக இருக்கும்  நரசிம்ம மூர்த்தியே
 இவருக்கு தமிழ்நாடு கர்நாடகம்   ஆந்திரா பகுதியிலே புகழ்பெற்ற நரசிம்ம  ஆலயங்கள் இருக்கிறது.
 செவ்வாய் தோஷம் நீங்க  இவர்  அதிகமாக வணங்கப்படுகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

No comments:

Post a Comment