Monday, May 18, 2020

ராகு தோஷத்தை தவிர்க்க பயன்படுத்துகின்ற தாந்த்ரீக பரிகாரம்.

இன்று நாம் காணவிருப்பது ராகுவிற்குரிய தாந்த்ரீகப் பரிகாரங்களாகும்.

ராகுவினுடைய மூலிகை "எட்டிமர வேராகும்". வடக்கு போகும் எட்டிமர வேரை பூஜையறையில் வைத்து வாசனை திரவியங்கள் தடவி ராகுவின் காயத்ரி மந்திரத்தை 1008 முறை ஜெபித்து தாயத்தாக்கி ஒரு வெள்ளியில் அடைத்து அணிந்து கொள்ளவும்.

இதனால், நாக, சர்ப்ப, பூர்வ ஜென்ம, புத்ர தோஷம் ஆகியன விலகும். மாந்திரீக தாக்குதல் அணுகாது. காரியம் வெற்றி பெறும். பேய், பிசாசு, கெட்ட கனவு, தீர்க்க முடியாத வியாதி, குழப்பம் விலகும், எதிரி தொல்லை தீரும். ராகுவின் 18 வருட கால பலன் கிடைக்கும்.

மேலும், சுகபோக வாழ்க்கை கிடைக்கும்.

கால சர்ப்ப தோஷம் காணாமல் போகும்.

குடும்ப சண்டை விலகும். பேர் புகழ் கிடைக்கும். அவ்வப்போது சாம்பிராணி தூபம் போட்டு, தாயத்தை சக்தியுடன் வைக்கவும்.

நவக்கோள்களில் ராகு இருக்கும் இடமான நம் வீட்டின் தென்மேற்கு மூலையில் ஒரு தாம்பாளத்தில் கருப்பு உளுந்தை பரப்பி, அதன்மேல் 18அகல்விளக்குகளை ஏற்றி அதில் தீபதூபம் காட்டி வணங்க, கருத்து வேறுபாடுகள், செய்வினை தோஷங்கள், உடல் குறைபாடுகள் விலகும். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும்.

அருகம்புல்லை 108 எண்ணிக்கையில் எடுத்து மாலையாக்கி ராகு பகவானுக்கு அணிவிக்க ராகு தசை ப்ரீதியாகும். செல்வ வளம் சேரும். ஞாயிறு மாலை ராகு கால வேளையில் ஒரு சிறிய தாம்பாளத்தில் உளுந்து வைத்து கற்பூரம் ஏற்றி வலம் வந்து குலதெய்வத்தை வணங்க மாந்திரீகம் விலகுதல், சர்ப்பதோஷ நிவர்த்தி கிடைக்கும்.

சாம்பிராணி, வெண் கடுகு கலந்த தீப தூபம் காட்டி வர சகல தோஷங்கள், தொழில் தடை விலகும். ராகு திசை நடப்பவர்களுக்கு திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரம் மிகுந்த செல்வாக்கு தரும்.

ஞாயிறு இரவு 9 வெற்றிலை, பாக்கு சிறிதளவு கருப்பு உளுந்தை பொட்டலமாகக் கட்டி தலையணையின் கீழ் வைத்துப்படுக்கவும். மறுநாள் காலை அதை பத்திரப்படுத்தவும். இவ்வாறு 18 வாரங்கள் செய்து 19-வது வாரம் அதை ஓடும் நீரில் போடவும். பின்பு ஞாயிறு மாலை ராகு காலத்தில் அர்ச்சனை செய்து பலன் பெறலாம். பல நிறமுள்ள ஆடைகளை பிறருக்கு வழங்குவது மிகச் சிறந்த ராகு தோஷ பரிகாரமாகும் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

No comments:

Post a Comment