Saturday, May 23, 2020

மரண பயம் நீங்க மற்றும் மரண கண்டம் தவிர்க்க ஆலய பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது,மரண கண்டம் நீங்க வணங்க வேண்டிய திருத்தலம் பற்றியதாகும். ஒரு மனிதனின் ஜாதகத்தில் ஏழரை சனி வருகின்ற காலம், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி வருகின்ற காலங்களில் கண்டங்களும் வரும்.

சர்ப்ப தசை எனப்படும், ராகு, கேது தசைகளில் 6,8,12-ல் தசை நடக்கும் காலங்களிலே, 8-ஆவது வீட்டில் நச்சுக் கிரகங்கள் இருந்து அது தசை நடத்தும் நேரங்களிலே மரண கண்டங்களை சந்திக்கிறான்.

இந்த அபாய கண்டங்களில் இருந்து தப்பிக்க, தவிர்க்க நாம் வழிபட வேண்டிய திருத்தலம்

"திருநீலக்குடி" கும்பகோணம் காரைக்கால் செல்லும் வழியில் இத்தலம் உள்ளது. இறைவன் திருநீலகண்டர், காமதேனுபுரீஸ்வரர் எனும் பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.

ஞானசம்பந்தபெருமான் இத்தலத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவருக்கு இறைவன் திருமண கோலத்தைக் காட்டுகின்றார்.

மரண கண்டம் உடையவர்கள் இத்தல இறைவனை வழிபட்டபின் எருமை, நீலப்பட்டுத்துணி, எள் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். அதனால் எம பயம், மரண பயம் நீங்கும். ராகு, தோஷம் உடையவர்கள் உளுந்து, நீல வஸ்திரம் வெள்ளி விநாயகர், வெள்ளிப் பாத்திரம் முதலானவற்றை இத்தலத்திலே தானம் செய்தால் ராகு தோஷம் நிவர்த்தியாகும்

மகிழ்ச்சியான நேரத்தில் மனிதன் இறைவனை மறந்து விடுகிறான்.

தனியே விடும்பொழுதுதான் இறைமை நினைக்கின்றான். மரணபயம் வரும்போதுதான் பரிகாரங்கள் செய்ய முயற்சிக்கின்றான்.

அத்தகைய வேண்டுதல்களை நிறைவேற்ற இப்பரிகாரத்தலங்களுக்கு சென்று பயன் பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment