இன்று நாம் காணவிருப்பது சுக்கிரனுக்குரிய தாந்த்ரீகப் பரிகாரங்களாகும்.
சுக்கிரன் மூலிகையான கருஊமத்தை வேரை தாயத்தாக அணியவும். நன்கு தீபதூபம் காட்டினால் சுக்கிர தசை முழுவதும் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம், வீடு, நல்ல துணை அமையும்.
சுக்கிரன் எந்த நிலையிலிருந்தாலும் நல்ல பலனைத் தருவார். 64 கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும்.
நவகோள்களில் சுக்கிரன் பாகமான கிழக்குப் பகுதியில் ஒரு தாம்பாளத்தில் மொச்சைப் பயிரை பரப்பி, அதன் மீது எண்ணெய் ஊற்றிய 20 அகல்விளக்குகளை ஏற்றி 20 முறை வலம் வரவும். தீபதூபம் காண்பித்து, கற்பூர ஆரத்தி செய்து சுக்கிர பகவானை மனதார வேண்டிக் கொள்ளும் பொழுதும் அதை 20 வெள்ளிக்கிழமை சுக்கிர தசையிலே செய்து வரும்பொழுது தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறும். சுக்கரதசை 20 வருடமும் வெற்றி தரும்.
வீடு கட்டுவது, திருமணம் போன்ற விசேஷங்கள் நடக்கும். அத்தி மரத்தின் வடக்கு போகும் வேரை வெள்ளியன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சுக்கிர ஹோரை ஓடிக்கொண்டிருக்கும் நல்ல நேரத்திலே பூஜை செய்து காப்புக்கட்டி முறைப்படி எடுத்து வந்து பூஜையில் வைக்கவும். இந்த வேரை ஒரு வெள்ளி தாயத்திலே அடைத்து கழுத்திலே அணிந்து கொள்ளவும்.
இது சுக்கிர தசை முழுவதும் வெற்றி தரும்.
சுபகாரியங்கள் நடக்கும். தனப்ராப்தி கிட்டும். வாகனம், வீடு அமையும்.
வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக மொச்சைக்கொட்டையை வேக வைத்து, சுக்கிர பகவானின் பாதங்களில் வைத்து 20 முறை நவக்கிரகங்களை வலம் வந்து, அர்ச்சனை செய்து தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், சினிமா, நாடகம், இலக்கியம் ஆகியவற்றில் அபிவிருத்தி கிடைக்கும்.
மொச்சையை பரப்பி, அதன் மேல் வெண்தாமரையை வைத்து சுக்கிரன் 108 நாமாவளியை படிக்கவும். ஒவ்வொரு வாரம் 6-7 மணியில் பூஜை செய்யலாம்.
இதனால் லஷ்மி கடாட்சம், தன்னிலை உயர்வு, ஆடை ஆபரணம் சேர்க்கை , வீடு கட்டுதல், நினைத்த காரியம் நடக்கும், தோஷம் விலகும், பெண் தெய்வத்தின் அருளாசி கிடைக்கும், தெய்வ ஆகார்ஷணம் ஏற்படும்.
வெள்ளி இரவு 9 வெற்றிலை, 9 பாக்கு இவற்றுடன் மொச்சை கடலையை பொட்டலமாக்கி 20 வெள்ளிக்கிழமைகள் தலையணையின் அடியில் வைத்துப்படுக்கவும். 21-ஆவது வெள்ளிக்கிழமை அக்கிரக ஹோரையான 6- லிருந்து 7-மணிவரை ஓடும் நீர்நிலையில் அப்பொட்டலத்தை போட வேண்டும். இதன் மூலம் பல நற்பலன்களை பெறுவது உறுதி என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்
Please suggest people like us live in obroad.
ReplyDelete