அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, அறியாமையினால் செய்த பாவம் நீங்கிட மேற்கொள்ளும் பரிகாரம் பற்றியதாகும்.
தவறு செய்யாத மனிதர்களே இவ்வுலகில் எவரும் இல்லை . அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்கள் தவறு இழைத்து விடுகிறார்கள். அதனால் ஏற்படும் தோஷத்தினால் வருந்துவதைவிட, அதை பற்றிய எண்ணமே அவர்களுக்கு பெருந்துயரத்தை உண்டாக்கி வருகிறது.
அறியாமையினால் செய்யும் தவறுகளினால் ஏற்படும் தோஷங்களை போக்கும் பெருமாளின் அருள் பற்றிதான், இன்று நாம் காணவிருக்கிறோம். அப்பெருமைகள் வாய்ந்த பெருமாள் திருமலைவையாவூரில் அருள்கின்றார். திருவோணம் நட்சத்திரம் நாளிலே தீபம் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யலாம். மனிதன் ஏன் இந்த பாவங்களைச் செய்கின்றான் என்றால் அவனுடைய ஜாதகத்திலே ஒன்பதாவது இடம் அவன் ஆசையை பூர்த்தி செய்கின்ற இடம். அந்த இடத்திலே இருக்கின்ற நச்சுக்கிரகங்களின் ஆலோசனையின்படி அவன் சில தவறுகளை செய்து விட்டு மனசாட்சியினால் சவுக்கடி பெறுகின்றான், அந்தச் சூழ்நிலையிலே அவனுக்கு தாழ்வுமனப்பான்மை உண்டாகி காலம் முழுவதும் அவன் வருத்தத்தையே எப்பொழுதும் எண்ணி உழன்று சுழன்று அவன் கீழ்நோக்கிச் செல்ல அதனால் அவன் வாழ்க்கையிலே துன்பங்களும், துயரங்களும் படையெடுக்கின்றன.
அப்பொழுது அவன் தனக்கு ஏதாவது விடுதலை வராதா? எதாவது வாய்ப்புகளின் மூலம் நாம் வாழ்க்கையிலே முன்னுக்கு வரமாட்டேன்? 'எதைத் தின்றால் பித்தம் தீரும்' என்று அவன் சித்தம் கலங்கும் பொழுது, அவனை நோக்கி வருகின்ற அருமையான ஒரு வரப்பிரசாதம் போன்ற பகுதிதான் இந்தப்பரிகாரம்.
இக்கோயிலின் தல வரலாறு பற்றியும் சற்று சுருக்கமாகக் காண்போம். ஒருமுறை இந்தப்பெருமாளின் மீது அதீத பக்தி கொண்டிருந்தார் ஒருவர். அந்த ஒருவர்தான் இந்த நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர். அவர் ஒருமுறை இந்த மலையின் உச்சிக்குச் சென்று பெருமாளுக்கு நான் இங்கு ஸ்தலம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.
அப்பொழுது அவருக்கு பிரசன்ன வெங்கடேசர் (பிரசன்னம் என்றால் காட்சி தருதல் என்று அர்த்தம்) இந்த மன்னனுக்கு இங்கு பெருமாள் காட்சியளித்தார். அந்த நாள்தான் திருவோணம், திருவோண நட்ச்சத்திரத்திலே இக்கோயிலிலே குன்றின் மீது ஒவ்வொரு மாதமும் திருவோண நட்ச்சத்திரத்திலே ஓண தீபம் ஏற்றுகின்றனர். ஓண தீபம் ஏற்றுவதற்கும் ஒரு முக்கிய நிகழ்வு சான்றாகக் கூறப்படுகின்றது அதாகப்பட்டது, சிவாலயத்திலே வசித்த ஒரு எலி தற்செயலாக அணைய இருந்த ஒரு விளக்கின் மீது தாவியது. அதன் மூலம் அணைய இருந்த விளக்கின் திரி தூண்டப்பட விளக்கு பிரகாசமாக எரிந்தது.
இந்த புண்ணிய செயலால் அவ்வொலி
"மகாபலி" மன்னனாகப் பிறந்தது. அது திருவோண நட்ச்சத்திரத்தில் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டது. இந்த நாளே திருவோண நாளாக இங்கு கொண்டாடப்படுகிறது.
இந்தக் கோவிலில் மாதந்தோறும், திருவோணத்தன்று அகண்ட தீபம் ஏற்றி சுவாமியை பூஜை செய்கின்றனர்.
அப்படிப்பட்ட இத்தலத்திற்கு சென்று தாங்கள் நிம்மதியை பெற வேண்டும்.
தங்களுடைய பாவம் மறைய வேண்டும் என்று ஆவல் கொள்ளும் அன்பர்கள் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் 70 கிலோ மீட்டர் தொலைவில்
"படாளம்" கூட் ரோடிலிருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
மேலும், செங்கல்பட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலே இக்கோயில் இருக்கிறது. இதற்கு மேல்,
"திருமலை வையாவூர், திருமலைவையாவூர்" என்று அழைக்கப்படுகின்ற பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் தான் அன்பர்கள் வணங்கவேண்டிய கோயில் அங்கு சென்று மனதார வணங்க வேண்டிய கோயில் அங்கு சென்று அன்பர்கள் பெருமாளின் அருளாசியைப் பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.
No comments:
Post a Comment