Wednesday, May 27, 2020

சர்ப சாந்தி பூஜை செய்ய பரிகாரம்

சந்திரன் ராகு மற்றும் சூரியன்  ராகு இந்த அமைப்பை பெற்றவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்.

அன்பர்களே. இன்று நாம் காணவிருப்பது, நன்றாக இருந்த ஒரு மனிதனின் வாழ்க்கையிலே, அவன் பாதிப்படைகின்ற நிலைக்கு அவன் உள்ளாகும்போது, அவன் ஜாதகத்தை பார்க்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு அவன் ஜாதகத்திலே சந்திரன் ராகுவோடு சேர்ந்திருந்தால் அல்லது சூரியன், ராகுவோடு சேர்ந்திருந்தாலோ 2,8 அல்லது 1,7,5,11 என்ற அமைப்பிலே ஜாதகத்திம் இருந்தால், அது நாக தோஷம் இருந்தாலும், ராகு தசையாக இருந்தாலும், ராகு புத்தியாக இருந்தாலும் இவருடைய கட்டுப்பாட்டில் வரும்.

குழந்தைகளின் இளம் பருவத்திலே ராகு தசை வருகின்றது என்றால், பிறப்பு நட்சத்திரம் திருவாதிரை,சுவாதி, சதயம் அமைப்பிலே பிறந்தவர்களுக்கு ராகு தசை நடப்பிலே வருகின்றது.படிக்கின்ற காலங்களில் ராகு தசை வரக்கூடாது.

அப்படி வந்தால் அதற்கான பரிகாரம் தான் இங்கு விளக்கத்துடன் தர இருக்கின்றோம்.

ராகு தசை வந்தால் முதலிலே, நாம் பாம்புகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரண்டாவது நீர்நிலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக மாலை 6லிருந்து காலை 6 மணி வரை "இரவு" நேரம் என்று சொல்லப்படும் நேரத்திலே நீண்ட பயணங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். விஷப் பூச்சிகளுக்கு அதிகாரியாக ராகு இருப்பதால், நாம் சாப்பிடும் பொழுது தேள், கரப்பான், பூரான், பல்லி போன்றவைகள் நாம் உண்ணும் உணவில் கலப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது.

மேலும் விதவை, கணவனை விட்டு பிரிந்தவர்கள் போன்றவர்களின் உறவை அறவே ஒழிக்க வேண்டும். ராகு பெருமான் போதை வஸ்துக்கு அடி பணிவது, அப்பழக்கத்திற்கு அவர் ஆசை காட்டுவதால், இந்தக் காலகட்டத்திலே கெட்டப் பழக்கங்கள், கெட்ட மனிதர்கள், தொழில் விருத்தி, திருமண நிகழ்ச்சிகளை தகுந்த ஜோதிடரிம் காட்டி அதனுடைய நிலையைப் பெற்று நீங்கள் இந்தக் காலகட்டத்திலே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொதுவாக, ராகு பழுதுபடும் பொழுது, நமக்கு ஆலோசனை எப்படி வருமென்றால்,

"திருநாகேஸ்வரம்" செல்ல வேண்டுமென்று வரும். இதுவும் கும்பகோணத்தின் அருகாமையிலே இருக்கின்றது. சென்னைவாசிகள் குன்றத்தூர் "ஸ்ரீ நாகேஸ்வரர்"

ஆலயத்திற்குச் சென்றால்,

"திருநாகேஸ்வரத்தில்" சென்ற பலனை நாம் இங்கே அடையலாம் என்று நம் முன்னோர்கள் உரைத்துள்ளார்.

குன்றத்தூர் "ஸ்ரீ நாகேஸ்வரர்"

ஆலயத்திற்கு ஒரு ஞாயிரன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை என்ற மணியளவில் அவரை நாம் வணங்கி வர, நம் ஜாதகத்தில் ராகுவால் ஏற்படும் தீமைகள் கட்டுக்குள் வரும், அதிகபட்சமாக நம்மைத் தாக்காது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இது ஒரு அற்புதமான பரிகாரமாகும்.

இப்படிப்பட்ட நிலையில் ஒருவர் பாதிக்கப்படும் பொழுது, அவரது ஜாதகத்தை ஆராயும் போது, ஒரு காட்சித் தெளிவு வரும். அதாவது, ஒரு மனிதன் ராகு தசையிலே இருக்கும்பொழுது நல்ல இடங்களில் இருந்தால் அந்த ராகு தசையிலே அவன் பாவ நிலையை எட்டுகின்றான். அவனுக்கு சிறிதும் பொருத்தமில்லாத நிலையில் தசை நடக்கும்பொழுது இந்த பாம்பு கிரகம், மாயாகிரகம், சாயா கிரகம் என்ற காலகட்டத்திலே, அவன் தடுமாறுகின்றான் என்பதைக் கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment