அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, ஒருவரது ஜனன ஜாதகத்தை சற்று ஆராயும் பொழுது லக்கனத்திலிருந்து எண்ணிவர 7-வது இடம் திருமணம் அடையாளத்தைக் காட்டுகிறது
திருமணம் என்பது மனித வாழ்க்கையிலே இன்பத்தை தருவிக்கின்ற மங்களகரமான காரியமாக கருதப்படுகிறது
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமண வயதை எட்டியவுடன் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டுமென்று ஆசைப்படாதவர்களே இருக்க முடியாது.
மேலும், திருமணம் என்பது அவரவர்க்கு நினைத்தபடி நடந்து விடுகின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இதற்கு ஜோதிடம் ஒரு காரணமா என்று பார்த்தால், நிச்சயமாக ஒரு காரணமாகத்தான் உள்ளது. சென்ற பிறவியிலே நாம் செய்த அனைத்து விதமான பாவ புண்ணியங்களையும் இந்தப்பிறவியில் அனுபவிக்கின்ற காரணத்திற்காகவே நாம் இந்தப் பூமியில் பிறந்திருக்கிறோம்
நமது ஜாதகத்தை எடுத்து பார்க்கும்பொழுது 7ஆம் ஆதி எனப்படுகின்ற 7வது ஸ்தானத்துக்குரிய கிரகம் பாதிக்கப்பட்டிருந்தாலும், பொதுவாக "களஸ்திரகாரகன்"என்று சொல்லப்படுகின்ற சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது ராகு கேதுவிற்கு இடையிலே அனைத்து கிரகங்களும் இருந்தால், அல்லது தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு திருமணம் விரைவாக செய்ய இயலாது.
அந்தச் சூழ்நிலையிலே அவர்கள் நிச்சயமாக பரிகாரத்தைத் தேடிச் செல்வார்கள் எந்தப்பரிகாரம் செய்தால் எங்கள் திருமணம் விரைவாக நடைபெறும் என்று கேட்பவர்களுக்கு ஒரு நற்செய்தியாக வருவதுதான் இன்றைய பகுதி, திவ்ய தேசங்களில் ஒன்று
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில்" பெருமாள் தனது இடது லஷ்மிதேவியை கொண்டிருந்தார். அது திருஇடைந்தை என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி திருவிடந்தை என்று அழைக்கப்படலாயிற்று.
முன்பொரு காலத்திலே "குழி" என்ற முனிவரும், அவருடைய மகளும் சொர்க்கம் செல்ல வேண்டி தவமிருக்க, குழி முனிவர் மட்டும் சொர்க்கம் செல்ல நேர்ந்தது. மகள் சொர்க்கம் செல்லும்பொழுது அங்கு வந்த நாரதர் நீ மணமாகாதவள் என்று கூறினார்.
மற்ற முனிவர்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர்.
"காலவ ரிஷி முனிவர் அப்பெண்ணை மனம் புரிந்தார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தனர்.
பெண்களுக்கு உரிய வயது வந்ததும் அவர்களை மனம் புரிந்துகொள்ளுமாறு பெருமாளிடம் கடுந்தவம் மேற்கொண்டார்
"காலவ ரிஷி' ஒருநாள் பெருமாள் தெய்வீகத்தன்மையுடன் பிரம்மச்சாரியாக வந்து ரிஷியின் வேண்டுகோளை ஏற்று தினமும் ஒரு பெண்ணை மணந்து கொண்டு இறுதி தினத்தன்று 360 நாளிலே அனைவரையும் ஒருவராக்கி தனது இடது பாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்தார். அதனால்தான் இப்பெருமாள்
"நித்திய கல்யாண பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார்.
இந்தக் கோயில்தான் "நித்ய திருவிடந்தை" என்று அழைக்கப்படுகிறது
திருமணத்தடையுள்ள ஆண்கள், பெண்கள் இவ்வாலயம் வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொடுக்க வேண்டும். சுவாமி அர்ச்சனை செய்து முடிந்ததும் கொடுக்கும் மாலையை கழுத்தில் போட்டு 9 முறை ஆலயத்தை வலம் வந்து விழுந்து வழிபட வேண்டும். பின்பு, அம்மாலையுடன் நேராக வீட்டிற்கு வந்தவுடன் அம்மாலையை பூஜையறையில் வைத்து விட வேண்டும்.
திருமணம் முடிந்ததும் தம்பதி சகிதமாக அம்மாலையை அதற்குரிய மடத்திலே சேர்த்துவிட வேண்டும்.
ராகு-கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் இத்தலம் உள்ளது. திருமணத்தாமதம் உள்ளவர்கள் ஒருமுறை இவ்வாலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும். இவ்வாலயத்தின் இருப்பிடம் சென்னையிலிருந்து மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி செல்லும் சாலையில் 42கி.மீ தொலைவிலே கோவளத்தில் அமைந்துள்ளது. இங்கு சென்று இறைவனை வணங்கி நீங்களனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்
No comments:
Post a Comment