அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, சனி கிரகம் எவ்வாறு திருமணத்தை தடைபடுத்துகின்றது என்பது பற்றியதாகும்.
ஒருவரின் ஜாதகத்திலே சனி 7வது இடத்தில் அதாவது மேஷத்திலே நீச்சம் பெற்றால் அவர்களுடைய திருமண வாழ்க்கை மோசமானதாக இருக்கும்.
அப்படிப்பட்ட தோஷத்தை முறியடிக்க 7-ஆம் ஆதி 6,8,12-ல் மறைந்தாலோ, அதுவும் சனியே இருந்து மறைகின்ற சூழ்நிலையிலே, அதற்கு பரிகாரம் செய்யும்பொழுது, நிச்சயம் அதற்கு விமோசனம் கிடைக்கும்.
சனி, சூரியன் சேர்ந்திருந்தால், கேது- ராகுவோடு அல்லது செவ்வாய் சேர்ந்திருந்தாலோ அந்த திருமண வாழ்க்கை தாமதப்படும், பல சோகங்கள் வரும்.
இச்சூழ்நிலையிலே சனி கிரகத்தின் அதி தேவதையாக இருப்பவர் பைரவர். மேலும் சனி பகவானின் குருநாதர் பைரவர் வர்.
அஷ்டமியிலே பைரவர் வழிபாடு செய்வது, சனி கிரகத்தால் ஏற்படும் சகல தோஷங்களுக்கும் பரிகாரமாக இருக்கும்.
சனிக்கிழமைகளிலே சனிபகவானுக்கு அபிஷேக, ஆராதனை செய்து அர்ச்சிப்பதால் சனி கிரக தோஷம் விலகும். மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னவஸ்திரம் தானம் தருவதால் சனி கிரக பிரீதி பெறலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு அன்ன வஸ்திரம் தானம் செய்து சனி பகவான் அருளைப்பெறலாம். காகத்திற்கு தினமும் எள் சாதம் வைப்பதால் சனி கிரக பிரீதி உண்டாகும். ஏழைக்கன்னிப்பெண்களுக்கு திருமண உதவிகள் செய்து சனிகிரக பிரீதி யைப் பெறலாம்.
ஏழை எளியோர்க்கு உதவ சனிபகவான் மகிழ்வார். நம் வாழ்க்கையிலும் மனமகிழ்ச்சியை உண்டாக்குவார்.
ஒவ்வொரு கிரகமும் 7-வது இடத்திலே வரும்பொழுது, அதுதான் நம் எதிர்கால துணையை காட்டுகின்றது.அப்படிப்பட்ட சூழ்நிலையிலே சனி கிரகம் நமக்கு பாதகமாக இருந்தால் மேற்கூறிய பரிகாரங்களில் அனைத்தையோ அல்லது ஏதேனும் ஒன்றையோ செய்யும்பொழுது சனியின் கருணை உங்களுக்கு ஏற்படும்.
இறைவனின் கருணை இல்லாது திருமண வாழ்க்கை கிடையாது. ஒரு மனிதனுக்கு மிகமிக முக்கியமானது ஆயுள்,திருமணத்திற்கு பிறகு அவன் இருக்க வேண்டுமென்றால் சிறக்க வேண்டுமென்றால் இறைகருணை அவசியம்.லக்னத்திலிருந்து எண்ணிவர 7
-வது இடத்தில் சனியோடு சில நச்சுகிரகங்கள்,பகை கிரகங்களின் பார்வை இருக்கும் பொழுது இயற்கையாகவே அவர்களின் திருமணம் தாமதப்பட்டு, நடைபெற இயலாத சூழ்நிலைக்கு உள்ளாகின்றது. ஆகவே மேற்கூறிய பரிகாரங்களை செய்து நிவர்த்தி பெறுமாறு கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.
No comments:
Post a Comment