Wednesday, May 20, 2020

விரோதி தொல்லை கட்டுப்படுத்தக்கூடிய தெய்வீக பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, விரோதி தொல்லைகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான பரிகாரங்கள் பற்றியதாகும்.

ஒருவரது ஜனன ஜாதகத்தை எடுத்து அவரது 6- வது இடத்தை ஆராயும்பொழுது அந்த இடமானது ரணம், ருணம், சத்ரு என்றழைக்கப்படுகின்றது. ரணம் என்றால் நமக்கு அமையும் விரோதிகள். ஒருவருக்கு ஆறாவது தசை அல்லது ஆறாவது புத்தி கோச்சார சூழ்நிலையிலே முக்கியமான கிரகங்கள் ஆட்சி செலுத்துகின்றன, அந்தக் கால கட்டத்திலே மனிதனுக்கு விரோதம் வளர்ந்து விடுகின்றது. அவன் தொட்ட காரியங்களெல்லாம் பகையிலே முடிகின்றது.

இது ஏன் நடக்கின்றது என்றால் அனைத்தும் கிரகங்களின் கட்டளையே தவிர வேறொன்றும் இல்லை.

அதனால்தான் நாம் ஜாதகத்தை பார்க்கும்பொழுது அது நமக்கு சாதகமாக இருக்கின்றதா? பாதகமாக இருக்கிறதா?

என்பதை நாம் கவனிக்கின்றோம்.

இது நமக்கு நல்ல நேரமா, கெட்ட நேரமா என்று நிர்ணயம் செய்வதே இந்த ஜாதகங்கள்தான். அப்படிப்பட்ட நிலையிலுள்ளவர்கள் அருள் மிகு ஸ்ரீ மஹா பிரித்யங்கிரா தேவியை வணங்க வேண்டும். ஸ்ரீ பிரித்யங்கிரா தேவியானவர், ஸ்ரீ சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர்.

இவருடைய ஆலயம் எங்கேயிருக்கின்றது என்றால் "அய்யாவாடி" என்று அழைக்கப்படுகின்ற "பாண்டவர்கள்

சரணடைந்த ஐவர்பாடி(ஐவரும் பாடியதால் ஐவர்பாடி) என்ற ஊரில் இருக்கிறது.

பின்னர் இப்பெயர் மருவி "அய்யாவாடி"

என்று அழைக்கப்பட்டது. இங்கே எட்டு சுடுகாடுகளின் நடுவே "ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி" இருக்கின்றார். ஒருமுறை ராவணன் மைந்தனான "இந்திரஜித்" ஸ்ரீ ராமனைத் தோற்கடிக்க இவ்விடத்திற்கு வந்து பூஜை செய்யும் பொழுது, பிரத்யங்கிரா தேவி தேவி பிரசன்னமாகி அந்த பூஜையை ஆஞ்சநேயர் மூலம் கலைத்து ராமபிரானுக்கு உதவி புரிந்தார்.

பூஜையை "இந்திரஜித்" வெற்றிகரமாக முடித்திருந்தால் நிச்சயமாக ராமனை வெற்றி கொண்டிருப்பான்.

அமாவாசை தினத்தன்று தன் விரோதிகளை நினைத்து "மிளகாய் ஹோமம்" என்ற வசீகரமான ஹோமம் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. இந்த இடத்திற்கு வந்து குறிப்பாக அமாவாசை தினத்தன்று காலை 10 மணியிலிருந்து 1 மணிவரை நடைபெறும் "நிகும்பளா யாகப் பூஜையிலே" மிளகாய் வற்றல் கொடுத்து வழிபட "தோஷம், பில்லி,ஏவல், சூனியம், வைப்பு, பணம், ரோகம், மிருத்யுக பயம், சத்ரு தொல்லை போன்ற 64 வித சாபங்கள் நிவர்த்தியாகும் என்றால், நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவியின் மகிமை.

இத்திருத்தலம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்காக 8 கி.மீ தொலைவிலே

"அய்யாவாடி", "பிரத்யங்கிரா தேவியின்" ஆலயம் இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டு நீங்கள் நன்மை பல அடையவேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

No comments:

Post a Comment