Sunday, May 17, 2020

விரைவான திருமணம் நடைபெற ஆன்மீக பரிகாரம்.

விரைவான திருமணம் நடைபெற நாம் மேற்கொள்ளும் பரிகாரங்கள் பற்றியதாகும்.

மனித வாழ்க்கையிலே மூன்று முக்கியமான நிகழ்ச்சிகள் என்னவென்றால் பிறப்பு, திருமணம், இறப்பு என்று கூறுகின்றார்கள். மனித வாழ்க்கையிலே தித்திப்பான ஒரு பகுதி நல்லதொரு திருமணத்தை நடத்துகின்ற அந்த காலம்தான்.

மங்களகரமான அந்த திருமண ஓசை பெற்றோர்களை ஆனந்தத்திலே ஆழ்த்தி விடும். இன்பத்தை அந்த குடும்பத்தில் புகுத்திவிடும்.

பொதுவாக "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" எனக் கேட்டிருக்கிறோம், ஆனால் இன்றைய திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. என்றாலும்கூட ஜோதிட அடிப்படையிலேதான் ஒருவருக்கு விரைவாகவும், மற்றவர்களுக்கு தாமதமாகவும் நடக்க நிச்சயமாக அவர்கள்

காரணம் அல்ல, அவரை ஆட்டிப்படைக்கின்ற அந்த கிரகங்களே முக்கிய காரணம்,

ஒரு மனிதன் ஜாதகத்தை நாம் எடுத்துக்கொண்டால், 7வது இடமே கலஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது

அந்த 7வது இடத்திலே நச்சுக்கிரகங்கள் இருந்தால், அந்த நச்சுக்கிரகங்கள் ஒரு சில நேரத்திலே அவர்களின் திருமணத்தை தாமதப்படுத்தி விடும். ஒரு மனிதனின் திருமணத்தைத் தாமதப்படுத்துவதில் எந்த விதமான சாபங்களையும், தோஷங்களையும் அவன் பெறுகின்றான் என்பதை அவனின் ஜாதகத்தைப் பார்த்தால் மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும்.

அந்தத் திருமணம் ஏன் தாமதப்படுகின்றது என்றால் காரணம் இல்லாமல் காரியமில்லை ஒருவருக்கு தாமதமான திருமண காரணம் இருக்கிறது அதற்கான விடையும் இருக்கிறது.அதற்கான கோணம் இருக்கின்றது, அதற்கான அமைப்பும் இருக்கிறது, இவையனைத்தும் அந்த ஜாதகத்தை விசாரிக்கும் பொழுதுதான் நமக்கு தெரியும்.

ஆகையால், ஒரு மனிதன் தன் ஜாதகத்தை எடுத்து விசாரிக்கின்ற அந்தக் காலகட்டத்திலே, 7 வது இடம் லக்கனத்திலிருந்து எண்ணிவர அந்த 7வது இடத்திலே சூரியன் இருந்தாலோ அல்லது இயற்கையிலேயே பாவிகளாக வருணிக்கப்படுகின்ற செவ்வாய், சனி ராகு கேது போன்ற நச்சுகிரகங்கள் தேய்பிறை சந்திரன், சில நேரங்களிலே சுக்கிரனுடைய நீச்சம், அதாவது அனைவருக்கும் திருமணத்தை அமைக்கின்ற சுக்கிரன் பழுதுபடும்பொழுது, பாதிக்கப்படுகின்ற பொழுது, நீச்சம் அடையும் பொழுது, பலவீனம் அடையும்பொழுது மற்ற கிரகங்களோடு சேரும் பொழுது அங்கே திருமணத்தாமதத்தை உண்டு பண்ணி விடுகிறேன்

சரி அதற்கான பரிகாரம் என்ன?

பாதிக்கப்பட்ட ஆண்கள் செவ்வாயன்று திருமண தாமதத்தை உண்டு பண்ணி விடுகிறேன்

சரி அதற்கான பரிகாரம் என்ன?

பாதிக்கப்பட்ட ஆண்கள் செவ்வாயன்று அவர்களுக்குப் பிடித்தமான முருகன் ஆலயங்களிலே, மாலை வேளைகளில் நெய் தீபம் ஏற்றி வரும்பொழுது முருகப்பெருமானின் அருட் கடாட்ச்சத்தால் அந்தத் திருமணம் விரைவாக நடைபெறும்.

பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் நெய்விளக்கேற்றி வணங்கி வரும்பொழுது நிச்சயமாக தடைபட்ட, தாமதப்பட்ட திருமண அமைப்பு நல்லமுறையில் அவர்கள் வந்தடையும் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்

No comments:

Post a Comment