Wednesday, May 13, 2020

செவ்வாய் தோஷத்தை நீக்க செய்யவேண்டிய தாந்த்ரீக பரிகாரம்.

செவ்வாய்க்குரிய தாந்த்ரீகப் பரிகாரங்கள் இன்று காணவிருக்கிறோம்

செவ்வாய் பகவான் மூலிகையான சிவனார் வேம்பு முறைப்படி பூஜை செய்து காப்புக்கட்டி எடுத்து, தாயத்தாக அணிந்து கொள்ள அதிகாரப் பதவி கிட்டும். உடல் நலம் தேறும், எதிரிகள் சரணடைவார்கள், உறவுகள் மேம்படும், சகோதரர்கள் நலம் தருவார்கள்.

நவ கோள்களில் செவ்வாய் பாகமான தெற்குப் பகுதிகளில் 7 அகல் விளக்குகளை போட்டு, கிழக்கு முகமாக வைத்து திரி ஏற்றி, துவரை பரப்பிய தாம்பாளத்தில் அந்த 7 அகல் விளக்குகளையும் ஏற்றி வைத்து கற்பூரம் காட்டி மனதார வேண்டி செவ்வாய் தோஷம் விலகும். சகோதர எதிர்ப்பு விலகும்.

ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பலமுடன் இருந்தாலும் செவ்வாய் தோஷம் விலகும்.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை செவ்வாய் ஹோரை ஓடிக்கொண்டிருக்கும். அந்நேரத்தில் அகல் விளக்கில் தீபம் வைத்து, செண்பகமலரை வைத்து செவ்வாய் பகவான் 108 நாமா வழியை பாராயணம் செய்து வழிபட ஏராளமான நன்மைகள் கிட்டும்.

செவ்வாய் பகவானுக்கு உகந்த துவரையை எடுத்து 9 வெற்றிலை பாக்கு மற்றும் 1 ரூபாய் நாணயங்களை எடுத்து, காகிதத்தில் ஒன்றாக போட்டு மடித்து தலையணையின் கீழ் வைத்து உறங்க வேண்டும். இதுபோன்று 7 செவ்வாய் வரை உறங்கவும், 8 -ஆவது செவ்வாய் காலை, செவ்வாய் ஹோரை ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, நதியிலே போடவும் அல்லது செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும். இதன் மூலம் செவ்வாய் தோஷம் விலகும். உறவுகள் மேம்படும், தொழில் அபிவிருத்தி ஏற்படும். தலைமைப் பதவி கிட்டும், எதிரி தாக்குதல் விலகும், மன அமைதி கிடைக்கும். கோபம் விலகும், சுப காரியங்கள் நடக்கும்.

செவ்வாய் பகவான் கசப்பு சுவை கொண்டவர். எனவே அவரை கசப்பு சமித்துகள் சகிதம் செவ்வாயன்று வேள்வியை மேற்கொண்டு, அக்னியில் போடவும். அதனால் சத்ருகள் அழிவர், எதிர்ப்புகள் மறையும், வெற்றி கிட்டும், உயர்ந்த பலன் கிடைக்கும். ஹோமத்தில் சிவப்பு நிற வஸ்திரத்தை போட்டால் இராஜபதவி கிடைக்கும். கருங்காலி சமித்தால் நெய்யை தொட்டு ஹோமம் செய்ய செவ்வாய் வளம் கிட்டும்.

செவ்வாய் பகவான் யார் ஜாதகத்தில் பலம் பொருந்தி இருக்கிறாரோ, அவரின் வழிபாடு இந்த தோஷத்தைக் குறைக்கும்.

கோயில் விழாக்களில் அன்னதானம் செய்யும் பொழுது விறகுகள் வாங்கித் தரலாம். ஹோம குண்டங்கள், சமித்துகள், மின்சார விளக்குகள் வாங்கித் தரலாம்.

இவையெல்லாம் செவ்வாய் பகவானுக்கு ப்ரீதி உண்டாக்கும். கொடுக்கும் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்

No comments:

Post a Comment