ஒருவருடைய ஜனன ஜாதகத்தை ஆராயும்பொழுது, அவருக்கு லக்கனத்திலிருந்து 2வது பாகமாக இருக்கின்ற தனஸ்தானம் பழுதடையக் கூடாது. தனத்துக்குரிய கிரகம் 6,8,12- ல் மறையக்கூடாது. அப்படிப்பட்டவர்களுக்கு தன விருத்தி, தன சேமிப்பு என்பது அவர்களின் வாழ்க்கையில் அரிதாக இருக்கும்.
ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே 2-வது இடத்திலே இருக்கும் கிரகம் பலமாக இருந்தால், எந்தவித பிரார்த்தனையும், எந்த வித சிரமமுமின்றி அவர் தனத்தை நல்ல முறையில் சேர்த்து செல்வந்தராக திகழ்வார். அப்படி இல்லாதவர்களுக்குத்தான் இந்த பரிகாரம் முழுமையாக பயன்படும்.
பரிகார தலம்
"தனம் தரும் தாடிக்கொம்பு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம்". இவரை வணங்கும் பொழுது, எந்த பிரச்சனையாக இருந்தாலும், நிவாரண தலமாக இந்த தலம் விளங்குகின்றது. இதுதான் இதனுடைய சிறப்பம்சம்.
ஆறு தேய்பிறை அஷ்டமிகளிலே இத்தலத்தில் உள்ள "சொர்ண ஆகர்ஷ்ண பைரவருக்கு" அபிஷேகம் செய்யும் பொழுது எப்படிப்பட்ட பொருளாதார பிரச்சினையும், உடனடியாகத் தீரும்.
கோயில் விபரம்
இத்தலம் "திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்" சாலையிலே 9 கி.மீ தொலைவிலே உள்ளது. ஆலய திறப்பு நேரம் காலை 7 மணிமுதல் 12 மணிவரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் ஆகும்.
No comments:
Post a Comment