Sunday, May 10, 2020
அம்மாவாசை பெரும் ரகசியம்.
ஒவ்வொரு அமாவாசை அன்றும் என்றும் நம்மிடம் ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது அது என்னவென்றால் அம்மாவாசை அன்று காரியத்தை தொடங்கினால், அந்தக் காரியத்தில் நான் முழுமையாக வெற்றி பெறுவோம் என்ற ஒரு மூடநம்பிக்கை நம்மிடம் பரவலாக இருக்கிறது இன்று பூரண அமாவாசை ஆகையால் நான் ஒரு சொத்து வாங்க போகிறேன் இன்று சர்வ அமாவாசை அதனால் கடை திறக்க போகிறேன் இன்று முழு அம்மாவாசை அதனால் கடன் கொடுக்கப் போகிறேன், இப்படி அமாவாசை தினத்தன்று செய்யப்படுகின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கி பயணிக்கிறது என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அது நம் முன்னோர்களுக்காக இறந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தினம் என்பதை மறந்து விடுகிறோம் அமாவாசை தினத்தன்று நாம் செய்யப்படுகின்ற முக்கியமான கடமை என்னவென்றால் திதி தவசம் தற்பணம் என்ற இறந்த ஆத்மாக்களை திருப்திபடுத்த செய்ய வேண்டிய காரியத்தை மட்டும் அன்றைய தினத்தில் நாம் செய்ய வேண்டும் தொழில் தொடங்குவது புதிய வீட்டிற்கு குடி புகுவது கடனை கொடுப்பதோ புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதோ போன்ற ஆக்கபூர்வமான காரியங்களை கண்டிப்பாக நாம் தவிர்க்க வேண்டும் ஏனென்றால் அது முழு இருட்டு நாள் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும் அம்மாவாசை தினம் அதிர்ஷ்டமான நாள் என்றார் ஏன் திருமணங்களை நடத்த வில்லை என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். மேலும் அமாவாசை நாட்களில் குதப காலம் நன்றி அழைக்கப்படுகின்ற அந்த நேரம் இறந்த முன்னோர்கள் வருகின்ற நேரம் ஆகும் அப்பொழுது அம்மாவாசை தினத்திலே கோலம் போடக்கூடாது அது அவர்களுடைய வருகையை தடுக்கும் நம் காரியத்தை கெடுக்கும் இனிமேல் அம்மாவாசையில் சுபகாரியங்களை தொடங்குவது செய்வது நிச்சியமாக லாபத்தை தராது சாபத்தை தரும் என்பதை மனதில் உள்வாங்க வேண்டும். இந்த ரகசியத்தை கடைபிடித்து வாழ்க்கையில் நீங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் வாழ்க வளமுடன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment