அன்பர்களே இன்று நாம் காணவிருப்பது, ஒருவருடைய அன்றாட வாழ்க்கையிலே தாயுடன் போராட்டம் நடத்துகின்ற அந்த ஜாதகருக்கு, அவருடைய ஜனன ஜாதகத்திலே பிரச்சினை எங்கிருந்து வந்தது அல்லது வருகின்றது என்று பார்த்தால் சந்திரன் பழுதுபட்டால் தாயாருடன் போராட்டம், வாக்குவாதம் வரும். இந்நிலையிலுள்ள ஜாதகரின், மனம் எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.
"மனோகாரகன்"என்று வர்ணிக்கப்படுகின்ற சந்திரன் ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே 6,8,12 - ல் இருந்தாலும், ராகு-கேது இவர்களால் பீடிக்கப்பட்டிருந்தாலும், சனியோடு கூடி
"புனர்பூ" தோஷத்தை ஏற்படுத்தினாலும், இவர் விருச்சிக ராசியிலிருந்து நீச்சம் அடைந்தாலும் மேலும் துஷ்ட கிரகங்கள், நச்சு கிரகங்களின் பார்வை பட்டாலும், இப்படிப்பட்டவர்களுக்கு மாமியாருடன் ஒத்துப்போகும் தன்மை திருப்திகரமாக இருக்காது. மனைவியுடன் அடிக்கடி போராடுவார்.
நம் உடலை கணக்கில் கொண்டால் சந்திரனுடைய ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டது. சீதளம் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள், சந்திரனால் பீடிக்கப்படுகின்றார்கள். சுவாசக் கருவி அவர்களுக்கு சரியாக இயங்கவில்லையென்றால், சைனஸ், டி.பி போன்ற அபாயகரமான நோய்கள் ஒரு ஜாதகரைத் தாக்கும்.
மனநிலை நன்றாக இருந்தால்தான் பண நிலை வரும் "ஹெல்த் இஸ் வெல்த்"
என்று கூறுவார்கள். அப்பொழுது பணத்திற்கும் மனத்திற்கும் சம்பந்தம் உண்டு. அவர்களுடைய ஜாதகத்தை நாம் கவனித்தோமென்றால் 6,8,12 -ல் தசை நடத்துகின்ற காலகட்டத்திலே எதைத் தொட்டாலும் நஷ்டம், கஷ்டம், போராட்டம்.
செய்வினை போன்ற சூழலிலே சிக்கித் தவிக்கின்ற ஜாதகர்களுக்கு சந்திரன் சனியுடனோ, சந்திரன் ராகுவுடனோ, கேதுவுடனோ கூடினால் இப்படிப்பட்ட அபாயகரமான விளைவை அவர்கள் அன்றாட வாழ்க்கையிலே சந்திப்பார்கள். அப்படிப்பட்டவர்கள், கும்பகோணத்தை அடுத்த திங்களூருக்கு திங்களன்று செல்ல முடியும், ஆனால் சென்னை வாசிகளுக்கு அதற்கான நேரமோ, வாய்ப்போ மிகக் குறைவு.
அவர்களுக்கு ஏற்றாற்போல வசதியாக
"சோமங்கலம்"போரூருக்கு சற்று அருகிலுள்ளது. அங்கு சென்று
"சோமநாதீஸ்வரர்" அதாவது சோம-நாத ஈஸ்வரர் இவருடைய ஆலயத்திற்கு ஒரு திங்களன்று சென்று விளக்கேற்றி உங்கள் பெயரிலே அர்ச்சனை செய்யும் பொழுது, பெரும் மாற்றங்களை நீங்கள் கண்கூடாகக் காண்பீர்கள்.
ஏனென்றால் சந்திரன் "தாய் காரகன்",
"மாதுர் காரகன்" என்று கூறுகின்றார்கள்.
"மனோகாரகன்" என்றும் கூறுகின்றார்கள். சந்திரன் தான் நம் உடல் பகுதியை ஆட்சி செய்கின்ற கிரகமாக இருக்கின்றார்.
அப்படிப்பட்ட அந்த சந்திர தோஷத்தை திங்களூருக்குச் சென்று பரிகார நிவர்த்தி செய்தால் எந்த அளவிற்கு பலன் கொடுக்குமோ, அதுபோன்றே சென்னை போரூருக்கு சற்று அருகிலுள்ள
"சோமங்கலம்" ,"சோமநாதீஸ்வரர்"
ஆலயத்திற்கு திங்களன்று சென்று செய்கின்ற பூஜைகளால் நீங்கள் பலன்கள் பல பெறுவீர்கள் என்றால் அதில் சிறிதும் ஐயமில்லை என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.
No comments:
Post a Comment