உங்களுக்காக
அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, நிலப்பிரச்சனை தீர வேண்டி நாம் மேற்கொள்ளும் பரிகாரம் பற்றியதாகும்.
ஒருவருடைய ஜாதகத்தில்,செவ்வாய் என்று சொல்லப்படும் நிலத்தைக் காட்டுகின்ற கிரகம், சுக்கிரன் என்று சொல்லப்படும் கட்டிடத்தை காட்டுகின்றது கிரகம் ஆகியவை பழுதுபட்டால் ஒருவருடைய நான்காவது வீடு என்று அழைக்கப்படுகின்ற லக்கனத்திலிருந்து எண்ணிவர நான்காவது வீடே அவர்களுக்கு அமைகின்ற சொந்த நிலம், சொந்த வீடு என்ற பகுதியை கிடைக்கிறது. அதுவும் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு பலன் தருகின்ற வகையில் ஏதேனும் ஒரு அருமையான பெருமையான பரிகாரம் இருக்கின்றதா என்றால் இருக்கின்றது என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.
"கையளவு நிலம் என்றாலும் சொந்த நிலம் வேண்டும்" என்பது அனைவருக்கும் உள்ள பொதுவான கனவு.
சிறுக சிறுக சேர்த்தாவது ஒரு இடத்தை வாங்கிவிடவேண்டுமென்பது, அதிலே ஒரு வீடு கட்டி அழகு பார்க்க வேண்டுமென்பதும் அனைவருடைய கனவாகவும் இருந்து வருகின்றது. அப்படி நாம் வாங்கும் இடத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தாலும், வந்த அப்பிரச்சினையிலிருந்து மீளவும் அருள் புரிகின்றார் "திருச்சியிலே"
இருக்கின்ற "பூமிநாதர்".
நில தரகு வேலை செய்பவர்கள் செல்ல வேண்டிய தலமும் இதுதான். இத்தலத்தின் வரலாறு பற்றி சுருக்கமாக காண்போம்.
ஒருமுறை ஒரு மகான் இத்தலத்திற்கு விஜயம் செய்தார். அவர் அந்நாட்டு மன்னனை சந்திக்க சென்ற வேளையில் அவர் மன்னனுடைய முகக்குறிப்பிலிருந்து மன்னனுடைய துயரத்தை அறிந்து,"மன்னா உனக்கு என்ன துயரம் நேர்ந்தது எனக் கேட்க, மன்னன் அதற்கு", "நான் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்பி வணங்க ஆசைப்படுகின்றேன்" என்று அந்த மன்னன் மகானிடம் கூறினார்.
அதன் படிதான், மன்னன்
"லிங்க பிரதிஷ்டை " செய்து வழிபட்டு.
சுவாமிக்கு "பூமிநாதன்" என்ற பெயரும் சூட்டினான்.
நிலத்திலே பிரச்சினையா? வீடு நிலம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் சிறப்பான பரிகார நிவர்த்தி பெற பூலோகநாதரை வழிபடுகின்றனர். வாஸ்து பரிகார பூஜையும் இங்கு செய்யப்படுகின்றது. வாஸ்து நாளன்று சுவாமிக்கு விசேஷ யாகம் நடக்கிறது.
இந்த யாகத்திலே ஆறு கலசங்களை வைத்து பூஜை செய்வார்கள். பின்பு அந்தத் தீர்த்தத்தை பூலோகநாதருக்கு மஹாபிஷேகம் செய்வார்கள்.
இவ்வேளையில் சுவாமிக்கு பூமியின் கீழே விளையும் தானியங்கள், கிழங்குவகைகளை படைத்து நைவேத்தியம் செய்கின்றனர்.
கட்டிடம் தொடர்பான பிரச்சினை உள்ளோர்கள் இதி கலந்து கொண்டால் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
இப்படிப்பட்ட ஸ்தலம் எங்கே இருக்கிறது, இதனுடைய இருப்பிடம் திருச்சி மார்கெட் பேருந்து நிறுத்தம் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் நடைதிறப்பு நேரம் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணிவரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 8 வரையிலும் திறந்திருக்கும், அன்பர்கள் அங்கு சென்று தங்களின் குறைகளை தீர்த்து நலம் பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.
No comments:
Post a Comment