Saturday, May 16, 2020

நரசிம்ம வழிபாடு மூன்றாவது பகுதி

தீராத நோய்களால் கஷ்டப்படுபவர்கள் பில்லி ஏவல் சூனியம் பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் நரசிம்மரை வணங்க அத்தனை விதமான துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுதலை  பெறுவார்கள்.
  நரசிம்மரை ஒரு சுவாதி நட்சத்திரம் அன்று வணங்க நம் பிரச்சனைகள் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும்.
 கம்பர் தன்னுடைய கம்பராமாயணத்தில் இரணிய வதைப் படலம்  வைத்திருக்கிறார் அவர் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ராமாயணத்தை   அரங்கேற்றம் செய்யும் பொழுது சிங்கம் மண்டபம் நிறுவப்பட்டது இனிய நரசிம்மரும் இங்கே தான் இருக்கிறார்.
 ஆந்திரப் பிரதேசத்தில் நரசிம்மர் பானக நரசிம்மர்  என்று அழைக்கப்படுகிறார் மிகவும் சக்திவாய்ந்த நரசிம்ம மூர்த்தியாக கருதப்படுகிறார்
 இரணியனை வதம் செய்த பிறகு உக்கிர நரசிம்மராக இருந்தவர் பிறகு லட்சுமி யோடு இணைந்து லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார் உக்கிர நரசிம்ம வழிபாடு கடன் தொல்லையை நீக்கும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு பண சேர்க்கையை அதிகமாக கொடுக்கும்
 பெரும்பாலும் நரசிம்மருக்கு மலைமேல் அல்லது  குகையின் உள்ளே அவருக்கு ஆலயங்கள் அமைகிறது அவருக்கு அதுவே வழிபாட்டுத்தலமாக மாறுகிறது.
 சப்த ரிஷிகளுக்கு  காட்சிக் கொடுத்த   ஆலயமே திருவடிகை என்று அழைக்கப்படுகின்ற சோளிங்கர்  வழிபாடு ஆலயமாகும்  மிக சக்திவாய்ந்த நரசிம்மமூர்த்தி  இங்கே இருக்கிறார்.
 நாமக்கல் நரசிம்மமூர்த்தி   மிகவும் சக்தி வாய்ந்தவர். மேலும் சிங்கப் பெருமான் கோயிலிலே  இருக்கின்ற நரசிம்ம மூர்த்தியும் சக்தி வாய்ந்தவர் வழிபட அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும்.
 ஆந்திர மாநிலத்திலே விஜயவாடா அருகே மலையிலே வீற்றிருக்கும் நரசிம்மர் சிம்மா ஸ்தலம் நரசிம்ம மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார் இவரை வணங்க பலவிதமான நன்மைகள் நம் வாழ்க்கையில் நடப்புக்கு வரும்.
 மன்னார்குடி அருகே இருக்கின்ற வலங்கைமான்  வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கின்ற நரசிம்மமூர்த்தி யோக நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார் பிரதோஷ காலங்களில் வணங்கிவர தீராத பிரச்சினைகளும் தீரும் என்று அங்கு வருபவர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment