.
ஒரு மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு காரணம் என்னவென்றால், அவன் முற்பிறவியிலே செய்த "பாவம், புண்ணியமும்" ஆகும். அவனின் பாவ, புண்ணியங்களை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான். அதனால் நாம் வாழும் பூமிக்கு "தர்ம, கர்ம பூமி என்று பெயர்.
ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து வருகிறார்கள்.
ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு சிலரோ செய்ய நினைத்தவற்றை நினைத்த மாத்திரத்திலேயே செய்து வருகிறார்கள்.
வேறு சிலர் எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை . இது ஏன்....? இதற்க்கு "பிறந்த நேரம் தான்" காரணம்
நடைமுறையிலே சிலர் பேச நாம் கேட்டிருக்கின்றோம். அவருக்கென்ன குறை? அவர்பிறந்த நேரம். அவர் ராஜாவைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், பலவித நன்மைகளை அடைகிறார், அவர் நினைத்ததை சாதித்து வருகிறார்.
ஜாதகத்திலே 9வது இடம்தான்
"உயர்வானது அடைவது" அதாவது நாம் இந்த உலகத்தில் வந்து நம் ஆசைகளை அடைகின்ற பகுதி. அந்த 9வது இடத்திற்கு ஒருவரது ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார், எண்ணியதையும் அடைந்து விடுகிறார்.
ஒன்பதிலே மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இவைகளெல்லாம் இருக்கப் பிறந்தவர் தடுமாறுகிறார், போராடுகிறார், அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார். இதுதான் "ஜோதிட ரகசியம்" இதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதாவது, ஒவ்வொறு அமாவாசை தினத்தன்றும், "குதப காலம்"
என்று கூறுவார்கள். "குதபகாலம்" என்றால் அமாவாசை பகுதியிலே பகல் பதினோன்றிலிருந்து, பனிரெண்டு மணி வரை சுமார் ஒரு மணி நேரம், இந்த ஒரு மணி நேரத்தில்தான் பித்ருக்கள்" நாம் படைக்கும் "அமாவாசை பண்டத்தை" ஏற்க தயாராக இருக்கிறார்கள்.
அந்த நேரத்திலே, உங்கள் ஊரில் உள்ள
"அரச மரங்களைச்" சுற்றி வாருங்கள்.
ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 'குதப காலம்" என்று சொல்லப்படுகின்ற அந்தக் காலக் கட்டத்திலே, நீங்கள் அரச மரத்தைச்சுற்றி வலம் வரும்போது, ஒரு குறிப்பிட்ட அமாவசையிலே உங்களுடைய ஆசைகள் நிறைவேறத்துவங்கும். சுமார் இதை ஒரு வருட காலம் நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
அதனால் கொடுத்த இந்த ரகசியத்தை நீங்கள் பயன்படுத்தி உங்களின் வறுமை நிலையிலிருந்து, செழுமை நிலைக்கு நீங்கள் வரவேண்டுமென்று எல்லா வல்ல இறைவனை வேண்டி இப்பகுதியினை இனிதே பூர்த்தி செய்கிறோம்.
No comments:
Post a Comment