இன்று நாம் காணவிருப்பது புதனுக்குரிய தாந்த்ரீகப் பரிகாரங்களாகும்.
புதனுக்குரிய செந்நாயுருவி வேரை முறைப்படி பூஜை செய்து காப்புக்கட்டி உயிர் கொடுத்து, பூஜையிலே வைத்து, புதன் கிழமை புதன் ஹோரையிலே காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் தாயத்தாக அணிந்து கொள்ளலாம்.
இதனால், தோல் நோய் வராது.சிந்தனைக்கு ஏற்ப வேலை அமையும். புத்தக வெளியீட்டு துறை பலன் தரும். சுபசந்தோஷமாக மேன்மை உண்டாகும். குடும்பத்தினர் மகிழ்வர்.
பெண்களுக்கு முன்னேற்றம் வரும்.
வடகிழக்கு பகுதியிலுள்ள புதன் பகுதியில் தாம்பாளத்தில் பச்சைப்பயிறை பரப்பி, 17 அகல் விளக்குகள் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 17 முறை புதனின் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து 17 முறை வலம் வந்து தீப தூபம் காட்டி, கற்பூரம் காட்டி வழிபட புதன் தசை முழுவதும் நன்மையைத் தரும். எழுத்துக் காரியம் வெற்றி பெறும். குடும்பத்தொழில் வளம் பெறும். பலம் குறைந்த புதனாக இருந்தாலும் வெற்றி தரும். புதன் ஆட்சி உச்சம் பெற்றுள்ள ஜாதகனை சந்தோஷம் சூழும்.
புதன் காலை புதன் ஹோரையிலே
"பச்சைப்பயிறு பாயாசம்" வைத்து சுதர்சனரை வழிபட புதன் தசை புத்தியிலே நல்ல பலன் தரும். மந்திர, எந்திர, தந்திரங்களால் எந்த பாதிப்பும் வராது.
பாசிப்பயறு பாயாசத்தை புதன் சன்னதியிலே வைத்து பிறருக்குக் கொடுக்க, குழப்பமான மனநிலை மாறும்.
தைரியமும், வெற்றியும் கிட்டும். நல்ல பலன் கிடைக்கும்.
புதன் ஹோரையில் ஒரு அரச இலையை எடுத்து அதன் மீது பச்சை பயிரை வைத்து, அதன் மீது நல்லெண்ணெய் ஊற்றி, "அகல் விளக்கு தீபம்" ஏற்றி வைக்கவும். அதன் முன் ஒரு தாம்பாளத்தில் பச்சைப்பயிறை வைத்து கற்பூரம் ஏற்றி புதன் காயத்ரி 27 முறை படிக்கவும். பின்பு, 17 முறை புதன் காயத்ரியை ஜெபிக்க புதன் தசை 17 வருடம் நன்கு நடக்கும்.
கொடுக்கல், வாங்கல், படிப்பு தடை விலகும்.
புதனன்று திருவெண்காடு சென்று பிரம்மன் சமாதியில் விளக்கேற்றி வழிபட குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
குழந்தைகள் நன்கு படிப்பார்களா
புதன் கிழமை இரவு 9 வெற்றிலை, பாக்கு இவற்றுடன் பச்சைப் பயிறு பொட்டலமாகக்கட்டி, தலையணை அடியில் வைத்து உறங்க வேண்டும். இவ்வாறு 17 வாரங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். 18 -வது வாரம் புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் புதன் ஹோரையில் ஓடுகின்ற நீரில் இதை போடவும். பிறகு புதனுக்கு அர்ச்சனை செய்ய பல நன்மைகளை பெறலாம் என்று கூறி, இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்
No comments:
Post a Comment