Thursday, May 14, 2020

கண் திருஷ்டியை போக்க ஆலய வழிபாடு.

நாம் இருக்கின்ற இந்த கணிணி யுகத்திலும் "கண்திருஷ்டி" வேலை செய்யுமா? நிச்சயமாக உறவினர் ஒருவர் நம் வீட்டிற்கு வருகை புரிந்து நாம் அளிக்கின்ற விருந்தை சாப்பிட்டிருப்பார், நம் வீட்டில் பொருட்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டிருப்பார். அல்லது தீய எண்ணத்தோடு நம் விருந்தில் கலந்து கொண்டு, அவரின் பார்வையை பதிவு செய்வதன் மூலம், திடீரென்று அந்தப் பொருள்கள் உடையும், அந்தப் பொருட்கள் காணாமலோ அல்லது திருட்டு போகவோ செய்யும், இது எவ்வாறு சாத்தியம் என்று நீங்கள் சற்றே சிந்தித்தீர்களென்றால், இதற்கான விடை உங்கள் மனதிலே மலரும்,

"திருஷ்டி" என்றால் என்ன? கண் படுதல், என்ன காரணத்திற்காக இன்றளவிலும் கூட பிறந்த குழந்தைக்கு கன்னத்தில் கருப்புப்பொட்டு வைக்கின்றார்கள் என்றால், அப்பச்சிளங்குழந்தையை சற்று அவலட்சணமாக்கி, அழகுபார்க்கின்றார்கள் என்றால், இந்த கண் திருஷ்டியிலிருந்து காக்கவேயாகும், அதுபோன்று, கிரகங்களிலே, சில கிரகங்களுக்கு மோசமான பார்வை இருக்கின்றது. அது என்ன என்றால், சனி, இவருக்கு மூன்றாம் பார்வை, ஏழாம் பார்வை, பத்தாம் பார்வை. அடுத்து செவ்வாய், இவருக்கு நான்காம் பார்வை, ஏழாம் பார்வை, எட்டாம் பார்வை, ராகு,கேது சூரியன், தேய்பிறை சந்திரன், இந்தக்கிரகங்கள் லக்கனத்தையோ, இராசியையோ பார்க்க அந்த ஜாதகர் படும் பாடு என்னவென்று சொல்வது ஒரு மாணவன் நன்கு படிக்கின்றான், நல்ல மதிப்பெண்களைப் பெற்று பல வெற்றிகளைக் குவிக்கும்.அவன் பெற்ற மதிப்பெண்களையும், பரிசுகளையும் பார்த்த, படிப்பில் ஆர்வம் கொள்ளாத சக மாணவன் கண் வைக்கின்றான். அச்சக மாணவனின் இயலாத தன்மை, பொறாமை குணம் ஆகியவை அவனின் கண்களின் மூலமாக சென்று, கெட்டிக்கார மாணவன் சென்றடைந்து, அவனை பாதிப்புக்குள்ளாகிறது சிலர் கூற நாம் கேட்டிருப்போம், யார் கண் பட்டதோ நான்றாக இருந்த நான் இப்படி மோசமான நிலைக்குச் சென்று விட்டேன்

என்று. யார் கண் பட்டதோ எங்கள் குடும்பம் சீர் குலைந்து விட்டதே? என்றெல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் கூட பேசுகின்றார்கள் அப்படிப்பட்ட திருஷ்டிகளில் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள் இருக்கின்றன.

இப்போது அவைகளைப் பார்ப்போம், நீங்கள் கண் திருஷ்டியில் அகப்பட்டு, பாதிக்கப்பட்டீர்களேயானால், உங்கள் வீட்டில் பலவிதமான யாகங்கள் செய்யலாம். அது என்னவென்றால்,

"சுதர்சன ஹோமம்", "நவக்கிரக ஹோமம்", "தன்வந்திரி ஹோமம்"

போன்ற ஹோமங்களை நீங்கள் செய்தால் அந்த ஹோமப்புகையிலிருந்து, வருகின்ற சக்தியானது திருஷ்டியை அகற்றி வருகிறது

இதற்கு வழி இல்லை என்றால் ஒவ்வொரு செவ்வாயன்று வெள்ளியன்றும் 'தூப தீபம்" அல்லது

"சாம்பிராணி புகையை' உங்கள் வீடு முழுவதும், யார் மீது திருஷ்டி விழுந்திருக்கின்றதோ அவர் மீதும் காட்ட வேண்டும்.

மேலும், சிலர் நம் வீட்டு விருந்து முடிந்து சென்றவுடனே சில மோசமான செய்திகள் நம்மை வந்தடையும். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், கருப்பட்டி வெல்லத்திலே சீரகத்தை கலந்து அவர்களுக்கு பானகம் தயாரித்து அளிக்கவேண்டும். இப்படிப்பட்டவர்களை நாம் தவிர்க்க இயலாது. மேலும் அவர்கள் நம் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டுதான் ஆகவேண்டும், நம் குடும்பத்தையும் அவரின் கண் திருஷ்டியிலிருந்து காக்க அவர்களுக்கு இந்த கருப்பட்டி பானகம் அளித்துவிட்டால், எப்பேற்ப்பட்ட கண் திருஷ்டியும் அகன்று விடுகின்றதோ

ஆண்களாக இருந்தால் விபூதி, சந்தனம் அல்லது குங்குமம் வைத்தால் உங்களை இந்த கண்திருஷ்டி பாதிக்காது.

பெண்களாக இருந்தால் மஞ்சள் பூசி உங்கள் முகத்தில் குங்குமம் வைக்க திருஷ்டியின் தாக்கம் உங்களை அணுகாது. மேலும், இத்தாக்கத்திலிருந்து நம் குடும்பத்தை காக்க ஆஞ்சநேயப்பிரபு, பிரத்யங்கிரா தேவி நரசிம்மர் ஆகிய மூன்று பேரையும் வணங்கிவர

கண்திருஷ்டி யில் இருந்து" விடுபடலாம் என்று கூறி அன்பர்களே, இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்

No comments:

Post a Comment