Thursday, May 21, 2020

கடன் ஏன் உருவாகிறது கடனை அடைக்க அற்புதமான பரிகாரம்.

அற்புதமான பயனுள்ள பகுதியாக கூறி மனதார வாழ்த்தி, வாயார புகழ்கிறீர்கள் என்றால் உங்களின் பெருந்தன்மை அளவிட முடியாதது நீங்களனைவரும் எல்லா நலனும் பெற்று, இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இனி மேற்கொண்டு பகுதியை தொடர்வோமா

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, கடன் யாருக்கு அதிகம் ஏற்படுகின்றது.

யாரை அதிகபட்சமாக அது தாக்குகின்றது அதற்கு காரணகர்த்தா யார்? அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? என்பதை எல்லாம் ஒரு தொகுப்பாக காணவிருக்கிறோம்.

ஒரு ஜாதகத்திலே ஒருவருக்கு கடன் இருக்கின்றதா? இல்லையா?

என்பதைக்காட்டும் விதானம் ஆறாவது ஸ்தானம், லக்கனத்திலிருந்து எண்ணிலா, ஆறாவது இடமே ஒருவருடைய கடன்படும் நிலையைக்காட்டுகின்றது. அந்த இடத்தை ரணம், ருணம், சத்ரு என்று சாற்றுகிறார்கள்,

ரணம் என்றால் நாம் பெற்ற அவமானங்கள், அவமரியாதைகள், ருணம் என்றால் கடன்கள், சத்ரு என்றால் விரோதிகள் இந்த கடன் எப்படி தோன்றுகின்றது என்றால் ஒருவருடைய ஜாதகத்தில். இரண்டாவது இடம் வருமானத்தைக் காட்டுகின்ற இடம் அந்த வருமானத்தைக் காட்டுகின்ற அதிபதி ஆறிலே சென்று மறைந்தால் அல்லது பத்தாம் ஆதி என்று சொல்லப்பட்டவர், ஆறிலே, சென்று மறைந்தால் கடன் உருவாகிறது.

இந்த கடன் உருவாக்கத்தை அதிகமாகக் கொடுப்பவர் செவ்வாய் ஆவார்.

இப்பொழுது நாம் செவ்வாயை எடுத்துக் கொள்ளலாம். ஒருவருடைய ஜாதகத்திலே செவ்வாய் ஆறிலே சென்று நின்றால் எட்டிலே சென்று நின்றால், இந்த ஆறாவது எப்பதான், எட்டாவது ஸ்தானம் என்ற மோசமான ஸ்தானத்திலே பூமிகாரகன் வீட்டைக் குறிக்கின்ற அந்த செவ்வாய் சென்று நின்றால் நிச்சயமாக கடன் தொல்லை உண்டாகும்.

அதே செவ்வாய் எட்டிலே சென்று மறையும் போது வீட்டுப் பத்திரம் வங்கியில் அல்லது தனியார் நிறுவனங்களிலோ அடமானமாக சென்றுவிடும். இப்பிரச்சினையிலிருந்து விடுபட இவர்களுக்கான சக்தி வாய்ந்த பரிகாரம் என்ன?

அதை இடைக்காட்டு சித்தர் அளிக்கும் விளக்கம் மூலமாக காணலாம். ஒருமுறை இடைக்காட்டுச்சித்தரை வழிபட்ட பக்தர் ஒருவர், சித்தரிடம் சுவாமி, நான் எந்த கடவுளை வணங்கினால், என் கடன் தொல்லையிலிருந்து, நான் விலக முடியும் என்று வினவினார்.) அதற்கு இடைக்காட்டு சித்தர் அவர்களின் சித்த மொழியிலே. பரிபாஷைகள், புரியாத வண்ணம் சில வார்த்தைகளைக்கூறி விடுவார். அது புரிந்தால் நமக்கு விடுதலை. அதுபோன்று அறிவுரை கேட்டவரிடம் சித்தர், 'ஏழையை வழிபாடு "இடையனை வழிபாடு", 'இளிச்சவாயன் வழிபாடு" என்று கூறினாராம். அப்போது அந்த பக்தருக்கு ஒன்றுமே புரியவில்லை, குழம்பினார்.

தனக்குத்தானே, "யார் ஏழை? யார் இடையன்? யார் இளிச்சவாயன்?" என்று ஆழ்ந்து யோசிக்கும் பொழுது,விஷ்ணு அவதாரங்களிலே, மூன்று பேரை இடைக்காட்டு சித்தர் குறிப்பிட்டிருக்கின்றார். என்பதை உணர்ந்துகொண்டார். ஏழை எனக்குறிப்பிடப்பட்டவர் யாரென்றால், அரசகுலத்திலே பிறந்து, விதியின் வசத்தால் காடுகளில் அநாதை போன்று வாழ்ந்தவர் இராமபிரான் அவரை 'ஏழை" என்றார். கிருஷ்ண பரமாத்மா"

ஆயர் குலத்தில் பிறந்தவர் என்பதைச் சுட்டும் விதமாக 'இடையன் என்றார்.

"இளிச்சவாயன் என்று சிரித்துக்கொண்டேயிருக்கும் நரசிம்ம பெருமாளைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த நரசிம்மபெருமாளை நாம் எடுத்துக்கொண்டால், இவரை வணங்குவதால் கடன் தொல்லைகளிலிருந்து மிக சுலபமாக வெளியே வந்துவிடலாம். செவ்வாய் என்பது வைணவ தத்துவத்தின் படி, நரசிம்மன் காட்டும், நரசிம்மன் வணங்கிய குழந்தை பிரகலாதனுக்கு, நரசிம்மர் உதவி செய்ய காத்திருந்தாராம்.

பிரகலாதன் எந்தத்தாணைக் காட்டினாலும் அதிலிருந்து வெளிவர அவர் தயாராக இருந்தார். அப்படிப்பட்ட நரசிம்மரை ஒரு செவ்வாய் தினத்தன்று. நீங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் நான்கு நரசிம்மரை வணங்கினால் நீங்கள் இந்த கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அதாவது. "தவளைக்குப்பம்

அருகிலிருக்கின்ற "அபிஷேகப்பாக்கம்", என்ற இடத்தில் இருக்கும் ஒரு நரசிம்மர்,

'பூவரசன்குப்பம்" என்ற இடத்திலே இருக்கின்ற ஒரு நரசிம்மர், "பரிக்கல்

என்ற இடத்திலிருக்கும் ஒரு நரசிம்மர்,

"அந்தளி என்ற கிராமத்தில் இருக்கின்ற இன்னொரு நரசிம்மர் இந்த நான்கு நரசிம்மர் களையும், ஒரே நேர்க்கோட்டில் அதாவது. கடலூர் மாவட்டத்தில் இரண்டு நரசிம்மர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நரசிம்மர்கள். இவர்களை வழிபட இந்த செவ்வாய் ஆறு, எட்டிலிருந்து அவர்களைத் தாக்குவது குறைந்து, கடனில் இருந்து விடுதலை அடையலாம்.

மேலும், இன்னொரு முறை இருக்கிறது, ஆறு எட்டில் செவ்வாய் இருந்தால், வழக்குப் பிரச்சனை வரும், அவ்வழக்குப் பிரச்சினையை தீர்க்கும் சக்திவாய்ந்தவராக காஞ்சிபுரத்திலே இருப்பவர்தான் வழக்கறுத்த ஈஸ்வரன்' அவரை ஒவ்வொரு திங்களன்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட வழக்கு பிரச்சினைகளும், கடன் பிரச்சினைகள் கட்டுப்படும் என்பது உண்மை , அதை முறையாகப் பின் பற்றி கஷ்டம் தீர்ந்து இன்புற்று வாருங்கள், என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி

No comments:

Post a Comment