Friday, May 15, 2020

கல்வியில் உயர்ந்த நிலை பெற ஆலய பரிகாரம்.



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, கல்வியில் மேன்மையுற பின்பற்ற வேண்டிய பரிகாரங்கள் பற்றியும், ஒரு மனிதனுக்கு கல்வியே மிகமிக முக்கியமானதாக இருக்கிறது

ஏனென்றால், கல்வியே அவன் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது

கல்வி மீது ஆர்வம் காட்டாதவர்களே இல்லை எனலாம்.

கல்வி என்பது நமது வாழ்க்கையிலே கட்டாயமான ஒரு பகுதியாக இருக்கிறது

அப்படிப்பட்ட நிலையிலே மூன்று கிரகங்களை நாம் ஜாதகத்தில் ஜாதகத்திலே பார்க்க வேண்டும்.

சந்திரன்,புதன்,குரு ஆகியவையே அம்மூன்றும்.

சந்திரன் ஞாபக சக்தியையும், நல்ல மனோபாவத்தையும் காட்டுபவராக இருக்கின்றார். இவர் எக்காரணம் கொண்டும் கெடக்கூடாது. புதன் நுண்ணறிவைக் காட்டக்கூடியவர், இவர் நீட்சமடையக்கூடாது, மறையக்கூடாது. குரு பேரறிவைக் காட்டக்கூடியவர். அவர் கெட்டுவிட்டால், அல்லது நீட்சம் பெற்றால் அல்லது மறைந்தால் படிப்பிலே பங்கம் ஏற்படும்.

ஒருவருடைய ஜாதகத்திலே, நான்காவது இடம் அடிப்படைப் படிப்பைக் காட்டுகின்றது. ஒன்பதாவது இடம் உயர்படிப்பைக் காட்டுகிறது

வரம்வாங்கியே பிறக்கின்றார்கள், என்பது தத்துவம், அப்படிப் படிக்க முடியாதவர்களை நாம் ஜாதக ரீதியாகப் பார்க்கும்பொழுது இந்த மூன்று கிரகங்கள் கெடக்கூடாது.

சரி, இதற்கான பரிகாரம் என்ன?

சந்திரன் சக்தியை நம் ஜாதகத்திலே அதிகரிப்பதற்கு, வருடத்திற்கு ஒருமுறை

"திங்களூர்" என்ற ஊருக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்று, சந்திரனை வணங்கி வர, அவரால் ஏற்பட்ட, தோஷங்கள் அனைத்தும் கட்டுப்பட்டு, ஜாதகருக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். ஒவ்வொரு ஆலயத்திற்கும் நீங்கள் செல்லும் பொழுதுதான் அந்தக்குறிப்பிட்ட கிரகம் பலமடையும்.

உங்கள் உடலில் வந்தமர்ந்து உங்கள் உடலில் உள்ள சக்கரங்களை இயக்கம்.

உங்களின் கர்மாவை, கசக்கி,பொசுக்கி அடக்கி நடக்கும்

இப்படிப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு நாம் திருக்கோயில்களுக்குச் செல்லும்பொழுது, அந்தக் கோயிலிலே அமர்ந்து கொண்டு, 'நமச்சிவாயா" என்று சைவ ஆலயங்களில் முழங்க வேண்டும்.

அதுபோல சந்திரனுக்கு வேறொரு ஸ்தலமாக இருப்பது திருப்பதி, வேங்கடாசலபதி-வேங்கடம் என்றால் மலை, ஜாலம் என்றால் நீர்நிலை, அதிபதி என்றால் அதற்கு அதிபதியாக இருப்பவர் விஷ்ணு . அவரின் ஒரு அவதாரம்தான், அந்த வெங்கடேசப்பெருமாள்.

திருப்பதிக்கு சென்றாலும் திங்களன்று செல்ல திங்களூருக்கு திங்களன்று செல்ல வேண்டும்

அப்பொழுதுதான் உங்கள் ஜாதகத்திலே சந்திரன் பலம்பெற்று, ஞாபகசக்தி வளம் பெற்று நல்லமுறையிலே படிக்க துவங்குவார்கள்

அதுபோல புதனுக்கு இரண்டு ஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று சீர்காழிக்கு அருகிலுள்ள திருவிளங்காடு.

"நமச்சிவாயா" என்ற மந்திரத்தைச் சொல்லி ஆறுமணிநேரம் அத்தலத்திலே தங்க நுட்பசக்தியத் தருகின்ற புதன் பலமாகிறார். அதுபோல திருப்பதி புதனன்று செல்ல புதனின் அம்சமாக இருக்கின்ற பெருமாள், பெருமாள் அவதாரமாக இருக்கின்ற அந்த வெங்கடேசப்பெருமாளின் அருளாசியால் புதனின் சக்தி கூட்டப்பட்டு படிப்பிலே உயர்வுநிலை கிடைக்கின்றது.

குரு இவருக்கும் இரண்டு ஆலயங்கள் உள்ளது. ஒன்று திருச்செந்தூர் . குருவின் சக்தி உயரமாக சென்று ஆறுமணிநேரம் தங்குபவரின் உடலில் பாய வளர்ச்சி பெருகும். அதுபோல ஆலங்குடி செல்ல வேண்டும். குருவின் சக்தியை வளமாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று கிரகங்கள் வலிமையாக்கிக்கொண்ட நான்காவது, ஒன்பதாவது இடம் நிச்சயமாக மாறும், கல்வித்தரம் உயரும் என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்,

No comments:

Post a Comment