அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, தீய சக்திகள், துஷ்ட சக்திகள் நம் வீட்டைத்தாக்கினால் நாம் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்களைப் பற்றியதாகும்.
தீயசக்திகள், துஷ்டசக்திகள் நம் வீட்டைத்தாக்கினால் என்ன செய்ய வேண்டும், அது தீய சக்திகள் இருக்கின்ற வீட்டில் நம்முடைய பூஜை பலன்களை எதிர்பார்த்த அளவிற்கு அனுபவிக்க முடியாது.அப்படிப்பட்ட ஒரு அமைப்பில் உள்ள வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நிம்மதியின்மை ஏற்படும்.
அந்த நிம்மதியின்மை, அமைதியின்மை அந்த வீட்டிலே மகிழ்ச்சியின்மை இவையெல்லாம் அந்த வீட்டில் தீய சக்திகள் இருப்பதற்கு அடையாளமாகும்.
நாம் ஒரு வீட்டிலே இருக்கின்றோம் என்றால், அந்த வீட்டில் இருக்கின்ற துஷ்ட சக்தி,தீய சக்தி எப்பொழுதும் துயரத்தில் வைத்து மகிழ்ச்சியைப் பறிக்கிறது. | இப்படிப்பட்ட அந்த சக்திகளை விலக்குவதற்கு உங்கள் வீட்டின் அருகாமையிலே உள்ள சிவஸ்தலங்களுக்குச் சென்று பசுவின் கோமியத்தைப் பெற்று நம் வீடு முழுவதும் தெளித்துவிட்டு, வீட்டைச்சுத்தம் செய்யும் பொழுது, கோயிலிலிருந்து பெறப்பட்ட காரணத்தினால் அக்கோமியத்திற்கு அதீத சக்தி இருக்கும். அதன் மூலம் நம் வீட்டில் துஷ்ட சக்திகளை அப்புறப்படுத்தப்படுகின்றது, அதன் மூலம் நமக்கும் மகிழ்ச்சி உண்டாகின்றது.
மற்றொரு மாற்றுப்பரிகாரம் என்னவென்றால், பொதுவாக நாம் உணவிற்குப் பயன்படுத்தும் கல் உப்பை தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்துவர வர வேண்டும். அதன் பின்பு நீங்கள் அதை சுத்தம் செய்ய வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒரு முறையாக தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்ய எப்படிப்பட்ட துஷ்ட சக்திகளாக இருந்தாலும் இந்த இரண்டு பரிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு, வெளியேறி அங்கு லக்ஷ்மி கடாட்சம் வந்து விடுமென்றால் அது மிகையல்ல.
இதை அனுபவித்தவர்கள் இப்பரிகாரமுறையினால் லக்ஷ்மி கடாட்சம் வராவிட்டாலும், அமைதி வந்து விடுகின்றது என்று கூறுகின்றார்கள்.
அமைதி வந்துவிட்டால் அது அதிர்ஷ்டத்தின் அடிப்படை. அப்போது நம் வீட்டில் தீய சக்திகள் விலகிவிட்டது என்று அர்த்தம். அதனால் வீட்டில் மங்களகரமான காரியங்கள் பல நடக்கும்.
இதுவே அதற்குச் சான்றாக இருக்கும்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இறை பக்தியோடு முழுமையாக இறைவனை வணங்கி, இக்காரியங்களைப் பொறுமையாக செய்து வரும் போது, இந்தப் பரிகாரங்களின் சக்தி உங்களை எட்டும். அப்பொழுது உங்கள் வீட்டில் இருக்கும் அத்துஷ்ட சக்திகள் மாறி அமைதியான ஒரு மனநிலை உண்டாகும்.
அதற்குக் காரணம் நீங்கள் மேற்கொண்ட வேண்டுதல்களின் பூரண நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள் என்பதேயன்றி வேறொன்றுமில்லை, என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.
No comments:
Post a Comment