Monday, May 18, 2020

முறையான திருமண பொருத்தங்கள் பார்க்க பயன்படுத்தும் விதி.

திருமணப்பொருத்தம். இது தொன்று தொட்ட காலத்திலிருந்தே நட்சத்திரத்தின் அடிப்படையிலே பார்க்கப்படுகின்ற பொருத்தங்கள். முறையாக அவை அமையாவிடில் நம் மனதிலும், வாழ்விலும் ஏற்படுத்தும் வருத்தங்கள்.

அதனால் அவற்றை ஆழமான பொருத்தங்களாக ஜோதிட விற்பன்னர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் லக்கனப்பொருத்தம் என்பது வித்தியாசமான ஒன்றாக இருந்தாலும், நடைமுறையிலே அது நூற்றுக்கு நூறு பலனைத் தருகின்றது. எப்படி என்றால்.

ஒரு ஆண் மேஷ லக்கனத்திலே பிறந்திருக்கின்றார் என்றால், அவருக்கு மேஷ லக்கனத்திலே பிறந்த பெண்ணை திருமணம் செய்யும் பொழுது, அவர்களுக்குள் புரிந்து கொள்ளுதல் அதாவது understanding, விட்டுக்கொடுத்தல் அதாவது adjustment ஏற்படுகின்றது. மனித வாழ்க்கையிலே மிகமிக முக்கியமானது, திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதுதான்.

அதில் தம்பதிகள் மகிழ்ச்சியாக, இன்பமாக,நிம்மதியாக இருக்கவேண்டுமென்றால், விட்டுக்கொடுத்தலும், புரிந்துகொள்ளுதலும் நிச்சயம் இருக்க வேண்டும். இவை இரண்டும் எப்படிவருமென்றால், ஒரு லக்கனத்தைச் சார்ந்தவருக்கு, அதே லக்கனத்தில் இருப்பவருடன் திருமண பொருத்தம் செய்தால் நிச்சயமாக இரண்டு பேருடைய மனநிலையும், மன ஒற்றுமையும் கிரகத்தின் அடிப்படையிலே உருவாவதால் ஒன்றாகவே அவர்கள் சிந்திப்பார்கள், ஒற்றுமையாகவே அவர்கள் வாழ்க்கையை நடத்துவார்கள். விட்டுக்கொடுத்து வாழ்வார்கள்.

ஏனென்றால் ஒரே கிரக அலைவரிசையிலே அவர்கள் இருப்பதால், இவர்களுடைய குடும்ப வாழ்க்கை மிகமிக அழகாகவும், அமைதியாகவும் சென்று கொண்டிருக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒருவர் மேஷ லக்கனமாக இருந்தால், முடிந்தவரை அதே மேஷ லக்கனத்தை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால் நமக்கு வெற்றி உண்டாகும். அதோடு மட்டுமல்லாமல், அந்த குடும்பத்தில் அவர்களிடையே ஒற்றுமை உருவாகும்.

அதற்கு எதிர்மாறாக ஒரு மேஷ லக்கனக்காரருக்கு, கன்னி லக்கன பெண்ணை தேர்ந்தெடுத்தால் பிரச்சினை ஏற்படும். எப்படியெனில் மேஷத்திலிருந்து நாம் எண்ணிவர கன்னி 6 வது இடமாக இருந்தாலும், அது விரோத ஸ்தானத்தைக் காட்டுவதாலும் அவர்களிடையே பிரிவு, சண்டை , சச்சரவு, நீதிமன்ற வழக்கு, விவாகரத்து போன்றவை வருவதற்கு கிரகணங்கள் காரணமாக அமைந்துவிடுகின்றது. ஏனென்றால், மேஷ லக்கனத்தைச் சார்ந்தவர் யாரென்றால் செவ்வாய், கன்னி லக்கனத்திற்கு அதிபதி யாரென்றால் புதன். இருவருமே பரம பகை உள்ள கிரகங்கள்.

அதாவது, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை அங்கே இருக்காது, எப்பொழுதும் குடும்பத்தில் கஷ்டங்கள் தலை தூக்கும், சூறாவளி வீசும், அவர்களின் வாழக்கையிலே பெரும் போராட்டங்களை அவர்கள் சந்தித்து இறுதியில் இந்த லக்கனப் பொருத்தம் மிக முக்கியமானதுதான் என்று, ஏற்றுக்கொள்வார்கள். எனவே அன்பர்களே, முறையான லக்கனப் பொருத்தங்களைக் கண்டு இனிமையான திருமண வாழ்க்கையை துவங்குங்கள் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment