Tuesday, May 19, 2020

கேது தோஷத்தை போக்க பயன்படுத்துகின்ற தாந்த்ரீக பரிகாரம்.

இன்று நாம் காணவிருப்பது கேதுவிற்குரிய தாந்த்ரீகப் பரிகாரங்களாகும்.

வேப்ப மரத்தின் வடக்கே போகும் வேரை அஸ்வினி, மகம், மூல நட்சத்திரங்களில் பூஜை செய்து தாயத்தாக்கி அணிய கேது பகவான் நல்ல பலன்களை அளிப்பார்.

வாழ்வில் பிடிப்பு இல்லாதவர்கள், வீட்டில் துன்பத்தை அடைபவர்கள், மேலதிகாரிகளின் தொல்லை உள்ளவர்களுக்கு, தம்பதி பிரச்சனை உள்ளவர்களுக்கு, இம்மூலிகை நற்பலன்களைக் கொடுக்கும்

இலுப்பை மர அடியின் நான்கு மூலைகளிலும் அகல் விளக்கு தீபம் ஏற்றி 4 மூலைகளிலும் தேங்காய் உடைத்து பழம், வெற்றிலை - பாக்கு வைத்து, நான்கு மூலைகளிலும் எலுமிச்சை பழத்தை அறுத்து வைத்து பூஜை செய்து இலுப்பை மரத்தின் தெற்கு போகும் வேரை தாயத்தாக்கி அணிய, கேதுவின் திசை முழுவதும் நல்ல பலன் தரும். அஸ்வினி, மகம், மூல நட்சத்திரக் காரர்களுக்கு ஆயுள் முழுவதும் நல்ல பலன் தரும். கேதுவினால் வரும் துன்பங்கள் மறையும். ஆன்மிகத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

திங்கள் காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் நவகோள்களில் கேதுவின் இடமான வடமேற்கு மூலையில் ஒரு தாம்பாளத் தட்டில் கொள்ளை பரப்பி, அதன்மேல் 7 அரச இலைகளை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, ஏழு அகல் விளக்குகளை ஏற்றி 27 முறை வலம் வந்து வழிபடவும். இவ்வாறு 7 திங்கட்கிழமை தொடர்ந்து செய்துவர சகல கஷ்டங்களும் தடைகளும் விலகும். நல்ல எதிர்காலம் உண்டாகும். திங்கள் காலை 10% மணியிலிருந்து மணிக்குள் கொள்ளை வேகவைத்து கேது பகவானுக்கு படைத்து, பிறர்க்கு கொடுத்து வர மங்கள காரியங்கள் நடக்கும். தர்ப்பைப் புல்லை கருக்கி அஷ்டகந்தகத்தோடு கலந்து, "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளம் கம் கணபதயே வரத சர்வ ஜனமே வசமானிய ஸ்வாகா"

எனும் மந்திரத்தை விநாயகர் சன்னதியிலே வைத்து 1008 முறை ஜெப உருவம் ஏற்றி சொல்லி வரவும். இது ஆயுள் முழுவதும் நல்ல பலனை தரும் பரிகாரமாகும்.

ஆன்மிக குருக்களை வீட்டிற்கு அழைத்து தானங்கள் அளிக்கலாம், பிறர்க்கு உணவு அளிக்கலாம், கேது திசை நடப்பவர்கள், அஸ்வினி, மகம், மூல நட்சத்திரத்தன்று எமகண்ட வேளையிலே வேப்ப மரத்திற்கு நீர் ஊற்றி மஞ்சள், குங்குமம், பூ வைத்து வழிபட "சந்தான ப்ராப்தி" உண்டாகும் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

No comments:

Post a Comment