Wednesday, May 20, 2020

வாஸ்து தோஷம் நீங்க நல்ல வீடு அல்லது நிலம் அமைய தெய்வீக பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, நம்முடைய சுய ஜாதகத்தை எடுத்துப் பார்க்கும் பொழுது, நம் வீட்டின் பாகத்தை 4 வது இடம் காட்டும். ஒரு மனிதனுக்கு வீடு அமையும் பாக்கியம் இருக்கிறதா?

இல்லையா? என்று அவன் ஜாதகத்தை எடுத்து ஆராயும் பொழுது, லக்கனத்திலிருந்து எண்ணிவர நான்காம் ஆதி பாதிக்கப்படக்கூடாது, 6,8,12-ல் மறையக்கூடாது, நச்சு கிரகங்களின் பார்வை பதியக்கூடாது, அவர் மோசமான கிரகங்களின் பாதசாரத்தில் ஏறக்கூடாது.

இப்படி அந்த நான்காம் இடத்தில் ராகு, கேது இருக்கக் கூடாது.

நான்காவது இடம் பாதிக்கப்பட்டிருந்தால் அது வீட்டைக் காட்டுகின்ற இடமாக இருக்கும். நிச்சயமாக அவர்கள் பாதிக்கப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் பூமி மனை வாங்கிவிட்டு கட்டமுடியாத நிலை வாஸ்து குறையினால் ஏற்படுகின்றது. வீடு கட்ட துவங்கினாலும் வாஸ்து குறையினால் முழுமையாக கட்ட முடியாத நிலை ஏற்படுகின்றது. வீடு கட்டி முடித்த பின்பு வாஸ்துவினால் பல குறைகள் ஏற்படுகின்றது. புதிதாக வீடு, நிலம் வாங்க தடை, பூமி மனை விற்பனை செய்வதில் தடை போன்ற குறைகளை நிவர்த்தி செய்கின்ற ஸ்தலம் "செவலூர்",

இந்த ஸ்தல "பூமிநாதர் சுவாமி"

லிங்கவடிவிலே பதினாறு பட்டைகளுடன் காட்சி தருகின்றார். பதினாறு பட்டைகளையும் பூமிதேவியே ஏற்படுத்தி லிங்கத்தின் அடியில் அமர்ந்து பூமிநாத சுவாமியை வழிபாடு செய்வதாக ஐதீகம்.

லிங்கத்தின் மீது செய்யப்படும் அபிஷேகங்கள் அனைத்தும் இங்கே பதினாறு பட்டைகளின் மூலம் பூமிக்குச் செல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஸ்தலம். இந்த ஸ்தலத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று பூமிநாத ஸ்வாமிமுன் கற்களை பெற்று சென்று புதிய மனை தொடங்குபவர் அல்லது வாஸ்து குறைபாடால் வீடு கட்டும் பணி பாதிக்கப்படுபவர் அக்கர்களைப் பதிக்கும் பொழுது, எந்தத் தடை இருப்பினும் நீங்கி கட்டிடம் தடங்கலின்றி எழுப்பப்படுவதுடனும், இந்த இடத்தில் வாஸ்து குறைபாடுகளும் நிவர்த்தி ஆகின்றது. வாஸ்து பூஜை நேரம் காலை 9 மணி, வாஸ்து தோஷ குறைபாடுகளை நீக்குவதோடு பூமி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்குகின்ற ஸ்தலம்.

இத்தலம் அமைந்திருக்கும் இடம் புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியிலே குழிப்பிறை என்னுமிடத்திலிருந்து 3கி.மீ தொலைவிலுள்ள "செவலூர்"

ஆகும். வாஸ்து தோஷ பிரச்சினை உள்ளவர்கள் செவலூர் சென்று அங்குள்ள கற்களை தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுகின்ற அந்த வீட்டில் வைத்துக் கட்டும் பொழுது, எவ்வித வாஸ்து தோஷமும் கட்டுக்குள் வரும்.

ஏனென்றால் இப்படிப்பட்ட ஸ்தலங்களுக்கு நம்மை செல்ல வைத்தது யார்?

வழிகாட்டியது யார்? நமக்கு ஆலோசனை கூறியது யார்? என்று பார்க்கும்பொழுது அது எல்லாம் இறைவனேயன்றி வேறுயாருமல்ல,

இத்தலத்திற்குச் செல்லும் பொழுது நம்மை பாதிக்கும் எப்பேற்பட்ட வாஸ்து தோஷமும் கட்டுப்படும் என்பதை 2500 ஆண்டுகளுக்கு முன்பே கண்டெடுத்து நமக்கு அளித்துச்சென்ற நம் முன்னவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் என்று கூறி, இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

No comments:

Post a Comment