Thursday, May 28, 2020

நீச்ச கிரகங்களுக்கு உரிய பரிகாரங்கள்



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, நீச்ச கிரகங்களுக்கான பரிகாரங்கள் பற்றியதாகும்.

கிரகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உச்ச பலனையும், அதற்கு எதிர்மாறாக 7-ஆவது வீட்டில் நீச்ச பலனையும் பெறுகின்றன.

உச்சம் என்பது புண்ணியமாகக் கருதப்பட்டாலும், நீச்சமென்பது பாவத்தின் கணக்கில் வருகின்றது. மேஷ ராசியிலே சனி உச்சமடைகிறார்.

இப்படிப்பட்டவருக்கு 7-ஆவது இடமாக சனி நீச்சப்பட்டு திருமண வாழ்க்கை நடக்கின்ற அந்த சூழ்நிலையிலே நாம் கால பைரவரையும் ஆஞ்சநேய மூர்த்தி வணங்க வேண்டும். இப்படி நாம் தொடர்ந்து செய்வதன் மூலமாக சனியின் நீச்சத்தைக் கட்டுப்படுத்தலாம். கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுகின்றார். செவ்வாய் வது இடமாக வந்து நீச்சம் பெற்றால் அது கணவன் அல்லது மனைவியை பாதிக்கும் அவர்கள் திருமண வாழ்க்கை பாதிக்கும்.

அப்படிப்பட்டவர்கள் முருகன் வழிபாடு குறிப்பாக அஷ்டமி தினம், மேலும் கிருத்திகை நட்சத்திரத்திலே அவர் பிறந்த நட்சத்திரமான விசாக நட்சத்திரத்திலே வழிபாடு செய்யும்பொழுது, இந்த தீட்சை குறையும், நீச்ச தோஷம் கட்டுப்படும்.

கன்னியிலே சுக்கிரன் நீச்சம் பெறுகிறார். உச்சம் பெற்ற சுக்கிரன் திருமண வாழ்க்கையை சிறப்பிக்கமாட்டார். காலதாமதத்தை உண்டு பண்ணுவார், சுக்கிரன் கன்னியிலிருந்து உச்சம் பெறும் பொழுது, மகாலஷ்மியை வணங்க வேண்டும்.

ஒவ்வொரு வெள்ளியன்றும் மஹாலக்ஷ்மி கோயிலுக்குச் சென்று அவர்கள் தீபத்தை ஏற்றி வரும் போது, அந்நீச்ச தோஷம் கட்டுப்படுகிறது.

சூரியன் துலாமிலே நீச்சமடையும்பொழுது அது 7-வது இடமான திருமண பாகமாக இருந்தால் அவர்கள் செய்ய வேண்டிய தெய்வீக முயற்சி ஒவ்வொரு ஞாயிறு அன்று சிவ ஆலயங்களுக்குச் சென்று அல்லது ஞாயிறு அன்று வரும் கிரிவலத்தில் அல்லது சிவனின் நாள் ஞாயிற்றுக்கிழமையில் அவரை வசியம் செய்கின்ற கோதுமையைக் கொண்டு செய்யப்படுகின்ற சப்பாத்திகளை குழந்தைகளுக்கோ, உறவினர்களுக்கோ அல்லது பிற ஜீவராசிகளுக்கோ அளித்துவர சூரிய நீச்ச கிரக தோஷம் கட்டுப்படும்.

அதுபோன்று மகரத்திலே குரு நீச்சம் பெறுகின்றார் என்றால் தட்சிணாமூர்த்தி வழிபாடு, வியாழக்கிழமைகளிலே சிவ ஆலயங்களுக்குச் சென்று தீபமேற்றுவது, பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு உதவி செய்தல்.

பிராமணர்களை அன்பாக நேசித்தல்,வாசித்தல் அவர்களின் வழிமுறைகளைக் கேட்பதென்பது தட்சிணாமூர்த்தியை வழிபடும் சிறப்பை அளிப்பதால் அதைக் கடைபிடிப்பது.

மேலும், புதன் மீனத்திலே நீச்சம் பெறுகிறார். அவருக்கு புதனன்று பெருமாள் கோயிலிலே ஏற்றப்படுகின்ற தீபம் நீச்ச பரிகாரத்திற்கு அருமருந்தாகக் கருதப்படுகின்றது, இதைக் கருத்தில் கொண்டு மேற்காணும் பரிகாரங்கள் செய்து பலன் பெறவேண்டுமெனக்கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

No comments:

Post a Comment