Tuesday, May 12, 2020

சூரியன் வசியப்படுத்த தாந்த்ரீக பரிகாரம்.



இன்று நாம் சூரியனுக்குரிய தாந்த்ரீகப் பரிகாரங்கள், அதாவது நடைமுறையில் உள்ள பரிகாரங்களைப் பற்றி காணவிருக்கிறோம்

தாந்த்ரீகம் என்பது மாந்த்ரீகத்திற்கு எதிர்மறையானது, சூரியனை வசியம் செய்ய நம் முன்னோர்கள் அளித்த தாந்த்ரீக பரிகாரங்கள் நாம் கடைபிடிக்கும் பொழுது, சூரியன் நம் ஜாதகத்தில் எந்நிலையில் இருந்தாலும் அந்நிலை மாறி நன்மையை அளிப்பார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோதுமையினால் செய்யப்பட்ட சப்பாத்தி ரொட்டி, கோதுமை தோசை போன்றவற்றை செய்து தானும் சாப்பிடலாம்.

உறவினர்களுக்கும் கொடுக்கலாமா

குழந்தைகளுக்கு கோதுமை அல்வா வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். இதனால் பணியிடத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாகலாம். அரசு காரியங்கள் கைகூடும்

இரண்டாவது பரிகாரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரிய ஹோரையிலே ஒரு தாம்பாள தட்டில் சிறிதளவு கோதுமையை வைத்து அதன் மேல் கற்பூரம் ஏற்றி சூரியனை மூன்று முறை ஆராதனை செய்யவும். "ஓம் க்ரீம் சூரியாய நமஹ என்று சொன்னால் போதுமானது.

சூரிய தசை நடப்பிலே இருக்கும்பொழுது தினமும் கூட செய்யலாம். துரத்தி வரும் துன்பங்கள் தூரத்தில் போகும். சூரிய தசை முழுவதும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

மூன்றாவது பரிகாரம் ஞாயிற்றுக்கிழமை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாக சூரிய ஹோரை ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு தீபத்தை ஏற்றி, செந்தாமரை மலரை வைத்து "ஓம் ஹரீம் சூரியாய நமஹ"

என்று 108 முறை சொல்லி வழிபட, தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெற்றி பெறும், மேலதிகாரிகள் சம்பந்தப்பட்ட காரியங்கள் கைகூடும்

நான்காவது பரிகாரம் சூரியன் கோதுமையை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு ஒன்பது வெற்றிலை, ஒன்பது பாக்கு, ஒன்பது 25 பைசா நாணயங்கள் ஒரு காகிதத்தில் வைத்து மடித்து தலையணையின் அடியில் வைத்து படுக்கவும். அதை தொடர்ச்சியாக 6 ஞாயிற்றுக் கிழமைகள் செய்து வர வேண்டும். 6 முறை வழிபாடு முடிந்ததும், ஓடும் நீரில் விடவும்.

சூரியனுக்கு அர்ச்சனை செய்யும் பொழுது சூரியனின் சக்தி கிட்டி, உயரதிகாரிகளின் வசியம் ஏற்பட்டு, உயர்பதவிகள் சுலபமாக கிடைக்கும். தந்தைக்கோ அல்லது தந்தை வயதை ஒத்தவருக்கோ வஸ்திரதானம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினால் கூட சூரியன் மகிழ்ச்சி அடைவார். இதனால் நமக்கு அரசாங்க வசியம், அரசாங்க லாபம்

கிடைக்கும். ஒரு தலைவாழை இலை நுனியை வடக்கு முகமாக வைத்து அதன் மேல் ஒன்பது அரச இலைகளை வட்டமாக வைத்து, அதன் மேல் கோதுமை பரப்பி நூல் சுற்றிய பித்தளை சொம்பை வைத்து, கலசத்திற்குள் நீர் ஊற்றி ஏலக்காய், வெட்டி வேர் அட்சதயைப் போட்டு, கவசம் அமைத்து செந்தாமரைப்பூவால் அலங்கரித்து தேங்காய், வாழைப்பழம், சூடம், ஊதுபத்தி, சாம்பிராணி, சந்தனம், குங்குமம், கற்கண்டு, வெல்லம் வைக்கவும். ஐந்து முக குத்து விளக்கில் 5 திரி வைத்து ஏற்றி பூஜை செய்து "ஆதித்யாய இருதயம்"

மந்திரம் 27 முறை அல்லது "ஓம் ஹ்ரீம் ஆதித்யாய நமஹ" எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தூபதீபம் காட்டி 6 முறை வலம் வந்து சூரிய பகவானை நோக்கி, தங்கள் கோரிக்கைகளை வைக்கலாம்

அதன் மூலம் தலைமைப்பதவி கிட்டும்.

தீராத நோய்கள் தீரும். தீர்த்தத்தில் குளிக்க நல்ல தொழில் அமையும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் எருக்கு இலைகளை சுத்தம் செய்து வழிபாடு செய்ய பிதுர்தோஷங்கள் விலகும், கர்ம தோஷங்கள் மறையும், புத்திர பாக்கியம் உண்டாகும். மலை உச்சியிலே இருக்கும் சூரிய பகவான் சூரிய ஹோரையிலே வணங்க எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்

No comments:

Post a Comment