Tuesday, May 12, 2020

சந்திரனின் தோஷம் நீக்க ரகசிய தாந்த்ரீக பரிகாரம்.

இன்று நாம் சந்திரன் தாந்த்ரீக பரிகாரங்கள் பற்றி காணவிருக்கிறோம்

சந்திரனுக்குரிய தாந்த்ரீகப் பரிகாரங்கள் பலாமரத்தின் வடக்கு போகும் வேரை பூச நட்சத்திரம், அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை வரும் சுபதினத்தில் காப்புக்கட்டி அதை தாயத்தாகக் கட்டிக் கொள்ள சந்திரன் திசை முழுவதும் அவர்களுக்கு பலன் கொடுக்கும்.

சந்திரபகவானுக்கு திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை பூஜை செய்து, பால், தயிர் நைய்வேத்தியம் செய்ய வேண்டும்.

கலச நீரால் குளிக்க வேண்டும். அதனால் தாய்க்கு சுகமுண்டாகும், வண்டி, வாகனங்கள் வாங்கும் அபிவிருத்தி உண்டாகும்.

திங்கட்கிழமை முதல் ஹோரையில் நெல் 1 கிலோ எடுத்து 27 முறை தலையை சுற்றி நீரில் போடவும். சகல சந்திர தோஷங்களுக்கு தடைகள் விலகி நன்மை கிடைக்கும். ஒரு தாம்பாளத்திலே நெல் வைத்து அதன் மீது கற்பூர ஆரத்தியை ஏற்றி பௌர்ணமி அன்று சந்திரனுக்கு ஆராதனை செய்து சுற்றி வந்து மூன்று முறை காண்பித்து வழிபட எண்ணிய எண்ணமெல்லாம் பூர்த்தியாகும்.

நவகோள்களிலே சந்திரபகவான் அக்னிப்பகுதியிலே இருக்கின்றார். கிழக்கு முகமாக அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி 10 முறை வலம் வர காரியங்கள் கைகூடும்

வீட்டில் சந்திரபாகமான அக்னி மூலையில் வாழை இலையின் மீது பச்சரிசி பரப்பி அதன் மீது நூல் சுற்றிய கலசம் வைத்து, கலசத்தினுள் அட்சதை, வெட்டி வேர், பச்சைக்கற்பூரம் இரண்டு குத்துவிளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி 5 முகங்களிலும் திரி வைத்து தீபம் ஏற்றி வைக்கவும். தீபதூபம் காண்பித்து சந்திரன் மந்திரத்தை சொல்லி வழிபட சந்திர தசை நல்ல பலனைக் கொடுக்கும்.

முருங்கை மரத்திற்கு திங்கட்கிழமை காலை 6-7 மணிக்குள் தீபதூபம் காட்டி, நைவேத்தியம் செய்து 10 முறை வலம் வந்தால் சந்திரதசை பலன் கொடுக்கும்.

தாய்க்கு வஸ்திரம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்க சந்திரதசை நற்பலன்களைக் கொடுக்கும்.

பௌர்ணமி அல்லது இரவு சந்திரனுக்கு தீபதூபம் காட்டினால் சந்திர தசை நல்ல பலன்களைக் கொடுக்கும். தெய்வ அருளும் கிட்டும். 10 வாரம் செய்வதற்குள் தொழில், தன விருத்தி கிடைக்கும் சந்திர கிரிவலம் செய்வதும், மேற்கூறிய பரிகாரங்கள் கடைபிடிப்பதும் நற்பலன்களை அளிக்கும் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்

No comments:

Post a Comment