Wednesday, May 13, 2020

பணத்தை அதிகரிக்கும் ஜோதிட ரகசியம்.

சில ஜாதகங்களை எடுத்துக்கொள்ளும் பொழுது, பணத்தை குறிக்கின்ற ஒரு கிரகம் புதன் ஆகும். இந்த புதன் நல்ல நிலையிலேயே ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால், அவர்களுக்கு, இயற்கையாகவே, சேமிக்கும் பழக்கம் வந்து விடுகிறது. அப்படி இல்லாதவர்களுக்குத்தான், இந்த பரிகாரம் சொல்லப்படுகின்றது.

பண விருத்தி கொடுக்கும் கிரகம்

பணத்தை விருத்தி செய்கின்ற ரகசியத்தை ஒரு தனிமனிதனுக்குக் கற்றுக் கொடுக்கும் கிரகம் புதன் என்றால் அது மிகையாகாது.

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் புத்தியுடையவர்களாக மட்டுமின்றி மேலும் பணக்காரர்களாக மாறி விடுகிறார்கள்

அதற்கான வாய்ப்பாடு என்னவென்றால், [புதன் 8லோ, 6லோ, 12லோ மறையக்கூடாது. குறிப்பாக, மீனராசியிலே புதன் மறைந்து, அங்கே மெலிந்தால், நீச்சமடைந்துவிட்டால் சேமிப்பு என்பது அவர்களுக்கு சாத்தியமானது அல்ல

ஆனால், அப்படிப்பட்டவர்களும் சேமிக்கத் தொடங்குகிறார்கள்.

புதன் பகவான் வழிபாடு

சேமிப்பு என்பது கண்டிப்பாக

கடைபிடிக்கப்பட வேண்டிய ஒரு நல்ல பழக்கமாகும். அதற்கு ஒரு அருமையான பரிகாரம் உள்ளது.

இந்த எண்ணிக்கையிலான வெந்தயத்தை எடுத்து தூய வெள்ளைத் துணியிலே முடிந்து அதை பூஜையறையிலே வைத்து அதை தினமும், உள்ளங்கையிலே வைத்துப்பார்த்து, புதனை நீங்கள் வேண்டிக் கொள்ள வேண்டும். நிச்சயம் பலன் கிடைக்கும்.

மேலும், இவ்வகை அமைப்பை பெறாதவர்கள், இந்த சூழ்நிலை கிடைக்கப்பெறாதவர்கள், வெள்ளெருக்கு விநாயகரை வழிபடலாம்.

1 comment: