அன்பர்களே, இன்று நாம் எடுத்துக் கொண்டுள்ள தலைப்பு, "வேலையின்மை".
வேலையின்மை எதனால் வருகிறது, யாரைப்பாதிக்கின்றது, என்பதேயாகும்.
ஒருவரது "ஜனன ஜாதகத்திலே" வரும் பத்தாவது இடம்தான் "கர்மஸ்தானம்" என்று சொல்லப்படுகின்ற வேலைக்கான ஸ்தானம். அந்த வேலை ஸ்தானத்துக்குரிய கிரகம் 6இலோ, 8இலோ, 12இலோ மறைந்திருந்தால் அல்லது 6ஆம் ஆதி, 8ஆம் ஆதி, 12ஆம் ஆதி ஆகியவற்றுடன் இணைந்திருந்தால் சதா சர்வகாலம் அவர்களுக்கு வேலையில் பிரச்சினை இருக்கும். செய்து கொண்டிருக்கும் வேலையிலும் ஆர்வம் இருக்கிறது. அதை அவர்கள் ஒரு அதிருப்தியோடுதான் செய்து கொண்டிருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு மிகமிக சக்திவாய்ந்த பரிகாரத்தைதான் இன்று நாம் அளிக்க இருக்கிறோம். அதாவது இப்படிப்பட்டவர்கள், மாதத்தில் புனர்பூசம் என்ற நட்சத்திரத்தின் 4ஆம் பாதம், கடக ராசியிலே உலா வரும் நேரத்திலே, அதை ஜோதிடர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
புனர்பூசம் 1,2,3 மிதுனதிலிருக்கும் போது இந்த பூஜையை செய்யக் கூடாது. 4வது இடத்தில் வரும் புனர்பூசம் கடக ராசி சார்ந்ததாக இருக்கும்.
அப்போது, நல்லதொரு ஓரையில் ஆஞ்சநேய மூர்த்தியின், சுந்தரகாண்டம் என்ற புனித நூலை எடுத்துக் கொண்டு, ராமர் பட்டாபிஷேகம் படம், அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லுகின்ற படம். இதை வாங்கி வைத்துக் கொண்டு, சொல்லப்படுகின்ற புனர்பூசம், சந்திரன், கடகத்திலே வருகின்ற அந்த நேரத்தில் உங்களுடைய பூஜையை நீங்கள் துவங்கலாம்.
ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு அத்தியாயம் என்ற விதத்திலே அந்த அஞ்சநேய மூர்த்தியை வழிபட்டு, இராமரின் பட்டாபிஷேகப்படத்திற்கு முன்பு, வெல்லம் குழைத்த சம்பா கோதுமையில் தயாரித்த சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக படைத்து, ஒரு நாளைக்கு ஒரு சர்கம்(அத்தியாயம்) என்று நீங்கள் பாராயணம் செய்கின்ற காலகட்டத்தில், நீங்கள் சங்கல்பம் என்று எதை வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், உங்களுடைய ஜனன ஜாதகத்திலே உங்களுக்கு பாதகமாக இருக்கும் வேலைவாய்ப்புக்குரிய அந்த கிரகத்தை வைத்துக் கொண்டு, கடவுளை உளமார நினைத்து, உங்களுக்கு ஏற்ற நிரந்திரமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கு ஆஞ்சநேயமூர்த்தியின் கருணை கிடைக்க வேண்டுமன்று பிரார்தித்து பூஜையை துவங்க வேண்டும்.
அற்புதமான அந்த நாளில் அந்த காண்டத்திலுள்ள அத்தியாயத்தை இவர்கள் படித்து வரும் போது அவர்களுக்கு அதன் பலன் தெரிந்து விடும், 68 அத்தியாயங்கள் கொண்டதுதான் சுந்தர காண்டம். சுந்தரன் என்றாலே அழகு என்று அர்த்தம். ஆஞ்சநேய மூர்த்தி நினைத்து இந்த காண்டத்தை பயபக்தியோடு படித்து வருகின்ற நேரத்திலே நீங்கள் முயற்சி செய்து எதிர்பார்த்த வேலைவாய்ப்பு நிச்சயமாக உங்களுக்கு கிடைத்துவிடும். ஏனென்றால், ஆஞ்சநேயருக்கு கட்டுப்படாத கிரகங்களே இல ல. சதா சர்வகாலமும் சூரியனின் அம்சமாக இருக்கின்ற, இராமனை, அந்த ஆஞ்சநேயர் தியானத்திலே "ராம், ராம்"
என்று சொல்லிக் கொண்டிருப்பதால், அந்த சூரியனை சுற்றிதான், மற்ற கிரகங்கள் இயங்குகின்றன, என்று கூறுகிறது ஜோதிடம்.
அப்படிப்பட்ட, ராமமூர்த்தி, தசாவதாரத்திலே சூரியனை சுட்டிகாட்டிடும் கிரகமாக காட்டுகிறார். மேலும், ராமாயணத்தின் ஒரு பகுதிதான் இந்த சுந்தரகாண்டம், இந்த சுந்தரகாண்டத்தை நீங்கள், ஆரம்பம் முதல் தொடங்கி பாராயணம் செய்து, வரும்போது நிச்சயமாக மனமாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும்.
என்று கூறி இனிதே இப்பகுதியை நிறைவு செய்கிறோம்.