Tuesday, June 30, 2020

முதியோர் இல்ல தோஷம் நீங்க

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, சில பெற்றோர்கள் தங்களின் அந்திமகாலத்திலே, வயோதிக நேரத்திலே பெற்ற பிள்ளைகள் இருந்தும், அவர்கள் கவனிக்கப்படாமல் முதியோர் இல்லங்களுக்கு மிரட்டப்படுகிறார்கள், துரத்தப்படுகின்றார்கள். இது ஏன்

இதற்கு ஜாதகம் காரணம்

இது ஏன் என்று பார்க்கும்போது, ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்திலே 5 வது இடத்திலே குரு இருந்தால், அந்தணன் தனியே இருக்க, அனத்தவர்கள் மிக்க உண்டு. அந்தணன் என்றால் குரு புத்திரகாரகன். 5-வது இடத்திலே தனித்து இருந்தால், குழந்தை பெரும் பாக்கியத்தைப் பெறுகின்றார்கள். ஆனால் பிறக்கின்ற முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அவர்கள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை.

ஏராளமான துன்பத்தை அனுபவிக்க வழி செய்துவிடும்

நம்முடைய ஜாதகத்திலே 5-வது இடத்திலே குரு தனியாக இருந்து, முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் அந்திமகாலத்திலே வருந்த வேண்டியது இருக்கும். அந்த குழந்தையின் உடைய ஜாதகத்திலே நான்காவது இடம் தாயாரைக் காட்டுகின்றது. ஒன்பதாவது இடம் தகப்பனாரைக் காட்டுகின்றது. இந்த

நான்காவது இடமும், ஒன்பதாவது இடமும் பாதிக்கப்பட்டால், அந்தப் பெற்றோர்கள் ஜாதகத்திலே மோசமான தசையைக் கடக்கும்பொழுது அவர்களுடைய அந்திமக்காலம் அதாவது அவர்களுடைய கடைசிக்காலம் அவஸ்தைகள் நிறைந்ததாக இருக்கும்.

அன்பர்களே, இது உங்களை பயம் காட்டுவதற்காக கூறப்படுவதால்.

பொதுவாக சாலையிலே, இது விபத்துப்பகுதி என்று நம்மை எச்சரிக்கும் நோக்குடன் பலகைகள் வைத்திருப்பார்கள், அது எதற்காக என்றால் நம்மை பாதுகாக்கவேயன்றி, பயம் காட்டுவதற்காக அல்ல. அதுபோலத்தான் ஜோதிடமும்

ஜாதகத்தை பார்க்கும் பொழுது, இந்த அமைப்பைப் பெற்றவர்களுக்கு நாம் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அவர்களுடைய அந்திமக்காலத்தில் கொடுந்துன்பம் அவர்களைத் தாக்காமல் இருக்கும் ஒரு பரிகாரம் இங்கு அளிக்கப்படுகின்றது.

காலம் என்றாலே, நேரத்தைக் குறிக்கின்றது. அது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது, என்றால் பைரவர். அதனால்தான் அவருக்கு "கால பைரவர்" என்ற பெயர் வந்தது

காலபைரவர் இடம் தான் நம்முடைய கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று பிடிகளும் இருக்கின்றன.

இப்படிப்பட்ட அபாயகரமான அமைப்பைப் பெற்ற ஜாதகர்கள், என்ன செய்ய வேண்டுமென்றால், காலபைரவரை வியாழன்தோறும் வணங்கி வர, வியாழன் என்பது குருவைக் காட்டுகின்ற தினமாகவும், புத்திரஸ்தானத்தைக் குறிக்கின்ற தினமாகவும் இருப்பதால் அன்றைய தினம் கால பைரவரை வணங்கி என் பிள்ளைக்கு நல்ல புத்தியைக் கொடுத்து என்னுடைய அந்திமக்காலத்திலே என் கஷ்டங்களைக் குறைக்க வேண்டும், "காலபைரவரே" என்று மனதார வேண்டிவர, நல்ல நிலையிலே இருக்கும்பொழுதே இந்த வழிபாட்டை செய்து வர உங்களுடைய விதி கட்டுப்பாட்டுக்குள் வரும், உங்கள் துன்பம் கட்டுப்படும், மட்டுப்படும் என்றால் அது

காலபைரவரின்" கருணையே

நிச்சயமாக நீங்கள் ஆனந்த நிலைக்கு வரவில்லை என்றாலும்கூட, மிகுந்த பாதுகாப்பு நிலைக்கு வந்துவிடுவீர்கள் என்பது உறுதி. இந்த ஜோதிடம் பார்ப்பது எதற்கு என்றால், முன்கூட்டியே நமக்கு வரும் அபாயங்களை உணர்ந்து

கொள்ளத்தான். உங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பரிகாரங்களின் மூலமும் நீங்கள் நிச்சயமாக பலனடைவீர்கள் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

வாகன விபத்தை தவிர்க்க பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது.

வாகனவிபத்துக்கள் நீங்க மேற்கொள்ளும் பரிகாரமுறைகள் குறித்ததாகும்.

அன்பர்களே, நாம் எவ்வளவுதான் பொறுமையுடனும், பொறுப்புடனும், கவனமாகவும் பார்த்து வாகனங்களை இயக்கினாலும், ஒரு சிலர் தங்களின் அதீத அவசரத்தாலும், அதிக வேகத்தாலும், பிற வாகனஓட்டிகளை பற்றிய உணர்வு சிறிதுமில்லாமல் எதிர்பாராத விபத்துக்களை ஏற்படுத்திவிடுகின்றன.

அதற்கு முக்கிய காரணம் நமது ஜாதக அமைப்பாகும். நமது ஜாதகத்திலே நமக்கு பாதகமான சில நிகழ்வுகள் நடக்கின்றன.

அதனால் நாம் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதாவது ஒருவருடைய ஜனனஜாதகத்தில் 6வது இடத்திலே செவ்வாய் இருக்கப்பெற்றவர்கள், 6வது இடத்திலே குரு இருக்கப்பெற்றவர்களோ, கோச்சார ரீதியாக பார்க்கும்பொழுது, 6வது இடத்திலே குரு இருக்கப்பெற்றவர் செவ்வாய் வருகின்ற நேரத்தில் இந்த விபத்துக்கள் ஏராளமாக ஏற்படுகிறது.

6 வது இடத்தை ரணம்,ருணம், சத்ரு என்று அழைக்கிறார்கள். ரணம் என்றால் காயம், விபத்தின் மூலமாக ஒரு மனிதன் காயப்படுகிறான். எப்பொழுதும், அது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி அதை வெளியில் எடுக்கும்பொழுது நம் முன்னோர்களை நினைக்க வேண்டும். நம் தாய், தந்தையரை நினைக்க வேண்டும், நமக்கு மிகவும் பிடித்த கடவுளை நினைக்க வேண்டும். அவ்வாறு நினைத்து வாகனங்களை எடுக்கும் பொழுது தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் என்ற நிலையில் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

இந்த விபத்தில் இருந்து பரிபூரணமாக தப்பிக்க மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் போன்ற செவ்வாயின் சாரம் உள்ள நட்சத்திரங்களில், வள்ளி,தெய்வானையுடன் உள்ள முருகப்பெருமானை ரோஜா மலர் கொண்டு, அன்றைய தினத்திலே சென்று ஆலய வழிபாடு செய்ய, அந்தச் செவ்வாய் அதிபதியான முருகன் கருணையால், விபத்து நேராத வண்ணம், விபத்து ஆபத்து நேராத வண்ணமாக அந்த முருகனின் கருணை உள்ளம் உங்களை காப்பாற்றுகிறேன்.

அதுபோல, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி என்று சொல்லப்படுகின்ற குருவின் நட்சத்திரத்திலே வியாழனன்று சிவ வழிபாடு அல்லது தட்ஷிணாமூர்த்தியின் வழிபாடு செய்துவர, குரு 6ல் இருந்து கோச்சாரம் நடத்துகின்ற அந்த சூழ்நிலையிலும் அல்லது 6 லிருந்து தசை நடத்துகின்ற அந்த சூழ்நிலையிலும் உங்களை இந்த பிரார்த்தனை, இந்த பரிகாரம் நிச்சயமாக காப்பாற்றும் விபத்து என்று சொல்லியவுடன் நீங்கள் நடுநடுங்க வேண்டாம். ஏனென்றால் நவக்கிரகங்களின் கட்டளைப்படிதான் விபத்து நடக்கிறது. இந்த விபத்து நடக்கும் காலகட்டம் நமக்கு பாதகமாக இருக்கிறது.

இதில் எள்ளளவும் சந்தேகமில்லை .

ஆனால், இறைவனின் ஆணைப்படி இவை நடக்க இருப்பதால் நீங்கள் Dr.ஸ்ரீகுமார் அவர்கள் கூறிய அந்த தினத்திலே, கூறிய நட்ச்சத்திரத்திலே அந்தக்கிழமையிலே சென்று வழிபாடு செய்யும்பொழுது நிச்சயமாக இதுபோன்ற விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம்.

மேலும் யார்யாருக்கெல்லாம் ராகு தசை நடப்பிலிருக்கின்றதோ அந்தக்காலகட்டத்தில் இரு, அல்லது நான்கு சக்கரவாகனங்களை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை பயன்படுத்த வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். இயலாதவர்கள் பேருந்து அல்லது ரயில் மூலம் பயணம் மேற்கொள்ளலாம். ராகுவின் அதிபதியான துர்கையை வழிபட பலன் கிடைக்கும்.

என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

குழந்தை இறப்பு தோஷம் நீங்க

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, ஒரே நேரத்தில் தாய், தந்தையை இழக்கும் குழந்தைகளின் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும். ஒரு சில குழந்தைகளுக்கு தந்தை இருப்பதில்லை, ஒரு சில குழந்தைகளுக்கு தாய் இருப்பதில்லை, ஆனால், ஒரு சில குழந்தைகளுக்கு தாயும் இல்லை,தந்தையும் இல்லை என்ற நிலையை நினைத்துப்பாருங்கள் இதயத்திலிருந்து இரத்தம் வரும் கண்களிலிருந்து ரத்தக்கண்ணீர் பீறிடும்

அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவு துன்பகரமான நிலையென்று.

குழந்தைகள் புண்ணியம் செய்திருந்தால்தான் தாய் தந்தை கடைசிவரை அந்த குழந்தைகள் இருந்து ஆனந்தநிலைக்கு செல்வார்கள்.

ஒரு குழந்தை அமாவாசையிலே பிறக்கும்பொழுது அதன் ஜாதகத்தை நீங்கள் கண்டிப்பாக ஜோதிடர்களிடம் காட்டி சோதித்துக் கொள்ள வேண்டும். இது ஏன் சொல்லப்படுகின்றது என்றால், ஒரு ஜோதிடத்தில், ஒரு ஜாதகத்தில் நான்காவது இடம் தாயை காட்டுகின்றது.

ஒன்பதாவது இடம் தந்தையைக் காட்டுகிறது , ஐந்தாவது இடம் பூர்வ புண்ணியம் என்று சொல்லப்படுகின்ற முற்பிறவியின் தொகுப்பைக்காட்டுகின்ற இடமாக இருக்கிறது.

சூரியனும், சந்திரனும் எப்பொழுது வானிலே சஞ்சாரம் செய்கிறார்கள், அவர்களிருவரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பது அமாவாசை தினத்தன்று, அப்பொழுது ஒரு சிலரது ஜாதகத்திலே நான்காவது இடத்திலோ, ஐந்தாவது இடத்திலோ அல்லது ஒன்பதாவது இடத்திலோ இந்த சந்திரன் சூரியன் கூடி இருக்கப்பிறந்தவர்கள் அவர்கள் பிறந்த ஒரு மாதகாலத்திலோ, ஒரு வருட காலத்திலோ தாயையும், தந்தையையும் இழந்து விடுகிறார்கள்.

நம் முன்னோர்கள் அனைவரும் பல விவரங்கள் அறிந்த வல்லுனர்கள், இது உண்மை , அவர்கள் அளித்துச் சென்ற பரிகாரமுறைகளை நீங்கள் அறிந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளை, சங்கடங்களைத் தீர்த்து நல்வாழ்வு பெறுவீர்கள்.

தாயைக் கட்டுகின்ற நான்காவது இடம் தந்தையைக் காட்டுகின்ற ஒன்பதாவது இடம், இதில் நான்காவது இடத்தில் சூரியன், சந்திரன் சேர்க்கை அமைப்பு அல்லது ஐந்தாவது இடத்தில் அல்லது ஒன்பதாவது இருக்க, அந்த அமாவாசை தினத்திலே உதித்த குழந்தைகளுக்கு தாய்.தந்தையைக் காப்பற்றுகின்ற பரிகாரத்தை இப்பொழுது நீங்கள் பெறப் போகிறீர்கள்.

இந்தத் தந்தையைக் குறிக்கின்ற கிரகமான சூரியனின் ஸ்தலம் "திங்களூர்" என்ற ஊர்

வருடத்திற்கு ஒருமுறை இந்தகோயிலுக்கு சென்று, என் குழந்தைகளை நீங்கள் தத்தெடுத்துக் கொள்ள வேண்டும், உங்களுடைய குழந்தைகளை பாவித்து எங்களை நீங்கள் கரை சேர்க்க வேண்டும் எங்கள் ஆயுளை வளர்க்க வேண்டும். என்று கூறவேண்டும்.

வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு இங்குள்ள பரிகார முறை சாத்தியமா என்றால் சாத்தியம் இல்லை. அப்படிப்பட்ட அன்பர்களுக்கு வேறு ஒரு அற்புதமான வழி இருக்கின்றது. நாம் தினந்தோறும் இரண்டு கிரகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். காலையிலே சூரியன், இரவில் சந்திரன். இப்படி பார்க்கும்பொழுது, சூரியனே என் குழந்தைகளை தத்து எடுத்துக் கொள் சந்திரனே என் குழந்தைகளை தத்தெடுத்துக்கொள், பெற்றெடுத்த எங்களுக்கு அவகள் சொந்தமாகவில்லையென்றால், நீதான் எங்களுக்கு ஆயுளைக் கொடுத்து எங்களின் கடமையை பூரணமாக செய்து முடிக்க வழிகாட்ட வேண்டுமென்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் குறையை எடுத்துச்சொல்லி மனதார பூஜை செய்யவேண்டும். நிச்சயமாக உங்கள் ஆயுள் பலம் வளம் பெறும் என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்க

Monday, June 29, 2020

முருகனின் சிறப்பு பழமொழிகள்

முருகன் குறித்த பழமொழிகள் தொகுப்பு

வேலை வணங்குவதே வேலை

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை

வயலூர் இருக்க அயலூர் தேவையா

காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி

அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டி சுப்பனைப் பாடுவேனா

முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை; மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

கெந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை

கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்

பழனி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?

சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை

செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?

திருத்தணி முருகன் வழித்துணை வருவான்

வேலனுக்கு ஆனை சாட்சி.

ஒ வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்கப் பயமுமில்லை

செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை

கந்தன் பாதம் கனவிலும் காக்கும்

கந்தசஷ்டி கவசம் "விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து.

குழந்தைகளை பாதுகாக்கும் ரகசியம்

*#குழந்தைகளுக்கு அடிபடாத ரகசியம்

பொதுவாக நடை பயிலும் குழந்தைகள் கீழே விழுந்தாலும் பெரிதாக அடிபடுவதில்லை

இதன் ரகசியம் என்ன

அசுரனான இரண்யகசிபு, தன்னையே கடவுள் என உலகிற்கு அறிவித்தார்.

ஆனால் அவனது மகன் பிரகலாதன், சிறுவயது முதல் #விஷ்ணு பக்தனாகவளர்ந்

தான்

தனது கட்டளையை பிரகலாதன் ஏற்க வேண்டும் என எதிர்பார்த்த இரண்யனின் முயற்சிகள் வீணாயின

கோபம் கொண்ட இரண்யன், மகன் என்றும் பார்க்காமல் மலை உச்சியிலிருந்து உருட்டி விட உத்தரவிட்டார்.

பணியாளர்களும் உத்தரவை நிறைவேற்றினர்.

எட்டெழுத்து மந்திரம் ஓம் நமோ நாராயணா என ஜபித்தபடியே உருண்டான் மலையில்

அடிபடாமல் அவனை பூமாதேவி_காத்ததோடு,"

பிரகலாதா!

விரும்பும் வரம் கேள்'' என்றும் கேட்டாள்

தாயே! என்னை அடிபடாமல்_காத்தது போல

என் போன்ற குழந்தைகள் நடை பயிலும் போது கீழே தவறி விழும் போதும் தாங்கிப் பிடித்து கொள்"

என்றான்

அவளும் சம்மதித்தாள்.

இந்த அரிய வரத்தைப் பெற்ற பிரகலாதனுக்கு மும் நன்றி சொல்வோம்

பணம் கொட்ட குபேர மந்திரம்



குபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கும்?... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க

இந்து மதத்தை பொருத்த வரை தொய்வங்களின் அருளை பெற நிறைய மந்திரங்களும் பாடல்களும் ஓதப்படுகின்றன.

இந்த மந்திரங்களுக்கு தெய்வ அருளை இழுக்கும் சக்தி உள்ளது என்பதால் தொன்று தொட்டு இந்த பழக்கம் இருந்து வருகிறது

இந்த மந்திரங்களை கொண்டு நல்ல உடல் நலத்தோடு செல்வ செழிப்பையும் நாம் பெறலாம்

அப்படிப்பட்ட செல்வ வளங்களை அள்ளித் தருவது தான் இந்த லட்சுமி குபேர மந்திரம்.

லட்சுமி குபேர மந்திரம் 1

ஓம் ஸ்ரீ மகாலட்சுமி சவித்மஹே விஷ்ணு பத்ந்யைச தீமஹி தந்நோ லக்ஷ்மி, ப்ரசோதயாத்.

பொருள்

ஸ்ரீ விஷ்ணுவின் மனைவியான மா மகாலட்சுமி நினைத்து வழிபடுகிறேன்.

அவரை வாழ்த்துகிறேன். என் ஆசைகள் நிறைவேற எனக்கு அருள்பாவிக்க வேண்டும் என பிராத்திக்கிறேன்.

குறிப்பு

இந்த மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் ஓதி வந்தால் விரைவிலேயே உங்கள் ஆசைகள் ஈடேறும்

லட்சுமி குபேர மந்திரம் 2

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் இங் சாங் ஓம்

ஹ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய நமஹ

சகல ஹ்ரீம் சகல ஹ்ரீம் சாங் எங் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீ ஓம்

பொருள்

இது லட்சுமி பீஜா மந்திரம்.

இந்த மந்திரத்தை ஓயாமல் ஓதி வந்தால் லட்சுமியின் திருவருள் கிட்டும்

குறிப்பு

இந்த மந்திரமானது அஷ்ட லட்சுமிகள் 10 பேரையும் துதிக்கின்ற சக்தி வாய்ந்த மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது லட்சுமி சரஸ்வதி, காளி போன்ற பத்து அவதாரங்களையும் வணங்குகின்ற பலன் கிடைக்கும்.

Sunday, June 28, 2020

திருவாசகத்தின் பெருமை

ஓம் நமசிவாய

சிவபுராணத்தின் பெருமைகள்

தில்லையில் ஒரு ஆடி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்

வந்தார் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய திருவாசகத்தை நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்

மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 5 பாடல்களையும் சொல் சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்

எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்

மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை நண்டு திகைத்து போயினர்

 ஒலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்"

எழுதியது என கையொப்பம் இடப்பட்டிருந்தது

மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்து அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்

 ஓலைச்சுவடிகளில் உள்ள ஒவ்வொரு திருவாசகம் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய்" ஆம் அழகு சொல்ல எழுதப்பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்

தீட்சதர்கள் மாணிக்கவாசகர் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

 மாணிக்கவாசகர் odi புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் என்றார்.

அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமாள் அருகே ஒரு ஒளி தோன்றியது அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்

ஆக ஆனி மகம் மாணிக்கவாசகர் குரு பூசை நாள் ஆகும்

சிறப்பு 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகம் சிவபுராணம் தொடங்குவது

சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் வரிகள் வாழ்க என முடியும்.

சிறப்பு -3 அதை அடுத்த வரிகள் வெல்க என முடியும்

சிறப்பு -4 அடுத்த பேரிகள் போற்றி என முடியும்

இவ்வாறு 6:5-8 என அமர்ந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்கள் குறிக்கிறது

சிவபுராணத்தின் 32 வது

வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்

இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சுமமாக குறிக்கும்

திருவாசகத்தின் 18வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

ரமண மகரிஷி திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்

காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகம் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்

அவர்களுக்கு வரிசையாக குழந்தைகள் பிறந்தன

இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்

புல்லாகி, பூடாகி, புழுவாய் மரமாகி, பல் விருகமாகி பாவையாய் பாம்பாகி சங்ப்புராங்கானட்புகா கொடும்,

புல்லாகி பூடாகி, புழுவாய் மரமாகி, பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய், பேயாய் கணங்களாய்" என காலை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடி கீழ்

திருச்சிற்றம்பலம்  மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி.

எப்பொழுதும் கஷ்டமான ஜாதகமா?

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, மனிதர்களில் பலர் தான் பிறந்ததிலிருந்து, இன்று வரை கஷ்டப்படுகிறேன், என் வாழ்க்கையில் துரதிஷ்டமே தொடர்கிறது, என்னைபோன்ற அதிர்ஷ்டமில்லாத, மிகவும் துர்பாக்கியசாலி இவ்வுலகில் வேறு எவருமில்லை , நான் கஷ்டப்படுவதற்காகவே பிறந்திருக்கின்றேன், முற்பிறவியிலே நான் விதைத்த பாவ விதைகளின் கதிர்களை இப்பிறவியில் அறுவடை செய்து கொண்டிருக்கின்றேன். அதன் பலன் என் மரணம் வரை விடப்போவதில்லை, அதிலிருந்து எனக்கு விடுதலையும் இல்லை , என்று நெருப்பில் விழுந்த புழுவினைப் போன்று தினம் தினம் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்வாறு துடித்தாலும், மன ஓரத்தில் அத்துன்பங்களிலிருந்து தங்களுக்கு ஓர் விமோசனம் கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் உயிரினும் மேலான அன்பர் பெருமக்களே, உங்கள் துடிப்பைக் கண்டு எங்கள் மனம் பொறுக்குமா? எத்தனையோ கஷ்டங்களுக்கு பரிகாரங்கள் அளித்து பெண்கள் கண்ணீரைத் துடைத்த நீங்கள், இதற்கு மட்டும் பரிகாரங்கள் கூறாமல் விடுவோமா என்ன? சரி, கேளுங்கள் பரிகாரத்தை, பெறுங்கள் பலன், பெற்றபின் மகிழ்ந்து ஆனந்தக்கூத்தாடுங்கள் அதுதானே, எங்களுக்கும் வேண்டும் நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் நான் நமச்சிவாயா என்று சொல்லும்போது, அப்பர் பெருமான் சொல்லும் வாக்கைப் பாருங்கள் நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாள்தான் அதிர்ஷ்டமில்லாததாக இருந்தால் என்னை என்ன செய்துவிடும். கோள்தான் கொடூரமாக நான் பிறக்கும்போது இருந்தால் என்ன செய்து விட முடியும்

நமச்சிவாயா என்ற அடையாள வார்த்தையை சொன்னால் போதும் அனைத்தும் தகர்ந்து விடும். என்ற தாரக மந்திரத்தை அப்பர் பெருமான் சொல்லும்பொழுது.

நீங்கள் கவனியுங்கள், ஆழ்ந்து ஆடை காத்து அதை சிந்தனை செய்தால், விதியை வெல்லலாம், விதியை வெல்வதற்கு வழி இருக்கின்றது. அதாவது, "நமச்சிவாய நமக என்று சிந்திப்போர்க்கு' அபாயம் இல்லை , உபாயம் இதுவே, என்று சொல்லும் ஔவை பிராட்டி, "சிவாய நமஹ என்று சிந்திப்பவர்களுக்கு, அபாயம் இல்லை , உபாயம்,  என்றால் இதுதான் வழி, விதி வழி மதி, மதி வழி விதி",என்ற அமைப்புள்ள முறை ஏற்படும்.

நாமனைவரும் என்ன நினைக்கிறேன்.

நம் ஜாதகத்தை பார்க்கும்பொழுது இதுதான் விதி என்று நொந்து கொள்வோம், அப்படிப்பட்டவர்களுகுத்தான் விதியை மதியால் வெல்லும்' முறை.

எப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் கஷ்டங்கலிருக்கும், அவர்களின் ஜாதகத்தைப் பார்க்கும் பொழுது லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் பனிரெண்டாம் ஆதி இருந்தால் லக்னாதிபதி ஆறாவது இடத்தில் இருந்தா பத்தாம் ஆதி பனிரெண்டாவது இடத்தில் இருந்தால் துன்பம் தொடரும். அதிலிருந்து மீள ஓர் உபாயம் உள்ளது

ஸ்ரீராமர் ராஜகுலத்திலே பிறந்த அற்புதமான ஜாதக அமைப்பை உடையவர்.

அவர் மானிடப்பிறவியை எடுத்ததால் துன்பத்திற்கு உள்ளானவர் அச்சமயத்தில் ஸ்ரீ ராமரை காப்பாற்றியவர் அனுமன் அப்படிப்பட்ட அனுமனின் சுந்தர காண்டத்தை நாம் படிக்கும் பொழுது உங்களுக்கு அற்புதமான பலன்கள்

உங்கள் வாழ்க்கையிலே வந்து விடும்

எப்படிப்பட்ட தரித்தரமான ஜாதகமாக இருந்தாலும், சரி எப்படிப்பட்ட துரதிஷ்டமான ஜாதக அமைப்பாக இருந்தாலும் சரி, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அது,

மாதத்திலே ஒரு நாள், புனர்பூசம் என்ற நட்சத்திரம், கடக ராசியிலே இருக்கும்போது, இராமரின் பட்டாபிஷேகப்படம் ஒன்றை எடுத்து அதை பூஜை செய்வதற்குரிய இடத்தில் வைத்து இராமன், சூரியன் அம்சமாக இருப்பதால் தூய கோதுமையில் செய்த சர்க்கரைப்பொங்கலை அவருக்கு நைவேத்யம் செய்து, ஒரு புனர்பூச நட்சத்திரம் கடக ராசியிலே ஜொலிக்கும் பொழுது, சந்திரன் சஞ்சாரம் செய்யும் பொழுது, நீங்கள் இராமரின் பட்டாபிஷேகப்படத்திற்கு முன்பாக அமர்ந்து பாராயணம் செய்யத்துலங்க வேண்டும்

அதுபோன்று நாளொன்றுக்கு ஒரு சர்கம் அதாவது ஒரு அத்தியாயம் என்ற விகிதத்திலே, அறுபத்தெட்டு சர்கங்கள் நிறைவடைந்தபிறகு, மறுபடியும் இந்த நைவேத்யத்தை படைத்து, இராமர் பட்டாபிஷேகப்படத்திற்கு முன்பு, உங்கள் ஜாதகத்தை வைத்து நாளொன்றுக்கு இந்த சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்து பூஜை செய்து வர, அனுமனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்து நீங்கள் வாழ்வில் மிகவும் உயர்ந்த நிலைக்குச் சென்று விடுவீர்கள் என்பது நிச்சயம்

இப்படிப்பட்ட அமைப்பை உடைய அன்பர்கள் மேற்கூறிய பரிகாரத்தை பக்தி சிரத்தையுடன் செய்து வாருங்கள், அப்படி செய்வதிலினால் முன்பு கூறியதைப்போன்று ஆனந்தக்கூத்தாடுவீர்கள், என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை , என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கின்றோம்

பன்னிரண்டில் சனி பரிகாரம்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 12 - ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகத்தையும் அதற்குரிய தோஷப்பரிகாரங்களைப் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்கள் அளவுக்கதிகமான இடையூறுகளை சந்திப்பார்கள். இதனால், கடன் அதிகரிக்கும். உறவினர்களால் உதவி கிடைப்பது அரிதானதாகவே அமையும்

உடன்பிறப்புகளால் குழப்பமடைவீர்கள்

குடும்பத்தில் சுமை அதிகரிக்கும்

உத்தியோகத்தில் நிம்மதி இருக்காது

இடமாற்றமும், பொருள் நஷ்டமும் ஏற்படுவதுண்டு. சொந்தத் தொழில் புரிபவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது

பரிகாரம்

தினமும் 12 முறை முருகனையும், ஆஞ்சநேயரையும், வலம் வந்து பிரார்த்தனை செய்யலாம். எலுமிச்சை மாலையை முருகனுக்கு அணிவித்து கந்த சஷ்டி கவசத்தை சொல்லாம். சனிக்கிழமை அன்று 108 பேருக்கு கூழை வழங்குதல் நல்லது. திருச்செந்தூர் முருகனும், திருநள்ளாறு சனீஸ்வரரையும், நாமக்கல் ஆஞ்சநேயரையும் வழிபட்டு அர்ச்சனை செய்து பிரசாதத்தை தம் கையில் எப்போதும் வைத்து கொள்வது சிறந்த பரிகாரமாகும்

Saturday, June 27, 2020

ஆனித்திருமஞ்சன மகிமை

_ஆனித் திருமஞ்சனம் - சனிக்கிழமை_

*ஆடுபவரும் ஆட்டுவிப்பவரும் ஒருவரே*

மஹாவிஷ்ணு மீனாக்ஷியை ஸுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். மதுரையில் இந்த ஐதிஹ்யம் சிற்பத்தில் வெகு அழகாக இருக்கிறது.

அம்பாள் பத்மநாப சகோதரியாகவும், பரமேசுவர சக்தியாகவும் இருப்பதை அப்படியே கண்ணுக்கு முன்னால் கொண்டுவந்து காட்டுகிறது இந்தச் சிற்பம். இதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் நம் மனஸில் சைவ வைஷ்ணவ பேத பாவம் போயே போய் விடும்.

பிரம்மத்தில்தான் ஸர்வ சக்தியும் இருக்கிறது. அந்த சக்தியால்தான் சகல பிரபஞ்ச காரியங்களும் நடக்கின்றன.

பிரம்மமே பரமேசுவரன்; சக்தியே அம்பாள்; அந்தச் சக்தியால் ஜகத்தை எல்லாம் பரிபாலிக்கிறவரே மஹா விஷ்ணு என்று பிரித்துச் சொன்னாலும், இவர்களும் கடைசியில் ஒருவருக்கொருவர், வித்தியாசமே இல்லாதவர்கள்தான் என்று தெரிகிறது.

பிரம்மம், அதன் சக்தி, அந்தச் சக்தி செய்கிற காரியம் எல்லாம் வெவ்வேறு இல்லை அல்லவா?

சாந்தமாக இருக்கிற பிரம்மம் சிவன், காரியங்கள் செய்து பரிபாலிக்கிறவர் மகாவிஷ்ணு. இப்படிப்பட்ட வித்தியாசம் கற்பிப்பதுகூட முழுக்கச் சரியில்லை என்று உணர்த்துகிற வகையில் இரண்டு ராஜாக்களைப் பார்க்கிறோம்.

ஒருத்தர் ரங்கராஜா, மற்றவர் நடராஜா. ரங்கராஜா இருக்கும் ஸ்ரீரங்கத்தைத்தான் வைஷ்ணவர்கள் ‘கோயில்’, ‘கோயில்’ என்று சொல்கிறார்கள். அதே மாதிரி சைவர்களின் ‘கோயில்’ என்றால் அது நடராஜா இருக்கிற சிதம்பரம்தான். இந்த இரண்டு மஹா க்ஷேத்திரங்களில் உள்ள ரங்கராஜா, நடராஜா இரண்டு பேரும் தென்திசையையே பார்த்துக் கொண்டிருப்பது விசேஷம். 

தெற்கு யமனின் திக்கு. நமக்கு மரண பயமில்லாமல் நம்மை அமரமாக்குகிற மூர்த்திகளாதலால் யமனுக்கு எதிர் முகம் காட்டுகிறார்கள்.

ரங்கம் அல்லது அரங்கம் என்றால் சபை. சிதம்பரத்தில் நடராஜா இருக்கிற சந்நிதியை சபை என்றுதான் சொல்கிறோம்.

சபையில் நர்த்தனம் செய்வதுதான் பொருத்தம். ஆனால் இந்த இரண்டு சபைகளில் ஒருத்தர்தான் நர்த்தனம் செய்கிறார்.

சாந்த நிலையில் பிரம்மமாக இருக்கப்பட்டவர் என்று நாம் சொல்கிற சிவன்தான் நடராஜாவாக ஆனந்தக் கூத்தாடுகிறார். ஜகத் பரிபாலகரான மஹாவிஷ்ணுவையோ திருவரங்கத்தில் பரம சாந்தமாக உறங்குகிறார்.

சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் நாம் பங்கீடு செய்கிற தொழில்களின்படி பார்த்தால் இது தலைகீழாக அல்லவா இருக்க வேண்டும்?

*இதிலிருந்து என்ன தெரிகிறது?*

 முத்தொழில், ஐந்தொழில் என்றெல்லாம் பிரித்து, நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியைச் சொன்னாலும்கூட, இதுவும் நம் சிற்றறிவுக்கு எட்டுவதற்காக பராசக்தி எடுத்துக்கொண்ட பல தோற்றங்கள்தான்.

அந்த மூர்த்திகள் அடியோடு பிரிந்து பிரிந்து இருப்பதாக நினைக்கக்கூடாது.

இதைத்தான் இரண்டு ராஜாக்களும் நமக்கு உணர்த்துகிறார்கள். இவருடைய காரியத்தை அவரும் அவருடைய காரியத்தை இவரும் செய்கிற மாதிரி இரண்டு சபைகளில் நடிக்கிறார்கள்.

எல்லாவற்றையும் ஒடுக்கிக்கொள்பவர் ஆட்டமாக ஆடுகிறார்; ஆட்டி வைத்துப் பரிபாலிக்க வேண்டியவரோ தூங்குகிறார்.

*இன்னொருவர்*
தெற்கே பார்த்துக்கொண்டிருக்கிற இன்னொருத்தர் தக்ஷிணாமூர்த்தி.

இவர் பரமஞான மூர்த்தி. காரியமேயில்லாத ஏகவஸ்துவான சாக்ஷாத் பிரம்ம ஸ்வரூபம். அவருடைய சித் (ஞான) சக்திதான் அம்பாள். அந்த சைதன்யம்தான் சிவ விஷ்ணுவாக, மும்மூர்த்திகளாக, முப்பத்து முக்கோடி தேவதைகளாக, புல், பூண்டு, பசு, பட்சி, மநுஷ்யர்கள் உட்பட சகலமாகவும் ஆகியிருக்கிறது.

இவற்றிலே குறிப்பாக பாரத தேசம் சிவபெருமான், திருமால் இவர்களை முழுமுதல் கடவுளாக வழிபடுவதால், நாம் பேத புத்தி இல்லாமல் இவ்விருவரையும் வழிபட வேண்டும்.

நாம் மனஸில் எந்நாளும் மறவாமல் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், பராசக்தியின் மற்றொரு உருவமே திருமால்; பராசக்தியை விட்டுப் பிரிக்க முடியாத ஆதாரப் பொருளே சிவன்.

எல்லாவற்றுக்கும் உள்நின்று இயக்குகிற அந்தச் சக்தியை நாம் பக்தி செய்தால், தாயாக வந்து ஞானப்பால் கொடுத்து நம்மை ரக்ஷிக்கிற அம்பாளாகிறாள்.

அவளது அநுக்கிரகம் இல்லாவிட்டால், நாம் சவத்துக்குச் சமம்தான். நாம் செய்கிறதாக நினைக்கிற சகல காரியங்களுக்கும், எண்ணங்களுக்கும் அவள் தருகிற சக்திதான் காரணம்.

எவருக்குமே நம் சக்தியினாலேயே காரியங்களைச் செய்துகொள்கிறோம் என்று அகம்பாவம் படக் கொஞ்சம்கூட நியாயம் இல்லை.

நம்மை நடத்தி வைக்கும் அந்தப் பராசக்தியை நினைத்து, நாள்தோறும் ஒரு நிமிஷமாவது, ‘என் சிறு சக்தி உன்னிடமிருந்து தெறித்த ஒரு திவலைதான்; இதை உன் சித்தப்படியே நடத்திவையம்மா’ என்று அர்ப்பணம் பண்ணுவோம்.

இதுவே மநுஷ்ய குணங்களில் முதலாவதாகச் சொல்லப்படுகிற நன்றி;

இதே பூஜை;

இதே ஸ்நானம்;

அகம்பாவ அழுக்கைத் துடைத்து நம் உயிரைச் சுத்தமாக்குகிற ஸ்நானம்.

*ஹரி ஓம் நம சிவாய*
*ஓம் சக்தி ஓம்*

காக வழிபாட்டின் ரகசியம்

*அமாவாசை ஸ்பெஷல் !*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
!! *காஞ்சி மகான் அருளுரை*!! 
➰➰➰➰➰➰➰➰➰➰
பித்ருக்கள் எல்லரும் காக்கா ஸ்வரூபமா வருவதாக ஐதீகம்

ஒரு பக்தையுடைய கவலை மிகவும் வினோதமாக இருந்தது.

’காக்கை உபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும் போது, தலையில் வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படி நடக்கிறது, வேதனையாய் இருக்கிறது” என்றார்.

பெரியவா மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

“ஒரு பெண் கல்யாணதுக்கு இருக்கா... ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா. அநாதயா போயிடுமோன்னு கவலையா இருக்கு....”

பெரியவா சொன்னார்கள்... “தினமும் காக்கைக்கு சாதம் போடனும்... தினமும் நல்லெண்ணெய் விளக்கு போடனும்... சனிக்கிழமையன்னிக்கு சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணனும்...”

நிம்மதியாகச் சென்று விட்டார் அம்மையார். பிறகு தொண்டர்களிடம் பெரியவா விஸ்தாரமாகப் பேசினார்கள்.

நம்ம மடத்துக்கு யானை, பசு, பூனை, சில சமயம் நாய், பெருச்சாளி, எலி, குருவி, குரங்குன்னு இல்லப் பிராணியும் வருது. ஆனால், காகம் மட்டும் வரதில்லை... அதற்கு பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டர் சொன்னார், “பெரியவா பரமேசுவர ஸ்வரூபம். அதனால், சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ளே நுழையக் கூட பயம்... தன் வாகனத்தைக் கூட அனுப்பறதில்லை...”

பெரியவா புன்முருவல் பூத்தார்கள். பிறகு சொன்னார்கள் “அகத்திலே காக்கைக்குச் சாதம் போடுகிறபோது - காக்காய்...காக்காய்.. காகம், காகம்.. வா, வா -ன்னு கூப்பிடறதில்லை. அப்படித்தானே...

”ஆமாம்”

“என்ன சொல்றா?” - பெரியவா

“கா... கா.. ங்கிறா...

”அப்படின்னா என்ன அர்த்தம்?”

எல்லோரும் விழித்தார்கள்.

“காக்கா... சாப்பிட வா-ன்னு அர்த்தம்...” என்று ஒரு தொண்டர் கூறினார்.

‘அதுதான் எல்லருக்கும் தெரிஞ்சிருகே ! வேற விசேஷ அர்த்தம் உண்டோன்னு கேட்டேன்.’

எல்லாரும் மெளனமாக நின்றார்கள்.

“கா...கா...ன்னா.. காப்பாற்று, காப்பாற்றுன்னு அர்த்தம்.. பித்ருக்கள் எல்லரும் காக்கா ஸ்வரூபமா வருவதாக ஐதீகம். “கா...கா....ன்னா - பித்ருக்களே... எங்களை ரட்சியுங்கள்” என்று அர்த்தம் சொல்லலாமில்லையா?”

தொண்டர்கள் பிரம்மித்தார்கள்.

”அது மட்டுமில்லை. பகவான் எல்லா ஜந்துக்களிடமும் ஆத்மாவா இருக்கான். காக்கையிடமும் அப்படித்தான். பகவனுக்கு நைவேத்யம் பண்ணினால், அவன் சாப்பிடுவதை நம்மால் பார்க்க முடியல்லெ. அவனே காகமாக வந்து, நாம் போட்ட சாதத்தைச் சாப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. எதோ ஒரு ஜீவன்... வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு. அந்த வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு - நமக்குள் இருக்குற அதே ஆத்மாவுக்கு - ஸ்வரூபம் வேறே - சாதம் போடுகிறோம். இது, அத்வைதம் தானே???

அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறது.

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்..

காணக்காணப் புண்ணியம்..

ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர..

ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர..

சகோதர உறவு பலப்பட பரிகாரம்



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, மானிடப்பிறவி பற்றியதாகும். இந்த மானிடப் பிறப்பு என்பது, மகத்தானது, அதனால்தான் ஔவை பிராட்டியார், "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்று கூறியிருகின்றார். ஒரு மனிதன் சகோதர, சகோதரியுடன் ஒருதாய் வயிற்றில் பிறந்து. இந்தவேண்டாத பகையுணர்ச்சியைப் பெற்று பிரிந்துவிடுவது என்பது "Relationship Karma என்று சொல்லப்படுகின்ற இரத்தபந்தங்களை உணர்வுப்பூர்வமாக மதிக்கத்தெரியாத அம்மனிதர்களுக்குக்கிடைக்கின்ற ஒரு பலமான அடியாகும்

தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்று ஒரு சொல் வழக்கு உண்டு. உலகில் பிறக்கும் அனைவருக்கும் சகோதர ஒற்றுமை ஏற்பட்டு விடுகின்றதா? என்றால் நிச்சயமாக இல்லை , அது ஏன்

பொன்னுக்கும், பொருளுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்ட மனிதன் சகோதர, சகோதரிகளை, உற்றார் உறவினர்களை, சகமனிதர்களை, ஏன்

பெற்ற தாயைக்கூட மறந்து செல்வபோதையில் சிக்கிக்கொள்கின்றனர். அது ஏன்

அவர்கள் பெற்ற வரமும், இந்த ஜாதகத்தின் சாபமும் அப்படி? இதை எவ்வாறு கண்டுணர்வது.

ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே செவ்வாய் பழுது படக்கூடாது. செவ்வாய் கடகத்திலே நீச்சம் பெற்று பங்கம் பெறாது போய், செவ்வாய், மூன்று, ஆறு, எட்டு பனிரெண்டில் மறைந்தால், சகோதரர்களை காட்டும் மூன்றாவது இடத்திலே செவ்வாய் இருந்தால், சனி இருந்தால், ராகு அல்லது கேது இருந்தால் நிச்சயமாக அங்கே சகோதர முறிவு ஏற்படும்.

அப்போது அதை நிவர்த்தி செய்வதற்கான வழி என்ன? அதற்கான பரிகாரம் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியனுக்கு விஞ்சிய கடவுளும் இல்லை " என்று முருகப்பெருமானை உயர்த்துகின்ற பழமொழி. முருகனே செவ்வாய் அம்சமாக இருக்கிறார்.

முருகனை பிடித்தவர்கள், முருகனை வணங்கி வர, உடன் விநாயகப்பெருமானையும் வணங்கி வேர் சகோதரர்களுக்கிடையே இருந்து வந்த அந்தக் கசப்புணர்ச்சி மறையும், சகோதர பலம் கூடும் ஒவ்வொரு செவ்வாயன்றும், "செவ்வாய் ஹோரை" என்று சொல்லப்படுகின்ற நேரத்திலே, முருகனின் ஸ்தலங்களுக்குச் சென்று, செவ்வாய்க்கிழமையில், செவ்வாய் ஹோரை" மூன்று நேரங்களிலே வருகின்ற நேரங்களான, காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரையிலும், மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரையிலும், இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரையிலும் இருக்கின்ற தருணத்தில் முருகன் ஆலயம் சென்று

"நெய் தீபம் ஏற்றி, 'முருகா, எனக்கு, என் சகோதர, சகோதரிகளிடம் பாசம் ஏற்பட இணக்கம் ஏற்பட வரம் கொடு" என்று மனதார வேண்ட, அவ்வேண்டுதல் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். ஏனெனில் மனதார, உண்மையாகப் பிரார்த்திக்கப்படும் பிரார்த்தனையானது மாசு மருவற்ற தூய்மையான தாய்ப்பாலுக்கு நிகராகும்.

அதுபோன்று, தசாவதாரங்களிலேயே செவ்வாயைப் பற்றிக் கூறும் அவதாரமாக இருப்பவர் நரசிம்மமூர்த்திதான். எனவே

யோக நரசிம்மர்' என அழைக்கப்படும் நரசிம்மமூர்த்தியின் படத்தை பூஜையறையில் வைத்து வணங்கி வர குறிப்பாக சுவாதி நட்ச்சத்திரத்திலே

"பானகம்" தயாரித்து, சுவாதி நட்ச்சத்திரத்திலே நரசிம்மர் முன்பு, அந்த பானகத்தை வைத்து அல்லது பானகத்தை நரசிம்மர் ஆலயங்களிலே வைத்து விநியோகம் செய்ய வேண்டும்

மனதார என்னுடைய சகோதர, சகோதரிகளிடையே இருந்த பிணக்கு தீர வேண்டும். ஒற்றுமை மலர வேண்டும், நாங்கள் இந்தப் பிறவியிலேயே எந்த வித வழக்கிற்கும் செல்லக்கூடாது என்று நீங்கள் மனதார இவ்விரு கடவுள்களையும் வேண்டி வணங்கினால் அந்த நரசிம்மமூர்த்தியின் கருணையால் உங்கள் ஜாதக்கத்திலிருந்த அந்த பாதிப்பு நீங்கி உங்களின் சகோதர உறவு மேம்படும் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

Friday, June 26, 2020

கருடாழ்வாரின் வரலாறு

"கருடன்-ஆழ்வார்"ஆனது எப்படி

சிவன் கோவில்களில் மூலவருக்கு முன்னால் நந்தி பகவான் இருப்பது போல, அனைத்து பெருமாள் கோவில்களிலும் இறைவனுக்கு நேர் எதிரே கருடர் இருப்பார்

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு

இவருக்கு இந்த உயர்வான பெயர் வந்த காரணத்தைக் கேளுங்கள்

கிருதயுகத்தில் அகோபிலம் (இந்தியாவில் உள்ள ஊர்) பிரகலாதனின் தந்தை இரண்யன் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.

அவனை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்மம்.

பெருமாள் எந்த பக்தனை காக்கச் சென்றாலும் கருடன் மீது தான் எழுந்தருள்வார்.

கஜேந்திரன் என்ற யானையைக் காக்க அப்படித்தான் வந்தார்

கருடனும் கணநேரத்தில் அந்த இடத்திற்கு போய்விடுவார். அதனால் தான் கோவில்களில் கருட சேவை இன்றும் பிரசித்தமாக இருக்கிறது.

பிரகலாதனைக் காக்க வேண்டிய அவசரம் கருதி, அவர் கருடனைக் கூட அழைக்காமல் உடனடியாக தூணிலிருந்து வெளிப்பட்டார்.

இதையறிந்த கருடன் மிகவும் வருத்தப்படுவார்.

நரசிம்ம அவதாரத்தை பார்க்கவில்லையே என ஏங்கினார். தனக்கு அந்த வடிவத்தை காட்டியருள வேண்டினார்

பெருமாள் கருடனை அகோபிலம் சென்று தவம் செய்யும்படி கூறினார்

கருடனும் அவ்வாறே செய்ய வா மலைக்ககையில்

பெருமாள் கருடனை அகோபிலம் சென்று தவம் செய்யும்படி கூறினார்

கருடனும் அவ்வாறே செய்ய ஒரு மலைக்குகையில் உக்ர நரசிம்மர் அவர் காட்சியளித்தார்.

பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால், கருடனை 'கருடாழ்வார்' என்று போற்றுகின்றனர்.

நாழிக்கிணறு மகிமை

நாழிக்கிணறு

திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும்

நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது

ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனை தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மன் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்

சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகள், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால் முருகனின் சக்திக்கு முன்னால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை . இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான்

கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும் மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடன் மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்

போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார்

அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம்

இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும்.

இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது

ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்

இந்த அதிசயத்தை நேரில் காண திருச்செந்தூர் வாருங்களேன்

பதினோராவது இடத்தில் சனி பரிகாரம்



இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 11 - ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷப்பரிகாரங்களைப் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்கள் சொர்க்க வாழ்க்கை என்று சொல்லும் அளவிற்கு எல்லா சுகத்தையும் ஒன்றுவிடாமல் அனுபவிப்பார்கள். புதிய கார், வீடு ஆகியவற்றை நினைத்த நேரத்தில் அடைவார்கள். காதல் வயப்படுவார்கள். வயலால் தனலாபமும் ஆபரணச் சேர்க்கையும் இருக்கும்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்

உத்தியோகத்தில் பேரும், புகழம் அடைவார்கள். இவருக்கு அரசு உதவியும் ஆதரவும் இருக்கும். கடன் பிரச்சினை இருக்காது

பரிகாரம்

மேற்கூறிய சகல சுகமும் ஒருவருக்கு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் சண்டி ஹோமம் செய்யலாம். தினமும் காலையில் சுந்தரகாண்டப் பாராயணத்தை சொல்லாம்

சனிக்கிழமைதோறும் நீலோத்தம பூவும் மல்லிகை பூவும் கலந்த மாலையை சனீஸ்வரருக்கு அணிவித்து விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வரலாம்

சுதர்சன அஷ்டோத்திரத்தை 3 முறை சொல்லுவதும் மகத்தான பரிகாரமாகு

Thursday, June 25, 2020

பத்தில் சனி அதற்கு உரிய பரிகாரம்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 10 - ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷப்பரிகாரங்களைப் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்கள் கலைத்துறையில் பேரும், புகழும் பெறுவார்கள். வெளிநாடுகளில் வாழவும்,அங்கே தொழில் செய்யவும் பலருக்கு யோகம் உண்டு. இரும்பு சம்பந்தமாக வேலை செய்பவருக்கு தொழில் விருத்தி அடையும். புத்தகம் துறையினருக்கு எழுத்தின் மூலம் புகழ் பெற்று சகல சௌபாக்கியத்தையும் பெறுவார்கள். சிலருக்கு நெஞ்சு,மார்பு வலி ஏற்படும். மேலும், சிலருக்கு எல்லா வசதிகளும் இருந்தும் அனுபவிக்கும் நிலையற்று நோயால் அவதிபடுவார்கள்

சிலர் சொத்துக்களை அழிக்கும் நிலை ஏற்படும்

பரிகாரம்

சங்கடஹர சதுர்த்தியன்று நவக்கிரக ஹோமம் செய்யலாம்

நல்லெண்ணெய் தானமாக அளிக்கலாம்

ஒருமுறை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். நவக்கிரகங்களுக்கு

சந்தன காப்பு " சாற்றி அபிஷேகம் செய்யலாம். "ராம க்ருது "ஹோமம் செய்வது நல்லது. வைத்தீஸ்வரன் கோயிலில் பிரார்த்தனை செய்வதும் குலதெய்வத்திற்கு இளநீர், பன்னீர், தயிர் போன்ற அபிஷேகம் செய்து தெய்வ பலத்தைப் பெறலாம்

இறந்த ஆன்மாக்கள் செல்லும் ரகசியம்

*எமலோகத்திற்கு இங்கிருந்து எவ்வளவு தூரம்? இறந்த ஆன்மா எப்படி செல்லும்? இதோ அதன் ரகசியங்கள்*

ஒரு மனிதன் இறந்த பின்பு சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, அதோடு ஒரு ஆன்மா நரகத்திற்கு சென்றால் அங்கு என்னவெல்லாம் துன்ப்பப்டுத்தப்படுவார்கள் என்பதையும் நாம் கேள்விபட்டிருப்போம்.

ஆனால் அதற்கு இடைபட்ட காலத்தில், அதாவது இறப்பிற்கு பிறகு, எமலோகத்தை அடைவதற்கு முன்பு அந்த ஆன்மாவிற்கு என்ன ஆகிறது, அது இங்கிருந்து எப்படி எவ்வளவு தூரத்தில் எமலோகம் செல்கிறது? எமலோகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது? இதற்கிடையில் நடக்கும் துன்பங்கள் என்ன? இப்படி பல தகவல்களை நாம் இதில் பார்ப்போம்.

ஒரு மனிதனின் இறப்பிற்கு பின் நடக்கும் நிகழ்வுகளை, நமக்கு விரிவாக சொல்கிறது கருடபுராணம்.

அதன் படி ஒரு மனிதனின் ஆயுட்காலம் முடிந்த பிறகு, அவனது ஜீவனை பிரித்து வரும் படி, தன் தூதர்களிடம் கூறுவார் எமதர்ம ராஜா.

விகாரமான மூன்று வகை தூதர்கள் அந்த ஜீவனை காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து, எமலோகத்திற்கு அழைத்து செல்வார்கள்.

எமலோகம் என்பது இங்கிருந்து என்பத்தாறாயிரம் காத தூரத்தில் உள்ளது. இவ்வளவு தூரத்தையும் சில நொடிகளில் கடந்து, அந்த ஜீவனை எமலோகத்திற்கு கூட்டி செல்வார்கள் தூதர்கள். அதன் பின் அந்த ஜீவன் எமதர்மராஜாவின் முன்பு நிறுத்தப்படும்.

அவர் தூதர்களை நோக்கி, ஏ கிங்கரர்களே இந்த ஜீவனை மீண்டும் கொண்டு சென்று, அவன் வீட்டிலே விட்டு விட்டு 12-ஆம் நாள் கழிந்த பிறகு, முறைப்படி மீண்டும் நம் சபை முன்பு நிறுத்துங்கள் என்று கட்டளையிடுவார்.

உடனே அந்த தூதர்கள் நொடிப் பொழுதில் அந்த ஜீவனை, அதன் இல்லத்தில் விட்டு விட்டு செல்வார்கள். ஆவியாக இருக்கும் அந்த ஜீவனோ, உடல் இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுவதை கண்டு, அழுது ஓழமிடுமாம்.

அதன் பின் இடுகாட்டில் இருந்து வந்து, தான் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று, பசி, தாகத்தால், பீடிக்கப்பட்டு கதறி நிற்குமாம்.

அதனைத் தொடர்ந்து அந்த ஜீவனின் பிள்ளைகள், அதற்கு கொடுக்கும் பிண்டத்தை உண்டு, பத்து நாட்களில் பிண்டத்தால் ஆகும், ஜகிரதம் அந்த ஜீவனுக்கு முழுமையாக உருவாகும்.

12-ஆம் நாளில் தன் பிள்ளைகளால் செய்யப்படும், காரியத்தன்று பிண்டத்தை உண்டு, 13-ஆம் நாள் மீண்டும் எமதூதர்கள் வந்து, அந்த ஜீவனை பாசக்கயிற்றால் கட்டி அழைத்து செல்வார்கள்.

அந்த சமயத்தில், அந்த ஜீவன் தன் வீட்டை திரும்பி, திரும்பி பார்த்து கதறி அழுது கொண்டே எமலோகம் செல்லத் துவங்கும்.

ஆனால் முன்பு போன்று இப்போது ஒரு நொடியில் எம்லோகம் வந்துவிடாது. இங்கிருந்து அந்த ஜீவன் நடந்தே எமலோகம் செல்ல வேண்டும்.

நாள் ஒன்றிற்கு 247 காத தூரம் இரவு, பகலாக நடந்து செல்ல வேண்டும். அப்படி செல்லும் வழியெங்கும் பாதை மிகவும் கரடு முரடாக இருக்கும். தன் மனைவி, மக்களோடு வாழ்ந்த காலத்தில் தான் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து, துன்பத்தில் பசியாலும், தாகத்தாலும் மெலிந்து, சோர்வுற்று, இளைத்து, ஐயோ என்று அலறியவாரே, எம தூதர்களிடம் அடி பட்டு, மிதிபட்டு செல்லுமாம் அந்த ஜீவன்.

இந்த பூலோகத்தில் எப்படி பல நகரங்கள் இருக்கிறதோ, அதே போன்று இங்கிருந்து எமலோகம் செல்லும் வழியில் பல நகரங்கள் இருக்குமாம். அந்த ஜீவன் இறந்த 28-ஆம் நாளில் பூமியில் அதன் புதன்வனால் செய்யப்படும், பிடாரத்தை உண்டு, 30-ஆம் நாள் யாம்யகம் என்ற நகரத்தை அடையும்மாம்.

இப்படி அடுத்தடுத்த மாதங்களில் தன் புதன்வனால் கொடுக்கப்படும் பிண்டத்தை கொண்டு அவ்யாமியம், செளரி, குருரபுரம் உள்ளிட்ட நகரங்களை கடந்து செல்லுமாம் அந்த ஜீவன்.

அடுத்ததாக, கிரெளஞ்சம் என்ற ஊரை அடைந்து, ஆறாவது மாதத்தில் தன் மகன் தனும் பிண்டத்தை உண்டு, தன் வாழ்வில் நினைந்தவற்றை நினைத்து புலம்பி தவிக்குமாம் அந்த ஜீவன்.

உடனே அங்கிருக்கும் எம தூதர்கள், அந்த ஜீவனின் வாயிலே அடிப்பார்களாம். அப்படியே வருத்ததோடு செல்கையில், கோர ரூபம் உடைய பல்லாயிரம் படகோட்டிகள், அதன் முன்பு ஓடி வந்து, நீ வாழ்வில் பசு தானத்தை செய்துள்ளாயா? அப்படி சென்றிருந்தால் நீ அடுத்து கடந்து செல்ல வேண்டிய வைதரணி நதியை இனிதே கடக்க நாங்கள் உதவி செய்வோம், இல்லையெல் சாக்கடையை விட ஆயிரம் மடங்கு மோசமான அந்த நதியில், உன்னை தள்ளி, நாங்கள் மூழ்கடிப்போம்.

அதில், இரத்தம், மலம், சிறுநீர் போன்றவை கலக்கப்பட்டிருக்கும், அதை நீ கடக்க வேண்டும் என்று கூறுவார்களாம்.

ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் பசுதானம் செய்வதன் மூலம், அவனின் ஆத்மா வைதரணி நதியை எளிதில் கடக்கலாம்.

பசுதானம் என்பது முழுமனதோடு செய்திருக்க வேண்டும். அதே போன்று அந்த பசுவை பாசோத்தோடு கவனித்து கொள்ளும், எளிய மனிதருக்கே அந்த தானமானது, வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு வேளை அந்த ஜீவன் பூமியில் இருந்த காலத்தில், அந்த தானத்தை செய்யாமல் இருந்திருந்தால், அந்த ஜீவனுடைய மகன் செய்திருந்தால், அந்த பலன் அதன் ஜீவனுக்கும் கிடைக்கும்.

அதன் மூலம் அந்த ஜீவன் வைதரணி நதியை எளிதில் கடந்து, எமனுக்கு இளையோனாகிய விசித்திரன் என்பவனின் பட்டனத்தை அடையும்.

அதன் பின் தன் புதல்வன் தரும் பிண்டத்தை உண்ணும் போது, அங்கு பல பிசாசுகள் பயங்கர தோற்றத்துடன் தோன்றி, அந்த ஜீவனை பார்த்து, அடே மூடனே, நீ பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில், யாருக்குமே தானம் செய்யாமல் இருந்திருந்தால், உனக்காக உன் புதல்வன் படைக்கும் அன்னமானது, உன் கைக்கு கிடைத்தும், அதை நீ ஆவலோடும், பசியோடும், புசிக்க நினைக்கும் போது பிசாசுகள் அதை பிடுங்கி சென்றுவிடும் என்று கூறி, தானம் செய்யாத ஜீவன்களுக்கு படைக்கும் பிண்டங்களை அந்த பூதங்கள் பிடுங்கி கொள்ளும்.

அதன் காரணமாக அந்த ஜீவன், தான் வாழும் காலத்தில் செய்த இழிவான செயல்களை எண்ணி, அழுது கொண்டே அந்த இடத்தை கடக்கும்.

இப்படி 7 மாதங்கள் கடந்த பிறகு, பூலோகத்தில் அந்த ஜீவனை நினைத்து, அதற்குரிய அன்னதானம் செய்ய வேண்டும்.

அந்த ஜீவன் துக்கதம், அதத்தம், சீதாப்ரம், உள்ளிட்ட நகரங்களை கடந்து, 12-வது மாதம் முடிந்த பிறகு, தனக்குரியோர் படைக்கும் பிண்டத்தை உண்டு, எமபுரிபட்டனமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடையும்.

அங்கு அந்த ஜீவனின் பாவ, புண்ணியங்களை எடுத்துரைப்பதற்காக, 12 பேர் இருப்பார்கள்.

அவர்களை 12 சிரவணர்கள் என்று அழைப்பர். அவர்கள் அந்த ஜீவனின் பாவ, புண்ணியங்களை, எமதர்மராஜாவிடம் எடுத்துரைத்த பிறகு, அதற்கு ஏற்றார் போல் அந்த ஜீவனுக்கு தண்டனை கிடைக்கும்.

ஆக, நல்லது செய்யாது ஒரு ஆன்மா இறந்த பிறகு, அது எமலோகத்தை அடையவே ஒரு வருடம் ஆகிறது. அதற்குள்ளாகவே அந்த ஆன்மா, படாதபாடு படுகிறது என்பதையே கருடாபுராணம் விளக்குகிறது.

*இந்த பதிவு நாம் தெரிந்து கொள்வதற்கு தான். இறைவன் நாமத்தை நாம் மனமுருகி சொல்ல இறைவன் அருள் நமக்கு கிடைக்கும்*
இறைவன் அருள் நம்மிடம் இருக்கும் போது சிவகணங்கள் நம்மை அழைத்து போகும்.

பட்டினத்து சித்தர் வழிபாடு

பட்டினத்தடிகளார் சித்தர் தியானச்செய்யுள்

சந்திர விழியும் மந்திர மொழியும் கொண்ட சிவபக்தரே கரும்பு வில்லும், அரும்பு சொல்லுமாய் ஆண்டவனிடம் கலந்தவரே பற்றற்று, உற்றற்று, சுற்றற்று ஈசன் கால் பற்றி இருக்கும் உங்கள் பாதம் பற்றினோம். பரிவுடன் காப்பர் பட்டினத்தாரே!

எனும் செய்யுளைத் தொடர்ந்து பரிகாரமும் பலன்களும் பகுதியில் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தரைப் பற்றி காண்போம்

இவர் ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை கட்டுப்படுத்த கூடியவர்.

முன்வினை கோளாறு, பித்ரு சாபம் நீங்கி, நிம்மதி கிடைக்க தாம்பரம் மாடம்பாக்கம் சென்று இவரை வழிபாடு செய்ய வேண்டும்

தந்தை, மகன், தந்தை மகள் சம்மந்தப்பட்ட எந்தப்பிரச்சினையாக இருந்தாலும், அதைத்தீர்க்கக் கூடிய வல்லமை இந்த பட்டினத்துச் செட்டிக்கு உண்டு. இவரை பட்டினத்து அடிகள் என்றும் கூறுவார்கள், இவர்தான் பட்டினத்துச் சித்தர். பிதுர் ராஜ்ஜிய சொத்துக்களிலே தகராறு இருந்தால், அரசியல் வெற்றிகள் பெற திறமை இருந்தும் புகழ் கிடைக்கவில்லையே என்ற நிலை அகல இருதய சம்மந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் உஷ்ண சம்மந்தப்பட்ட கோளாறுகள் நீங்க உலகம் முழுவதும் பெரும், புகழும் கிடைக்க இவரை ஒரு ஞாயிறன்று வணங்குவது சிறப்பு

நம்முடைய ஜனன ஜாதகத்தில், 9 வது இடம்தான் நம் தகப்பனாரைப் பற்றி சொல்லுகின்ற இடம் அந்தச் சூரியனுடைய கிரகம் எப்படி இருக்கின்றது என்பதை நம் ஜனன ஜாதகத்திலே பார்க்கும் பொழுது சூரியன் பழுதுபட்டால், பழுதுபடுவது என்றால் ராகு அல்லது கேது அல்லது சனியோடு தொடர்பு கொண்டிருந்தால், அவர்களுக்கு தந்தை வழியிலே பல சிக்கல்கள் உருவாகும். உறவு முறைகள் சிக்கல்கள் உருவாகும். பல பகுதிகளிலே சிக்கல்கள் உருவாகும்

அப்படிப்பட்டவர்கள், சூரியனால் ஏற்படுகின்ற தோஷத்தினால், அத்தோஷத்தினால் வருகின்ற சிக்கல்களை போக்க பட்டினத்து செட்டி என்றழைக்கப்படும் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தரை ரோஜா வஸ்திரம், ரோஜாமாலை இவைகளைக்கொண்டும், நிவேதனமாக கரும்புச்சாறு படைத்தும் வணங்க வேண்டும்

ஸ்ரீ பட்டினத்தடிகளர் அவர்கள் பெரும் வணிகர் குடும்பத்திலே பிறந்தவராவார்.

வாலிப வயதிலே பொருள் ஈட்டுவதற்குச் சென்றபொழுது, ஒரு சிறிய பெட்டியை தாயிடம் கொடுத்துவிட்டு இவர் பட்டினத்து செட்டி என்ற என்ற பெயரைப் பெற்று வாணிபத்தில் புகழ் பெற்றார்.

அதன்பிறகு சிவனே இவருக்கு மைந்தனாகப் பிறந்து காதறுந்த ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே” என்ற பொருளை எழுதிக் கொடுத்துவிட்டு மறைந்தார். அதன் பிறகுதான் அவர் பல உண்மைகளை உணர்ந்தார்.

ஒரு சமயம் பட்டினத்தடிகளின் மீது திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டது. இவரை

"கழுமரம் ஏற்ற உத்தரவிட்டான் அந்நாட்டு மன்னன். அதற்கு பட்டினத்தடிகள், அந்த மரம் இந்த மரத்தை ஏற்றப்போகின்றதோ"

என்று சிரித்து ஒரு பாடலைப் பாடினார்.

உடனே, அக்கழுமரம் தீப்பற்றி எரிந்தது.

அப்படிப்பட்ட பட்டினத்தார் சித்தர் பின் வரும் பதினாறு போற்றிகளைக் கூறி மருதாணி பூ சம்பங்கி புஷ்பம், மரு ஆகிய புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும்

பதினாறு போற்றிகள்

கரும்பு பிரியரே போற்றி சுயம்பு லிங்கத்தை பூஜிப்பவரே போற்றி

ஞானஸ்கந்தரே போற்றி

சிவனின் அருளை வழங்குபவரே போற்றி

நிசியில் பூஜிப்பவரே போற்றி

மந்திரசித்தி அளிப்பவளே போற்றி

கண் ஒளி உடையவரே போற்றி

ஜீவன் முக்தரே போற்றி

சிவனின் மைந்தரே போற்றி

வியாபாரத்தை பெருக்குபவரே போற்றி அஷ்ட பீஜாட்சரத்தில் இருப்பவரே போற்றி

ஞானத்தை அளிப்பவரே போற்றி உலக மக்களின் நண்பரே போற்றி

கோவண வஸ்திரம் உடையவரே போற்றி

சந்திரனின் ஒளியே போற்றி கரும்பில் நாட்டம் உள்ள ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தர் ஸ்வாமியே போற்றி போற்றி

என்று பாடி, "ஓம் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தர் ஸ்வாமியே போற்றி!" என்று 108 முறை ஜெபித்து வணங்க சூரியனால் ஏற்பட்ட தோஷங்கள் நம்மை அணுகாது மறைந்து, சூரியனுடைய அருளாசி நமக்கு கிடைக்கும். அதனால் நம் வாழ்கையிலே பல சிறப்புகள் பிறக்கும் என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்கிறேன்

Wednesday, June 24, 2020

சகோதர சகோதரிகள் உடைய பிரச்சனை நீங்க பரிகாரம்



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, மானிடப்பிறவி பற்றியதாகும். இந்த மானிடப் பிறப்பு என்பது, மகத்தானது, அதனால்தான் ஔவை பிராட்டியார், "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்று கூறியிருகின்றார். ஒரு மனிதன் சகோதர, சகோதரியுடன் ஒருதாய் வயிற்றில் பிறந்து. இந்தவேண்டாத பகையுணர்ச்சியைப் பெற்று பிரிந்துவிடுவது என்பது "Relationship Karma என்று சொல்லப்படுகின்ற இரத்தபந்தங்களை உணர்வுப்பூர்வமாக மதிக்கத்தெரியாத அம்மனிதர்களுக்குக்கிடைக்கின்ற ஒரு பலமான அடியாகும்

தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்று ஒரு சொல் வழக்கு உண்டு. உலகில் பிறக்கும் அனைவருக்கும் சகோதர ஒற்றுமை ஏற்பட்டு விடுகின்றதா? என்றால் நிச்சயமாக இல்லை , அது ஏன்

பொன்னுக்கும், பொருளுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்ட மனிதன் சகோதர, சகோதரிகளை, உற்றார் உறவினர்களை, சகமனிதர்களை, ஏன்

பெற்ற தாயைக்கூட மறந்து செல்வபோதையில் சிக்கிக்கொள்கின்றனர். அது ஏன்

அவர்கள் பெற்ற வரமும், இந்த ஜாதகத்தின் சாபமும் அப்படி? இதை எவ்வாறு கண்டுணர்வது.

ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே செவ்வாய் பழுது படக்கூடாது. செவ்வாய் கடகத்திலே நீச்சம் பெற்று பங்கம் பெறாது போய், செவ்வாய், மூன்று, ஆறு, எட்டு பனிரெண்டில் மறைந்தால், சகோதரர்களை காட்டும் மூன்றாவது இடத்திலே செவ்வாய் இருந்தால், சனி இருந்தால், ராகு அல்லது கேது இருந்தால் நிச்சயமாக அங்கே சகோதர முறிவு ஏற்படும்.

அப்போது அதை நிவர்த்தி செய்வதற்கான வழி என்ன? அதற்கான பரிகாரம் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியனுக்கு விஞ்சிய கடவுளும் இல்லை " என்று முருகப்பெருமானை உயர்த்துகின்ற பழமொழி. முருகனே செவ்வாய் அம்சமாக இருக்கிறார்.

முருகனை பிடித்தவர்கள், முருகனை வணங்கி வர, உடன் விநாயகப்பெருமானையும் வணங்கி வேர் சகோதரர்களுக்கிடையே இருந்து வந்த அந்தக் கசப்புணர்ச்சி மறையும், சகோதர பலம் கூடும் ஒவ்வொரு செவ்வாயன்றும், "செவ்வாய் ஹோரை" என்று சொல்லப்படுகின்ற நேரத்திலே, முருகனின் ஸ்தலங்களுக்குச் சென்று, செவ்வாய்க்கிழமையில், செவ்வாய் ஹோரை" மூன்று நேரங்களிலே வருகின்ற நேரங்களான, காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரையிலும், மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரையிலும், இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரையிலும் இருக்கின்ற தருணத்தில் முருகன் ஆலயம் சென்று

"நெய் தீபம் ஏற்றி, 'முருகா, எனக்கு, என் சகோதர, சகோதரிகளிடம் பாசம் ஏற்பட இணக்கம் ஏற்பட வரம் கொடு" என்று மனதார வேண்ட, அவ்வேண்டுதல் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். ஏனெனில் மனதார, உண்மையாகப் பிரார்த்திக்கப்படும் பிரார்த்தனையானது மாசு மருவற்ற தூய்மையான தாய்ப்பாலுக்கு நிகராகும்.

அதுபோன்று, தசாவதாரங்களிலேயே செவ்வாயைப் பற்றிக் கூறும் அவதாரமாக இருப்பவர் நரசிம்மமூர்த்திதான். எனவே

யோக நரசிம்மர்' என அழைக்கப்படும் நரசிம்மமூர்த்தியின் படத்தை பூஜையறையில் வைத்து வணங்கி வர குறிப்பாக சுவாதி நட்ச்சத்திரத்திலே

"பானகம்" தயாரித்து, சுவாதி நட்ச்சத்திரத்திலே நரசிம்மர் முன்பு, அந்த பானகத்தை வைத்து அல்லது பானகத்தை நரசிம்மர் ஆலயங்களிலே வைத்து விநியோகம் செய்ய வேண்டும்

மனதார என்னுடைய சகோதர, சகோதரிகளிடையே இருந்த பிணக்கு தீர வேண்டும். ஒற்றுமை மலர வேண்டும், நாங்கள் இந்தப் பிறவியிலேயே எந்த வித வழக்கிற்கும் செல்லக்கூடாது என்று நீங்கள் மனதார இவ்விரு கடவுள்களையும் வேண்டி வணங்கினால் அந்த நரசிம்மமூர்த்தியின் கருணையால் உங்கள் ஜாதக்கத்திலிருந்த அந்த பாதிப்பு நீங்கி உங்களின் சகோதர உறவு மேம்படும் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

அஷ்டமத்து சனி பரிகாரம்



இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 8-ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படகூடிய , சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்களுக்கு நினைத்ததை உடனே செய்ய முடியாத நிலை உருவாகும். எந்த விஷயத்திலும் சோதனையைசந்திப்பீர்கள் பொருளாதாரத்தில் குறைவு ஏற்படும்

செலவு அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்க வாய்ப்பில்லை. உறவினர்கள் விலகுவர். தொழிலில் லாபம் இராது போகலாம். செல்வாக்கும் குறைந்து போகும்

பரிகாரம்

ஆஞ்சநேயர் காலை, மாலை வேளைகளில் வலம் வந்து வழிபடலாம்

எட்டு முக விளக்கேற்றி 3 முறை சனி அஷ்டோத்திரத்தையும், 48 தடவை மூல மந்திர ஜபத்தையும் சொல்வது நல்ல பரிகாரமாகும். 8 சனிக்கிழமை திருநள்ளாறு சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். தினமும் காக்கைக்கு அன்னமளிக்கலாம், எட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்

தினமும் 9 முறை நவக்கிரகங்கள் ஸ்லோகத்தையும் சுந்தரகாண்ட பாராயணம் செய்வது சிறப்பு பரிகாரமாகும்

குழந்தை பிறப்புக்கு பலவகையான பரிகாரம்



அன்பர்களே. இன்று நாம் காணவிருப்பது குழந்தை பிறப்பதற்கான பரிகாரம் பற்றியதாகும். ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே அவருக்கு குழந்தை பேறு இருக்கிறதா? இல்லையா? என்பதை காட்டும் ஸ்தானம் 5ம் ஸ்தானம் இயற்கையிலேயே 5வது இடத்தில் ராகு இருந்தாலும், ஆண் ஜாதகத்திலே 5வது இடத்தில் ராகு இருந்தாலும், பெண் ஜாதகத்தில் 5லோ, 9லோ பாவிகள் இருந்தாலும், பாவிகளுடைய பார்வைகள் இருந்தாலும், பாவிகளோடு கலந்திருந்தாலும், இந்த மக்கள் பேறு என்று சொல்லப்படுகின்ற இந்த குழந்தை செல்வத்தைத் தடுத்து விடுகிறது

அதற்கான முக்கிய பரிகாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக அன்பர்களுக்கு அளிக்க இருக்கிறோம்.

5லே ராகு இருக்க பெற்றாலும்கூட

பத்ரகாளியை" பார்த்த மாத்திரத்திலேயே ராகு கதிகலங்கி விடுவார். அதனால்தான் சிவ ஆலயத்தில் இருக்கின்ற துர்க்கை வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.

ராகு "கரும்பாம்பு" என்று கூறுவதால் சனியின் குணத்தோடு ஒத்திருப்பதால் அவர் கருங்கோல் என்றும் அழைக்கப்படுகிறார். அவருடைய தினமான சனியன்று நீங்கள் தீபத்தை ஏற்றி வைத்து வர, உங்களுக்கு குழந்தைபேறுக்கு ஒரு அருமையான வாய்ப்பு, 5ல் செவ்வாய் இருக்கப்பெற்றவர்களுக்கு அடிக்கடி

*கருச்சிதைவு ஏற்படுகின்றது.

உலகத்திலேயே, இந்து மதத்தில் மட்டும்தான் இந்த கருச்சிதைவிற்கு என்று ஒரு கடவுள் இருக்கிறார். இவ்வாறு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு அந்த பெறாத தன்மையை விலக்க

கர்ப்பரட்சாம்பிகை' கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். அல்லது உங்கள் ஊரிலே இருக்கப்பெற்ற

கருக்காத்தம்மன்" இருக்கப்பெற்றால் அல்லது முருகப்பெருமானை வழிபட்டாலும் கருச்சிதைவிலிருந்து, காப்பார் 'நரசிம்ம வழிபாடு இந்த கருச்சிதைவை தடுக்கும் வல்லமை கொண்டது

செவ்வாயை "இரத்தகாரகன்" என்று சொல்வதால், செவ்வாயின் மூலம் ஏற்படும் இந்தக்கருச்சிதைவுகளைத் தடுக்கின்ற கடவுள்களை வரிசைகிரமமாக கூறியிருக்கின்றோம். அன்பர்கள் தங்களின் சௌகரியத்துக்கு தகுந்தாற் போன்ற, கடவுள்கள் வணங்கி, தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்

5வது இடத்திலே சனி இருக்கப்பிறந்தவர்களுக்கு காலதாமதமான, மகப்பேறு என்று சொல்லப்படுகின்ற குழந்தைச்செல்வம் கிடைக்கிறது. 5 குழந்தை செல்வத்தைக்காட்டுகின்ற பகுதியாக இருந்தாலும் கூட ஜோதிடத்திலே 9 என்பது பாக்கியத்தைக் காட்டுகின்றது. குழந்தை அவ்வளவு முக்கியமா என்றால், அது மிகவும் முக்கியம்தான். ஏனென்றால் ஒரு மனிதன் தன் இறப்பிற்குப்பின் செய்யப்படும் இறுதிச்சடங்குகளை காண இயலாவிட்டாலும், அச்சடங்குகள் முறையாக நடைபெற வேண்டுமென்று ஆண் மார்பகத்தில் மிகவும் எதிர்பார்ப்பான், அதற்கு மிகவும் அவசியம் பிள்ளைச் செல்வம் ஆகும்

அந்த பிள்ளைச்செல்வத்திற்காக பெற்றோர்கள் எப்படியெல்லாம் ஏங்குகிறார்கள். எந்தெந்த பரிகாரங்களை அவர்கள் செய்கிறார்கள். 'எதை தின்றால் பித்தம் தீரும்" என்ற நிலையிலிருப்பவர்களுக்கு இந்த பரிகார தொகுப்பு, ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை ஒவ்வொரு சனியன்றும் சனியிருக்கப்பிறந்தவர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வர, அது நிறைவேறும் பட்ச்சத்தில் அவருக்கு வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாற்றலாம். அவரை வழிபடவழிபட இந்த சனியால் ஏற்படும் தொல்லை அகன்று வருகிறது

லே சூரியன் இருக்கப்பிறந்தவர்களுக்கு இப்படிப்பட்ட மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. சிவனை நீங்கள் வழிபடும்பொழுது, திருவண்ணமலையிலே பஞ்சஸ்தலங்களிலே ஒன்றான அக்கினியை சாட்சியாக வைத்து சித்தர்கள் பரவியிருக்கும் சித்தர்பூமி' என்றழைக்கப்படுமிடத்திலே வியாழனன்று வரும் பௌர்ணமி தினத்திலே கிரிவலம் வந்து சிவபிரானை வணங்கி மூலிகைக் காற்றை சுவாசிக்க 5லிருக்கும் சூரியன் குழந்தைப்பேறை கொடுத்துவிடுகிறது

கேது இருக்கப்பிறந்தவர்கள் விநாயகப்பெருமானை வணங்கி விநாயகர் காயத்ரி மந்திரத்தை சொல்லி வர அரச மர விநாயகரை வழிபட்டு, தொட்டில் கட்ட கேதுவால் ஏற்பட்ட தோஷம் அகலும்

ஏற்கனவே கூறியது போன்று புதுச்சேரி அன்னையை வணங்கி உங்களது பிரார்த்தனையை எழுதி மனதார பிரார்த்தித்து, குழந்தை பேறு கிடைக்க வேண்டினால், பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும் என்பது உறுதி, என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கி

Tuesday, June 23, 2020

ஏழாம் இடத்தில் சனி பரிகாரம்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 7-ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்களுக்கு திருமணம் வித்தியாசமானதாக அமையும். ஜாதி, மதம், குலம் தாண்டி கணவன் - மனைவி அமைப்பு இருக்கும். காதல் திருமணம் வெற்றியடைந்தாலும் அதற்காக வருந்தவும் செய்வீர்கள். மனைவியோடு சேர்ந்து வாழமுடியாத நிலை உருவாகும். இதனால் சிலர் சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்று பிழைக்க வேண்டும்

பரிகாரம்

ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள சக்கரத்தாழ்வாரையும், தாயாரையும் ரங்கநாதரையும் தரிசனம் செய்து வரலாம்

நீலக்கல் மோதிரத்தை பெருவிரலில் அணிந்து கொள்ளலாம். மேலும், ஆஞ்ச நேயருக்கு எலுமிச்சை மாலையும் வெற்றிலை மாலையும், மல்லிகைப்பூ மாலையும் அணிவித்து 18 பேருக்கு பிரசாதம் அளிக்கலாம். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம், விஷ்ணு சகஸ் தர நாமத்தையும், லலிதா சகஸ்தர நாமத்தையும், சொல்லி வருவது உகந்தாக அமையும்

ஆறுமுக சித்தரின் ரகசியம்



அன்பர்களே, இன்று நாம் காணவிருக்கும் சித்தர்,ஆறுமுக சித்தர்

சிவகங்கை மாவட்டம், கோட்டையூரிலே குடிகொண்டிருக்கும் இவரின் பூர்வீகம் கொங்குநாடு. 5 வயதிலேயே வீட்டை விட்டு வெளியே இந்திய தேசம் முழுவதும் சுற்றி பல மஹான்களைச் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றார்

எச் சிக்கலையும் (துன்பங்களையும்) பொறுக்கும் சுவாமி" அதாவது எந்த வித சிக்கலையும் தீர்த்து வைக்கும் சித்தர் என்பதால் எச் சிக்கலையும் பொறுக்கு ஆறுமுக சித்தர் என்ற பெயர் மருவியதாகக் கூறுவர்

ஒருமுறை திருநெல்வேலியிலே கோவணத்துடன் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, காவலர்கள் அவரை துரத்த சித்தர் ஓடிச்சென்று ஒரு குப்பைத்தொட்டியின் அருகில் ஒளிந்துகொண்டார். அவரைப்பிடிக்க முயற்சி செய்த காவலர் சிலையாய் மாறிப்போனார். அப்பொழுதுதான் மக்கள் இவரின் பெருமையை உணர துவங்கினர்.பின்பு காவலருக்கு உயிர் கொடுக்க உயிர் பெற்ற காவலர் அதன் பின்பு சித்தருக்கு மிகுந்த மரியாதை செலுத்தத் துவங்கினார்

மூதேவியின் உபாசகராக இருக்கின்ற இவர் முருகனின் அருளைப் பெற்றவர்

விராலிமலையில் வராஹியை வழிபடுபவர். தான் முக்தி பெறப்போவதை முன்கூட்டியே அறிவித்தவர். ஒருமுறை காஞ்சி மஹா பெரியவர் இவரைப் பார்க்கும்பொழுது இவரின் பெருமையைக் கூற, மக்கள் சித்தரின் சிறப்பை அறிந்து பெண்களின் இன்னல்கள் பலவற்றைத் தீர்த்துக் கொண்டனர்

சித்தர் அவர்கள் முருக பக்தர் என்பதால் முருகனுக்குரிய வைகாசி விசாகம் நாளன்று முக்தி அடைந்ததாக கூறுவர்

இவரின் சமாதி காரைக்குடியின் வடக்கிலே கோட்டையூர் சிவன் கோயிலிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலே டவுன் எக்ஸ்டன்ஷன் பகுதியிலே உள்ளது

சித்தர்களின் மகாபுருஷராக விளங்கிய ஆறுமுக சித்தர் பிறர் துன்பங்களை தனதாக எண்ணி போக்கினார்.

விராலிமலை குகையிலிருந்து பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார். அயல்நாட்டு அன்பர்களின் நோய்களையும் தீர்த்து. இன்னும் இவரின் சமாதியில் சென்று வணங்கும் பொழுது அனைத்து துன்பங்களும் அகலுகின்றன

விஞ்ஞானத்தின் அதிவேக வளர்ச்சியால் மெய்ஞானமென்பதின் மீது நமக்குள்ள நம்பிக்கை குறைந்து போயுள்ளது என்பது உண்மை. இருப்பினும் நாம் காணும் சித்தர்களின் அருளாலும், சக்தியாலும் நமது துன்பங்களை கரைப்போம் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்

பரிகாரம் செய்து பலிதம் ஆகவில்லையா

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது

ஒரு சிலர் தாங்கள் எவ்வளவோ, பரிகாரம் செய்துவிட்டோம், ஆனால் அதற்கான பலன்கள் இல்லை, நாங்கள் எவ்வளவோ தெய்வங்களை வணங்கி விட்டேன் அதற்குண்டான பலன்கள் இல்லை நீங்கள் ஏராளமான தெய்வீக முயற்சிகளை, ஹோமங்களை செய்திருக்கின்றோம். இவ்வளவு செய்தும் அதற்கான பலன்கள் கிடைக்கவில்லை, என்று ஏங்கும் அன்பர்களுக்கு நண்பர்களுக்கு இன்று Dr.ஸ்ரீ குமார் அவர்கள் வழங்கும் பரிகாரம் நிச்சயமாக பலன் கொடுக்கும் என்பது திண்ணம்

நாம் தெய்வங்களை வணங்கும்பொழுது குலதெய்வங்களை வணங்கிவிட்டு, நமது இஷ்ட தெய்வங்களையும், பரிகார தெய்வங்களையும் வேண்டும்பொழுது அந்த பரிகாரங்களுக்கு, ஒரு சக்தி வந்துவிடுகிறது. அவர்கள் எதை எதிர்பார்த்தார்களோ அது அவர்களுக்கு கிடைக்கின்றது. ஒரு சிலர் குரு அருளும் வேண்டும், திரு அருளும் வேண்டும் என்பார்கள், குரு அருள் இன்றி, திரு அருள் இல்லை, எந்த தெய்வத்தை நாம் வணங்கினாலும், குருவை வணங்கி, அந்த தெய்வங்களை வணங்க நமது பரிகாரங்கள் வேகமாகவும், எதிர்பார்த்த விதமாகவும் நம்மை வந்தடைகிறது.

ஏனென்றால் தெய்வத்திற்கும், நமக்கும் இடையே ஒரு குரு இருக்கின்றார். கு என்றால் அறியாமை, ரு என்றால் அழிப்பவன். அதாவது மகான்களை நீங்கள் குருவாக ஏற்றுக்கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு சக்திவாய்ந்த ஒரு மகான்தான், "ஸ்ரீ ராகவேந்திரர்",

ஸ்ரீ ராகவேந்திரரை" வியாழனன்று

"மந்திராலயம்" சென்று வணங்கி அங்கே இருக்கின்ற "பஞ்சமுகி" ஆஞ்சநேயரையும் வணங்கி, அவருடைய ஆலயத்திலிருந்து அவருடைய தாரக மந்திரத்தை முழங்கி அதற்குப்பிறகு நம் இஷ்ட தெய்வங்கள் பரிகாரதெய்வங்களை வணங்கி நம் கோரிக்கைகளை வைக்கும் பொழுது, இந்த குருமார்கள் நமக்கு, நம் பாதையிலே அவர்கள் நம்மை வெற்றியடையச் செய்கிறார்கள் ஏனென்றால், ஸ்ரீராகவேந்திரர் நாம் வணங்கும்பொழுது, குறிப்பாக வியாழனன்று வணங்குகின்ற அந்த நேரத்திலே, பலவிதமான அற்புத அனுபவங்களை நீங்கள் உங்கள் வாழ்கையிலே அடைய பெறுவீர்கள்

நீங்கள் ஒரே ஒருமுறையேனும் கண்டிப்பாக

"மந்த்ராலயம்" செல்ல வேண்டும், அது வியாழனாக இருந்து, நீங்கள் உங்கள் பிரார்த்தனையை அங்கே முன் வைக்கும் பொழுது அதி அற்புதமான உணர்வுகளைப் பெறுவீர்கள்

தியான நிலையிலும் சரி, நிஜ நிலையிலும் சரி இந்த இவ்விரு நிலையிலும் நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, நம்மை வழி நடத்திச் செல்லுகின்ற ஒரு சக்தி வாய்ந்த குருவாக "ஸ்ரீராகவேந்திரர்"

திகழ்கிறார்

ஸ்ரீ ராகவேந்திரரை" வணங்கும்பொழுது நாம் முன் வைக்கின்ற அந்த பரிகாரங்கள், நாம் எந்த காரணத்திற்காக வணங்குகிறோமோ, அந்த காரணத்தை அவர்கள் நம் கனவு நிலையிலோ அல்லது பிறரின் மூலமாகவோ நமக்கு உதவிகள் செய்வார் என்றால், இதுதான் குரு அருள் என்று கூறுகிறார்கள்

இப்படிப்பட்ட குரு அருளை, நீங்கள் பெறுவதற்கு, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், ஒரு வியாழனன்று

"மந்திராலயம்" அவரை வணங்க உங்களின் பிரார்த்தனை நிறைவேறும் என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்க

Monday, June 22, 2020

ஆறாமிடத்து சனி பரிகாரம்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 6-ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்களுக்கு "அற்புதமான யோகம்"

என பலரும் பாராட்டும் வகையில் வாழ்க்கை அமையும், இவர்களுக்கு எதிரிகள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்

குடும்பத்தில் யாரேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் இந்த ஜாதகரால் அவர்களது நோய் குறைந்து குடும்ப விருத்தி ஏற்படும். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் சமூக சேவையில் பிரபலமாக திகழ்வர். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களால் ஆதாயமுண்டு

சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு

பரிகாரம்

மேற்சொன்னவை யாருக்கேனும் நடக்கவில்லையெனில் வீட்டில் "நட்சத்திரம் ஹோமம்" செய்யலாம் . 27 பேர்களுக்கு அன்னதானம் செய்வதும், 5 பெண்களுக்கு வஸ்திரம் வாங்கி தருவது தோஷ பரிகாரமாகும். மேலும், ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி 9 முறை வலம் வருவதும், 8 முறை விஷ்ணு சகஸ்ர நாமத்தை புனித ஸ்தலங்களில் பாராயணம் செய்வதும் சிறந்த தோஷ பரிகாரமாகும்

அகப்பை சித்தர் வழிபாடு

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான

அகப்பைச்சித்தர் பற்றியாகும்

இந்த அகப்பை சித்தர் என்பவர் யாரென்றால், திருவள்ளுவர் வம்சத்திலே தோன்றிய ஒரு அருமையான நெசவாளர் குடும்பத்திலே பிறந்து, வறுமை என்பதையே அறியாதவர், செழிப்பான வாழ்கையை வாழ்ந்துகொண்டிருந்த நம் சித்தர் பெருமான் அவர்கள், தனக்கு இந்த பொருளாசை தேவையில்லை, அருளாசை ஒன்றே போதும், என்று கூறி இறைவனைத் தேடி காடுகளில்,மேடுகளில்,நடந்தது ஓய்ந்தார், காய்ந்தார், யோசித்தார் கண்டார்

அப்பொழுதுதான், அவரின் கண்ணுக்கு ஒன்று தெரிந்து, அதுதான் "ஜோதிமரம்

அந்த ஜோதிமரத்திலே, இவர் உள்ளே நுழைந்து அந்த மரத்தின் உள்ளே உட்கார்ந்து கொண்டு, தன் குருவைத் தேடுகின்றார். தேடிக்கொண்டே இருக்கின்றார். இறுதியில் வேதவியாசர் இவருக்கு குருவாக அமர்ந்து அனைத்துவிதமான ஞானங்களை வாரி வழங்குகின்றார்

இந்த அகப்பை சித்தர் அருளாசி பெற்று ஞானம் அடைந்து, அஞ்ஞான நிலையிலேயே மக்களை வழி நடத்துகின்றார். அவர் கண்ட ரகசியம்தான் அனைத்து விதமான துன்பங்களுக்கும் காரணம் இந்த மனம் என்று. அதாவது அகமே அனைத்துவிதமான பாவங்களுக்கும், துன்பங்களுக்கும் காரணமாக இருக்கின்றது என்று இவர் கண்டுணர்ந்தவர்

அப்பொழுது அகப்பைச்சித்தர் நாளடைவில்

"அகப்பேய்ச் சித்தர்" என்றழைக்கப்பட்டார் இவரைவியாழனன்று மஞ்சள் வஸ்திரம் மஞ்சள் நிற மலர், வாழைக்கனி ஆகியவற்றுடன் வணங்கி வந்தால் பின் வரும் பலன்களை அன்பர்களுக்கு அருளுகின்றார்

யார்யாருக்கெல்லாம் குருவால் குழந்தை பாக்கியம் இல்லையோ, குதூகலம் இல்லையோ, பணப்பிரச்சினை அரசாங்கப்பிரச்சினை அனைத்தும் இவரை வணங்குவதால் தீர்க்கப்படுகின்றன

வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், தொழில் செய்து நஷ்டப்பட்டவர்களுக்கு கஷ்டப்பட்டவர்களுக்கு இவர் ஆறுதல் கொடுத்து தேற்றுவார்

மேலும், லஷ்மி கடாட்சம் இல்லாதவர்கள் இவரை வணங்கும் பொழுது, லஷ்மி கடாட்சம் தோன்றிவிடும். உடலில் இருக்கின்ற குடலிலே நோய் ஏற்பட்டால் இவரை வணங்கும்பொழுது, அந்நோய் குணமாகி மறைந்து விடும்

நீங்கள் புகழ் பெற்றவராக, ஞானம் பெற்றவராக , மனத்தெளிவு, ஆத்மதெளிவு பெற்றவராக விளங்கிவிடுகின்றீர்கள் என்றால் அது அகப்பை சித்தரின் கருணையும், அருளுமேயன்றி வேறேதும் இல்லை

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு வியாழனன்று சென்னை தாம்பரம் மாடம்பாக்கத்திலுள்ள தேன்புரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அகப்பைச்சித்தரை மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் மலர் வாழைக்கனி சகிதமாக வணங்கும் பொழுது அதன் நன்மைகளை நாம் ஏராளமாகப்பெருகின்றோம். என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

அகப்பைச்சித்தர் குரு என்ற கிரகத்திற்கு சாட்சியாக இருக்கின்றார். இவரை வணங்கும்பொழுது குருவால் ஏற்பட்ட தீமைகள் யாவும், நன்மையாக மாறி கடாட்சம் அளிக்கின்றார்

எப்பொழுதெல்லாம் குரு உங்கள் ஜாதகத்தில் மறைகின்றாரோ அப்பொழுது நாம் அகப்பைச்சித்தரை வணங்க நமக்கு அருள் பாலிக்கின்றார். என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

பில்லி சூனியம் ஏவல் நீங்க பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணப்போவது பில்லி, சூன்யம், ஏவல் பற்றியதாகும்

பில்லியாவது, சூன்யமாவது, ஏவலாவது என்ற உங்கள் முணுமுணுப்பு எங்களுக்கு கேட்கிறது. செவ்வாய் கிரகதிற்கே விண்கலம் அனுப்பி அங்கு நீர் இருக்கிறதா? உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று விஞ்ஞானம் அதிவேகமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் இதென்ன மூடப் பழக்கம், இது சாத்தியமா? என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. இருப்பினும் சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டியது எங்களின் பொறுப்பல்லவா

அன்பர்களே, உதாரணத்திர்க்கென்று எடுத்துக்கொள்வோம், நாம் காணும் திரைப்படத்தில் நாயகன் என்று ஒருவர் இருந்தால், அவனுக்கு எதிரி என்று ஒருவன் இருப்பான். பிறப்பிருந்தால் இறப்பும் இருக்கும், நல்ல காலம் என்றிருந்தால் கெட்ட காலமும் இருக்கும், இப்படி எவ்வளவோ உதாரணங்களை சொல்லிக்கொண்டு போகலாம்

ரத்தினசுருக்கமாகச் சொன்னால், சூன்யம் என்பது அனைவரையும் தாக்கி விடாது என்று நம்புங்கள். ஒரு சிலர் இந்த சூன்யம் பீடிக்கப்பட்டதால் வாழ்வில் சீரழிந்துவிட்டேனே என்று புலம்புகிறார்களே அதில் உண்மையில்லையா? உண்மைதான். சற்று குழப்பமாகத்தான் இருக்கும்

இன்றைய யுகத்திலே பொறாமை என்பது ஏழைகளிடம் இருக்கிறது நடுத்தரவர்கத்தினரிடம் இருக்கிறது

பணக்காரர்களிடம் இருக்கிறது. சில வக்கிரபுத்தி படைத்தவர்களுக்கு பிறர் சந்தோஷமாக இருந்தால் பிடிக்காது செய்யும் செயல்களில் வெற்றி பெற்றால் பொறுக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட வக்கிரபுத்தி காரர்களுடன் மந்திரதந்திரிகளும் சேரும்பொழுது நிலைமை மோசமாகி வருகிறது.

அவ்வாறு, இந்த பில்லி, சூன்ய, ஏவலால் பாதிக்கப்பட்ட ஜாதகர்களின் பட்டியலே உள்ளது ஒருவரது ஜனன ஜாதகத்திலே பத்தாவது இடத்திலே சூரியன் ஆறாவது இடத்திலே செவ்வாய் பனிரெண்டாவது இடத்திலே சனி, இரண்டாவது இடத்திலே ராகு இருக்கப்பிறந்தவர்களை கண்டிப்பாக பில்லி, சூன்யம், ஏவல் பாதிக்கும், அப்படிப்பட்டவர்கள் தங்களது ஜாதகத்தையோ அல்லது பிறந்த தேதியையோ பிறரிடம் சொல்லக் கூடாது

இருப்பதிலேயே மிகமிக சக்திவாய்ந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது

ஏனென்றால், இன்றைய நிலையில் உங்கள் ஜாதகம் இல்லாது போனாலும் கூட, உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம் ஏன்? பிறந்த இடத்தை வைத்தே கூட கணித்துவிடுகிறார்கள். அருமை அன்பர்களே, துளியளவும் கலங்காதீர்கள் அதற்கு ஒரு அருமையான, மிகவும் சுலபமான அதே சமயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பரிகாரம் உள்ளது.அதை என்ன

உங்கள் ஊரிலே உள்ள "அய்யனார்

கோயில் அல்லது "காளி கோயில் இருந்தால் இந்த பில்லி, சூன்யம், ஏவல் போன்றவைகளை "பஸ்பம்" செய்து விடும்

ஒவ்வொரு செவ்வாய் தினத்தன்றும் நீங்கள் உங்கள் ஊரிலே இருக்கிறது அய்யனாரிடமோ, காளியிடமோ சென்று மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்யும்பொழுது அதற்கு நல்ல பலன் கிடைக்கும். மேற்சொன்ன மூன்றும் உங்களை அண்டவே அண்டாது என்பது உறுதி. உங்களுக்கு வந்த வினைகளை நங்களயிங்கள்கூரப் பூருக்கின்ற சி அய்யனாரிடமோ, காளியிடமோ சென்று மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்யும்பொழுது அதற்கு நல்ல பலன் கிடைக்கும். மேற்சொன்ன மூன்றும் உங்களை அண்டவே அண்டாது என்பது உறுதி. உங்களுக்கு வந்த வினைகளை மன உறுதியுடன் தைரியமாக எதிர்த்து நிறு நோக்கும்போது அவையனைத்தும் தவிடு பொடியாகி காற்றில் தூசாக பறந்து மறைந்து விடும். என்பதிலும் அதன் பின் நீங்கள் பெரும் ஆனந்தம் அளவிட முடியாதது என்பதிலும் அணுவளவு கூட சந்தேகமே இல்லை இது உறுதி என்ற நம்பிக்கை வார்த்தையை உங்களுக்கு அளித்து இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

Sunday, June 21, 2020

ஐந்தில் சனி இருக்க பரிகாரம்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 5 - ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படகூடிய சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்கள் செய்யும் காரியம் தாமாதமாகவே முடியும்

சுபகாரியத்தில் தடை ஏற்படும். வீட்டை அடிக்கடி மாற்றம் செய்வர். இல்லை எனில் வீட்டில் சுபிட்சம் குறைந்து பிரச்சனைகள் அதிகரிக்கும். சின்ன விஷயத்திற்காக கவலைப்பட்டு நிம்மதியின்றி திண்டாடுவீர்கள். கணவன்- மனைவி உறவு சுமாராக இருக்கும். குழந்தைகள் பழியை ஏற்க வேண்டியிருக்கும்

பரிகாரம்

உடனடியாக சுதர்சன ஹோமத்தை செய்ய வேண்டும், வீட்டிலேயே "கீதா ஹோமம்"

5 பிராமணர்கள் கொண்டு செய்து 10 பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம்

மற்றும் குருவாயூரப்பனுக்கு அவரவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை துலாபாரமாகவும், அபிஷேகமாகவும் செய்வது உகந்தது. சுசீந்திரம் சென்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சூட்டி அர்ச்சனை செய்து வழிபடலாம்

நவநாத சித்தர் இரகசியம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருக்கும் சித்தர், நவநாத சித்தர் இவர் கொல்லி மலையிலும், இலங்கை குயின்ஸ்பெரியிலும் பல சித்துக்களை புரிந்தவர்

அகன்ற மார்பு, கூரிய பார்வை, நீண்ட சடை முடியோடு காணப்படுபவர். கொல்லி மலை குகையிலிருந்து பசியோடு வந்தா பெருமாள் அம்மையார் என்ற பெண்மணியின் வீட்டின் முன்பு பசிக்கு உணவு கேட்டார். வழக்கமாக சித்தருக்கு உணவளிக்கும் அம்மையார் அன்றைய தினம் காய்ச்சலில் பாதிக்கப்பட்டதால் இவரின் குரல் கேட்டு வாசற்படியில் வந்து நின்றார். அதைக்கண்ட சித்தர், மீண்டும் உணவு கேட்டார்

தான் காய்ச்சலால் உடல்நலக்குறைவுற்றதைக் கூறிய அம்மையாரிடம் சித்தர், நீங்கள் பொய் சொல்லுகின்றீர்கள், இன்று ஏகதடபுடலாக உணவு சமைத்துள்ளீர்கள் என சிரித்துக் கொண்டே கூற, தன் நிலையைக் கூறி தான் சமைக்காததையும் கூறினார் அந்த அம்மையார்

அவரை இடைமறித்த சித்தர், உள்ளிருந்து உணவை எடுத்து வருமாறு கூறினார்

குழப்பத்துடன் உள்ளே சென்ற அம்மையார் அங்கு கண்ட காட்சி அதிர்ச்சி அளித்தது

அங்கு அறுசுவை உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. அம்மையார் ஆச்சர்யப்பட்டு ஒரு இலையில் சித்தருக்கு உணவை எடுத்து அவரிடம் அளித்தார்

சித்தர் அதை வாங்கி மகிழ்வுடன் சாப்பிட்டு விட்டு, அந்த அம்மையாரிடம் வீட்டினுள் குவளையில் உள்ள கஷாயத்தை அருந்தினால் காய்ச்சல் குணமாகும் என்று கூறிச் சென்றார். அதன்படி அம்மையார் அந்த கஷாயத்தை அருந்த காய்ச்சல் விலகி புத்துணர்வு பெற்றார். பின்பு அவருக்கு பசி உணர்வு தோன்ற பாத்திரங்களில் இருந்த உணவுகளை வயிராற உண்டார்

இந்த அம்மையாருக்கு கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள வீட்டைத் தவிர்த்து இலங்கை குயின்ஸ்பெரியில் ஒரு தேயிலைத் தோட்டமும் உள்ளது. இரண்டு இடங்களிலும் 6 மாதகால இடைவெளியில் தங்கியிருப்பார். ஒரு சமயம் இலங்கை குயின்ஸ் பெரியில் முருகன் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவதற்காக இந்த அம்மையார் சென்றார். அப்பொழுது சித்தரை அழைத்துச் செல்ல மறந்துவிட்டார். நாட்களோ மிகக்குறைவாக இருந்தது. அதற்குள் அவரை அழைத்துவர இயலாது. அம்மையார் வருந்திய நிலையிலிருக்கும்போது, நவநாத சித்தர் எதிரே வந்தார்

சுய நினைவு பெற்ற அம்மையார் சித்தருடன் மகிழ்வுடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார். அதுமட்டுமின்றி சித்தர் அங்கிருந்து அம்மையாருடன் கோயிலின் பின் வழியாக ஒரு தோட்டத்திலே நுழைந்து கொல்லி மலைக்கு அழைத்து வந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இது தான் சித்தர்களின் மகிமை

சித்தர்கள் நினைத்த இடத்திற்கு, நினைத்த மாத்திரத்தில் சென்று விடும் வல்லமை படைத்தவர்கள் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்

சுக்கிரன் ராகு சுக்கிரன் கேது உள்ளவர்களுக்கு பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது சுக்கிரனும் ராகுவும், சுக்கிரனும் கேதுவும்.

ராகு,கேது சாயா கிரகங்கள் என்று கூறுகிறார்கள். வாரத்தின் 7 நாட்கள் 7 கிரகங்கள் குறிக்க இந்த கிரகங்கள் எங்கேயிருந்து வந்தது என்பது ஒரு கேள்வி.

சாயாகிரகங்கள் என்றழைக்கப்படும் இவ்விருகிரகங்களை மாய கிரகங்கள் என்றும் கூறுகிறார்கள். சித்தர்கள் கரும்பாம்பு, செம்பாம்பு என்று கூறுகிறார்கள். ஜோதிட வல்லுனர்கள் ராகுவை "சனியோடு ஒப்பிடுகிறார்கள் கேதுவை செவ்வாய் ஒப்பிடுகிறார்கள்" இவர்களுக்கு ஆட்சிகாலம் ஒன்றரை வருடம், இந்த ராகு கேது அப்படி என்ன செய்து விடும்

சுக்கிரன் ஒரு ஜாதகத்திலே நல்ல நிலையிலே இருந்தால், அற்புதமான திருமண வாழ்க்கை, சுக்கிரன் என்றாலே சுபிட்சகாரகன். சுக்கிரன் நன்றாக இருந்தாலே அவர்கள் திருமண இன்பத்தை அழகாக அனுபவிப்பார்கள் களஸ்திரகாரகன்" என்று சுக்கிரனுக்கு மட்டும்தான் ஜோதிடசாஸ்திரத்தில் பெயருண்டு. ஆண்ஜாதகமாக இருந்தால் மனைவியை காட்டுகிறது

பெண் ஜாதகம் இருந்தால் கணவனைக்காட்டுகிறது. அப்படிப்பட்ட சுக்கிரன் பாவிகள் காட்டு

தோஷம் பெறாது, பாவிகளுடைய பார்வை பெற்று இருந்தால் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் சூறாவளி கிடையாது, துன்ப அலைகள் கிடையாது அங்கே புயல் கிடையாது எப்பொழுதும் தென்றல் வீசும், வசந்தம் வீசும் அவர்களுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் இன்ப கீதம் ஒலிக்கும்

அப்படிப்பட்ட ராகு சேர்ந்தால், ராகு என்பது இஸ்லாமியரை காட்டுகிறது. கேது என்பது கிறிஸ்தவரைக் காட்டுகிறது

சுக்கிரன், சந்திரன் ராகு, கேது சேரும்பொழுது அது கலப்பு திருமணத்திற்கு வழி வகுக்கிறது.

அல்லது அவர்களுடைய திருமண வாழ்க்கையில் அமைதியாக ஓடை ஓடிக்கொண்டிருந்தால், அதில் கடலை உருவாக்கி விடுகிறது. அப்பொழுது சுக்கிரனும், ராகுவும் சேர்ந்திருந்தால் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் பின்னம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படாதவண்ணம் அவர்களை வழிநடத்த வேண்டும். சுக்கிரன் எதைக்காட்டுகின்றது என்றால், சுபீட்சமான வாழ்வைக் காட்டுகின்றது சுக்கிரனுடைய ஸ்தலமான இரண்டு ஸ்தலங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டும். ஒன்று சூரியனார் கோயில் அருகாமையிலுள்ள "கஞ்சனூர் இது ஒரு சிவஸ்தலம். ஒரு கோயிலுக்கு பரிகாரத்தின் அடிப்படையிலே, செல்ல ஆரம்பித்தால், சிவாய நம" என்று அங்கே ஆறு மணிநேரம் அம்மந்திரத்தை ஜபிக்க வேண்டும். அப்பொழுதுதான் அற்புதமான பயோ மாக்னடிக் பீல்ட்" என்று அழைக்கப்படுகின்ற "காந்த அலைகள் நமது ஆராவை உடைத்து அந்தக் கோயிலின் உள்ளே இருக்கின்ற அற்புத சக்தியின் உள்ளே சென்று சக்கரங்களை இயக்குகின்ற சக்தி நம் கர்மாவை கசக்குகின்ற, பொசுக்குகின்ற அந்த கர்மாவிலிருந்து விடுதலை அடைகின்ற அண்ட பாக்கியத்தை நமக்கு கொடுக்க வேண்டுமென்றால் மேற்கூறிய பரிகார கோயிலிலே சுமார் ஆறு மணிநேரம் தங்கி குறிப்பிட்ட சிவசிந்தனையை (மந்திரத்தை) உச்சரிக்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் சென்றால், அங்கும் சுக்கிரனுக்கு ஒரு சுபீட்சமான தலமாக இருக்கின்றது.

ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை தொடர்ந்து ஆறு மணிநேரம் நீங்கள் மனதிலே ஒலித்து, மனதிலே அந்த ஸ்ரீரங்க மூர்த்தியை மனம் ஒன்றுபட வணங்கும்பொழுது, சுக்கிரன் கடாட்சம் முழுமையாக வந்து சேரும். அது போ ராகுவிற்கு சில கோயில்கள் இருக்கின்றன

அற்புதமான கோயில்களில் ஒன்று

"திருப்பாம்புரம் கோயிலுக்கு ஒரு வருடம் நீங்கள் செல்ல வேண்டும். அதற்குப் பிறகு "திருநாகேஸ்வரம்' ஒரு வருடம் செல்ல வேண்டும். அதன்பிறகு, நீங்கள்

"நாச்சியார் கோயில்' என்று அழைக்கப்படும் "கல் கருடனை

வணங்க வேண்டும்

சர்பங்களுக்கெல்லாம் மன்னனாக திகழுகின்ற "ஆதிசேஷனின் அம்சமாக இருக்கின்ற 'ராமானுஜரை" நீங்கள் வணங்கி வர வேண்டும். ராமானுஜரை வணங்க, வணங்க ராகுவின் தாக்குதல்கள் உங்கள் மீது விழாது. நீங்கள் சுபீட்சமாக இருக்கும்,சுகமாக இருக்கும்

தங்களின் வசதிக்கேற்ப மேற்கூறிய பரிகாரங்களை தேர்ந்தெடுத்து செய்து வாருங்கள். நிச்சயம் நீங்கள் பெரும் பலனை அடைவீர்கள் என்பது உறுதி என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

Saturday, June 20, 2020

கடுமையான விஷ ஜுரம் நீங்க பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, கடுமையான விஷ ஜுரம் தீர நாம் வணங்க வேண்டிய தெய்வம் பற்றியதாகும். ஒரு மனிதனுக்கு விஷ ஜுரம் பிறர்க்கு வராமல் குறிப்பாக அவனுக்கு மட்டும் வருவதற்கான காரணம் என்ன

மருத்துவம் என்னதான் உயர்ந்தாலும் ஒரு மனிதனுக்கு ஆகாத காலம் என்ற ஓன்று வந்துவிட்டால், விஷகிருமிகளால் அவன் பெரிதும் பாதிக்கப்படுகின்றான். அதற்கு தீர்வு இருக்கிறதா

இருக்கின்றது. ஜுரம் நோய் நீங்கிட வணங்க வேண்டிய திருத்தலம்

"திருக்கண்டீஸ்வரம்". திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் இத்தலம் உள்ளது. இறைவன்-பசுபதீஸ்வரர், இறைவி-சாந்த நாயகி, தலமரம்- வில்வம், இது காமதேனு வழிபட்ட தலம்

ஒருமுறை அம்பாள் பசு உரு தரித்து தம் கொம்பால் மண்ணைக் கிளறியவாறு இறைவனைத் தேடினாள். அப்பொழுது அம்பாளின் கொம்பால் சுயம்பு உருவாய் இருந்த இறைவனுக்கு காயமேற்பட்டு இரத்தம் வடிந்தது. இதைக் கண்ட அம்பாள் பதறினாள். பின்பு, தன்பாலை சொரிந்து இரத்தம் வடிவதை நிறுத்தினாள்

அப்படிப்பட்ட பெருமைமிகு ஸ்தலம் இது

மூன்று திருவடிகளுடன் கூடிய உரு இவ்வாலயத்தில் உள்ளது. ஜுரநோயால் வாடுவோர் வெந்நீர் அபிஷேகம் செய்து புழுங்கல் அரிசி நிவேதனம் செய்தால் நோய் குணமாகும். இறைவனுக்கு கட்டுப்படாதது எதுவுமில்லை நமக்கு பேரண்டம் இருப்பது இறைவனுக்கு கடுகளவு என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.

பலமான ஆரோக்கியம் பெற பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது ஒருவரது ஜாதக அமைப்பினை நாம் கவனிக்கும்பொழுது அவருடைய ஆரோக்கிய காலம், அவர் நோய்வாய்ப்படுகின்ற காலம் இவற்றை எளிதாக கூறிவிடலாம்

ஒவ்வொரு மனிதனுக்கும் தித்திப்பான ஒரு பகுதி இருக்கும்பொழுது, கசப்பான ஒரு பகுதியும் இருக்கும். ராசி சக்கரம் சதா சுழன்று கொண்டிருப்பதால், இன்பம் துன்பம், ஆரோக்கியம், நோய் என்று மாறி,மாறி ஒருமனிதனுக்கு வரும்

இந்தக்கால கட்டத்தில் நம் முன்னோர்கள் சில வியாதிகளை கர்ம வியாதிகள் என்றும் சில வியாதிகளை மர்ம வியாதிகள் என்றும், சில வியாதிகளை தீரும் வியாதிகள் என்றும், சில வியாதிகளை தீராத வியாதி என்றும் வகுத்து வைத்திருக்கின்றனர்

இப்படி தீராத வியாதிகள் ஏன் ஒரு மனிதனைத் தாக்குகின்றது, என்றால் அவன் சென்ற பிறவியிலே செய்த பாவம்.

அவன் செய்த வினையே அவனுக்கு செய்வினையாக செயல்படுகின்றது. நம் ஜாதகத்தை சற்று உற்று நோக்கும் போது

பதவி பூர்வ புண்ணிய பத்திரிகை

என்றுதான் நம் ஜாதகத்தை கூறுகிறார்கள்

ஒரு மனிதன் மரணம் என்று சொல்லப்படுகின்ற பகுதியிலே பாதிக்கப்படும்பொழுது, அபாயகரமான அறுவை சிகிச்சைகள், குணப்படுத்த முடியாத கொடிய நோய்கள், மரணத்தை நோக்கி தள்ளுகின்ற வியாதிகள் அம்மனிதனை தாக்கும் பொழுது அவன் திண்டாடி விடுகின்றான்

மனிதச் சந்தையிலே அவன் அனாதையாகி விடுகின்றான்

அப்பொழுதுதான் அவன் எப்படிப்பட்ட சொர்க்கமயமான வாழ்க்கையை வாழ்ந்தான் என்பது தெரியும். வியாதி வராதவரை நாம் நம் உடலுக்கு ராஜாவாக இருக்கின்றோம். வியாதி எப்போது நம்மை பாதிக்கின்றதோ அங்கிருந்து நம் வாழ்க்கை தடம் மாறி விடுகிறது

அப்படிப்பட்டவர்கள் நான் எந்த மருந்து சாப்பிட்டும் என் வியாதி தீர வில்லையே எந்தக்கோயிலுக்குச் சென்றும் என் வியாதி குணப்படவில்லையே, மருந்து மாத்திரை எல்லாவற்றையும் ஏன் நோய் விழுங்கி விடுகின்றதே என்று கவலைப்படுபவர்கள் ஒரு முறை "வாலாஜாப்பேட்டை தன்வந்திரி பெருமானிடம்" செல்ல வேண்டும். இத்திருத்தலம் உள்ள இடம் வேலூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் வாலாஜாப்பேட்டை, அங்கிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் 3கி.மீ தொலைவிலே "கீழ்புதுப்பேட்டையில்"

இந்த ஆலயம் அமைந்துள்ளது

இவ்வாலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் ஒரு "தன்வந்திரி படத்தை" ஒரு புதனன்று வாங்கி வைத்து கொண்டு

ஓம் ஸ்ரீம் தன்வந்திரி மூர்த்தியே போற்றி போற்றி" என்று நெய் தீபம் ஏற்றி அதை தண்ணீரிலே கரைத்து அந்தத்தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்திவர அப்பொழுது அவர்களின் நோய்கள் கட்டுப்படத் துவங்கும்

ரங்கநாத மூர்த்திக்கே ராஜ வைத்தியராய் இருந்த "தன்வந்திரியை

வணங்கும்பொழுது எந்தவித நோய் இருந்தாலும் அதிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கின்றது என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்

திக்குவாய் தோஷம் நீக்க பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது திக்குவாய் தோஷத்தை நீக்கி, சரளமாக பேசவைப்பதற்காக மேற்கொள்ளும் பரிகாரங்கள் பற்றியதாகும்

பொதுவாக, நாம் சரளமாக பேசிக்கொண்டிருக்கும்பொழுது, ஒருசிலர் திக்கித்திக்கிப் பேசி பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வெட்கப்பட்டு வேதனைப்படுவார்கள், பெரும் தாழ்வு மனப்பான்மை அவர்களை ஆட்கொள்ளும்

தங்களால் மற்றவர்களைப்போன்று சரளமாகவும், தெளிவாகவும் பேச முடியாதா? என்று ஏங்குவார்கள்

அவர்களைப் பார்த்து பரிதாபப்பட மட்டுமே அவர்களைச் சார்ந்தவர்களால் இயலும்

அக்குறையைப் போக்குவதற்கான வழிகளும், பரிகாரங்களும் அவர்களுக்குச்சொல்ல வருவதில்லை அதுதான் பரிதாபத்தின் உச்சம் அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம், அதி அற்புதமான பரிகாரம் ஒன்று காத்துக் கொண்டிருக்கின்றது. என்பது திண்ணம்

எல்லாம் வல்ல இறைவனின் திருவுள்ளத்தை நினைந்து இந்தப்பரிகாரம் உங்களுக்கு அளிக்கப்படுவதற்கு முன்பு திக்குவாய் உண்டாக்குகின்ற ஜாதகங்களின் அமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அன்பர்களுக்கு விளக்கவிருக்கின்றோம்

வாக்குஸ்தானம் என்று கூறப்படுகின்ற இடத்திலே, வாக்குஸ்தானாதிபதி மெலிந்து மறைந்து அவர் மோசமானநிலையில் இருந்தால், 'திக்குவாய்' தோஷம் ஏற்படுகின்றது. சில குழந்தைகள் பிறந்த சிறிது காலத்திற்குள்ளேயே பேசி வருகிறது, சில குழந்தைகள் பிறந்து பல வருடங்கள் ஆகியும் வாய் பேச முடியாமல் இருந்து விடுகின்றன, சில குழந்தைகள் திக்கி, திக்கி பேசுகிறது

இந்த நிலை ஏன்

வாக்குஸ்தானம் கடுமையாக பாதிப்பு இந்தநிலை இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை வந்து கொண்டிருக்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது

அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஓர் அற்புதமான பரிகாரத்தைத்தான் இப்பொழுது வழங்கிக் கொண்டிருக்கின்றோம். ஒரு சனிக்கிழமை ராகு, கேது ஸ்தலங்களுக்குச் சென்று ஒன்பது பத்தரை மணியளவிலே அந்தக் குழந்தைகளுக்கு அர்ச்சனை செய்து, ராகு, கேதுவின் அருளாசியும் கருணையையும் பெற்றால் நிச்சயமாக இந்த திக்குவாய் தோஷத்திலிருந்து விடுபடலாம்

இன்னொரு மாற்றுப்பரிகாரம் என்னவென்றால், இப்படி செய்ய இயலாதவர்கள் "நாங்கள் வீட்டிலேயே இருந்து பரிகாரம் செய்ய விரும்புகின்றோம்" என்று கூறினால் கேதுவை வசீகரிக்கின்ற கொள்ளை பத்து கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்

ராகுவை வசியம் செய்கின்ற கருப்பு உளுந்தையும் பத்து கிராம் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்

அவர்கள் (திக்குவாய் பிரச்சினை உடையவர்கள்) படுத்துறங்கும் தலையணையின் உள்ளே அவற்றை வைத்து தைத்து தொண்ணூறு தினம் அவர்கள் தொடர்ச்சியாக அதைப்பயன்படுத்தும்படி செய்ய வேண்டும், அவ்வாறு செய்யும் பொழுது கேதுவானவர் கொள்ளின் மீது வசியம் செய்யப்பட்டும், ராகுவானவர் கருப்பு உளுந்தினால் வசியம் செய்யப்பட்டும் கிடைக்கும் காந்த சக்தியினால் அவர்கள் மெல்லப்பேசத் துவங்கி விடுகிறார்கள்

இந்தமுறையும் சாத்தியமில்லை என்று வேறொருமுறை வேண்டுபவர்களுக்கு கொள்ளை மாவாக்கி, அம்மாவில் களி செய்து ஒருவேளை சாப்பிடும்படி செய்யவேண்டும். வாரத்தில் ஒருமுறை கருப்பு உளுந்து ஆன வடையையோ அல்லது களியையோ சாப்பிடும்படி செய்தால், அது அவர்களின் உடலில் சென்று இரத்தத்தில் கலந்து நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி அவர்களைப் பேச செய்து விடுகிறது என்றால் நம் முன்னோர்கள் நமக்களித்த முத்தான, சத்தான பரிகாரங்களை செய்ய நாம் ஏன் தயங்க வேண்டும்

குழந்தைகளுக்கு இதைச் செய்து கொடுத்து அந்தத் திக்குவாய் தோஷத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றி, அவர்களின் நல் வாழ்க்கைக்கு ஒளி ஏற்ற வேண்டுமென்று என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

Friday, June 19, 2020

சப்தரிஷிகளின் வழிபாடு

பெருமை வாய்ந்த அன்பர்களே, நீங்களனைவரும் இறைவனின் கருணையை பெற்ற பாக்கியசாலிகள், அதிர்ஷ்டசாலிகள், ஆண்டவனின் அருட்கடாட்சத்தை பெற்ற புண்ணியவான்கள். இன்றைய பகுதிக்கு செல்வோமா அன்பர்களே

இன்று நாம் காணவிருப்பது, ஏழு ரிஷிகள் என்றழைக்கப்படும் "சப்தரிஷிகளை"

பற்றியும், அவர்களை எந்தக் கிழமைகளில் வணங்கினால் அன்றைய தினம் மிகுந்த பலனை பெறலாம் என்பது பற்றியும் ஆகும்

நம் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நூறு கோடிக்கும் மேலான மக்களுக்கும் முன்னோடிகள் யாரென்றால் நம் முன்னோர்கள் என்போம். அது முற்றிலும் உண்மையே. ஆனால் நம் முன்னோர்கள் எந்த பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் என்று பார்க்கும்பொழுது, நமது வேதம் என்ன கூறுகிறது என்றால், ஏழு ரிஷிகள் மூலமாகத்தான் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களனைவரும் வந்துள்ளோம் என்றால் அது மிகையாகாது

அன்பர்களே, சப்தரிஷிகளை கிழமைக்கு ஒருவராக வணங்கி வேண்டும்பொழுது நாம் பெறுகின்ற பலன் மிகவும் அபாரமானது, ஆற்றல் மிக்கது

வாரத்தில் முதல் நாளானது ஞாயிறு

ஞாயிறு அன்று நீங்கள் படுக்கையைவிட்டு எழும்பொழுது சப்த ரிஷிகளில் ஒருவரான

"வசிஷ்ட முனி நீங்கள் நினைக்க வேண்டும். "வசிஷ்டர்" என்பவர் ஞாயிற்றுகிழமையின் அதிபதியாவார்

அவருடைய மந்திரத்தை உச்சரிக்கும்பொழுது ஞாயிறானது மிகவும் இனிமையாக இருக்கும். அந்த மந்திரமானது "ஓம் ஸ்ரீ வசிஷ்ட மகரிஷியே போற்றி போற்றி" என்று ஒன்பது முறை உச்சாடனம் செய்தால் ஞாயிறு தினம் மிகவும் நன்மையான தினமாக இருக்கும்

அடுத்து வருவது திங்கள். இந்த திங்கள் தினத்திற்கு, சப்தரிஷிகளில் ஒருவரான

பரத்வாஜர்" உரியவராவர். "பரத்வாஜர் ரிஷியை" திங்களன்று படுக்கையை விட்டு எழும்பொழுது 'ஓம் ஸ்ரீ பரத்வாஜ மகரிஷியே போற்றி போற்றி" என்று ஒன்பது முறை உச்சாடனம் செய்து வணங்கவேண்டும். அதன்பின் இந்த திங்கள் அற்புதமான நாளாக மாறும்.

செவ்வாயன்று செவ்வாய்க்கிழமைக்கு அதிபதியான "காசிப மகரிஷியை" போற்றி வேண்டும். "ஓம் ஸ்ரீ காசிப மகரிஷியே போற்றி போற்றி" என்று ஒன்பது முறை உச்சாடனம் செய்து வர அன்று ஏற்படும் தடைகள் அகலும் ஆனந்தம் பெருகும்

அடுத்தது, புதன்கிழமையாகும். இந்த புதன்கிழமைக்கு அதிபதியானவர்

"கௌதம மகரிஷியாவார்". இவரை நாம் எழும்பொழுது "ஓம் ஸ்ரீ கௌதம மகரிஷியே போற்றி போற்றி" என்று அவரை நினைக்க வேண்டும். அதன் மூலம் அன்றைய நாள் உங்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்

அதுபோல, வியாழனன்று அத்தரி மகரிஷியை" "ஓம் ஸ்ரீ அத்தரி மகரிஷியே போற்றி போற்றி" என்று அவர் நாளைக்கு வேண்டும். அதன் மூலம் அன்றைய நாள் உங்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்

அதுபோல, வியாழனன்று அத்தரி மகரிஷியை" "ஓம் ஸ்ரீ அத்தரி மகரிஷியே போற்றி போற்றி" என்றும்

வெள்ளியன்று "விஸ்வாமித்திரரை", "ஓம் ஸ்ரீ விஸ்வாமித்திர மகரிஷியே போற்றி போற்றி' என்றும் சனியன்று "ஜமத்கனி மகரிஷி" "ஓம் ஸ்ரீ ஜமத்கனி மகரிஷியே போற்றி போற்றி

என்றும் சொல்லிவர அற்புதமான ஒரு நிலைக்குச் சென்றால், அதில் எள்ளளவும் ஐயமில்லை என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

மூன்றாமிடம் சனி பரிகாரம்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 3-ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்கள் குறுக்கு வழியில் முன்னுக்கு வர நினைப்பவராக இருப்பர். இந்நேரம் அவர்களுக்கு சாதமாகவே அமையும். பதவி ஆசையிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்

ரேஸ் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கணிசமாக அமையும். சிலர் லட்சாதிபதியாக மாறுவர்

ஆடு, மாடு வியாபாரம் செய்பவருக்கு விசேஷமான தனலாபம் கிடைக்கும்

சகோதரர்களால் லாபமுண்டு. சொந்த விஷயமாக வருகின்ற தீர்ப்பு லாபகரமாக அமையும்

பரிகாரம்

மேற்சொன்னவை ஏதும் சிறப்பாக நடக்கவில்லை எனில் அவர்கள் சனிபகவானுக்கு சனிக்கிழமை தோறும் மூன்று முக எண்ணெய் விளக்கு ஏற்றுவது நல்லது. மூன்று சிவன் ஆலயத்திற்கு சென்று பால் அபிஷேகமும் அர்ச்சனை செய்வதும் சனிக்கிழமை ஒரு பொழுது விரதம் இருப்பதும், விஷ்ணு சகஸ்ர நாமத்தையும், அன்றைய தினம் பாராயணம் செய்வது சாலச்சிறந்தது

வெண்குஷ்டம் நோய் நீங்க பரிகாரம்

அன்பர்களே. இன்று நாம் காணவிருப்பது வெண்குஷ்டம் பற்றியதாகும். ஒருவருக்கு இந்த நோய் வரும் பொழுது இயற்கையிலேயே அவர்கள் தாழ்வுமனப்பான்மையை அடைந்து விடுகிறார்கள். அதனால் அவர்கள் தங்களின் வாழ்க்கையிலே வெற்றி பெறுவதில்லை

இந்த நோயை கண்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் என்ன பாவம் செய்தார்களோ இந்த வெண்குஷ்டம் அவர்கள் தாக்கியிருக்கிறது என்று. பாவம் செய்தவன் எல்லாம் எந்தவித வியாதியும் இல்லாது , நடந்து செல்வதை நாம் காண்கிறோம்

இந்நோய் நல்லவர்களைக் கூட புண்ணியம் செய்தவர்களைக்கூட தாக்குகிறது.வைத்தியத்தில் இதற்கு வழி கேட்டால், நுண் கிருமியால் தோன்றுகின்ற ஒரு நோய் என்று விஞ்ஞான விளக்கம் அளித்து, அதற்கான மருந்தையும் அளித்து விடுகிறார்கள். அம்மருந்தை உண்டு, அவ்விஞ்ஞான விளக்கத்தின்படி வழி கேட்டும் ஆறுதல் அடையாத, நோய் பூரண குணம் அடையாத அன்பர்களுக்கு நண்பர்களுக்கு இன்று அளிக்கப்படும் பரிகாரம் தேன் போன்று இனிக்கும்

முதலிலே இந்த வெண்குஷ்டம் எப்படி வருகிறது. ஒருவருடைய ஜனன ஜாதகத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் தோல் வியாதிக்கு காரணமாக இருக்கின்ற அதிமுக்கியமான புள்ளியானவர் கேது ஆவார். இவருடைய பார்வை, சந்திரன் மீதோ அல்லது செவ்வாய் மீதோ அந்த லக்கனத்திற்கு இரண்டாவது இடத்திலே அந்த சந்திரன் ராகு அல்லது கேது கலந்து செவ்வாயினுடைய பார்வை பட்டு தோலில் ஏற்படும் இந்த வியாதிதான் இந்த வெண்குஷ்டம்

இதைக் கண்டவுடனே, மனம் வெதும்பி விடக்கூடாது நொந்து விடக்கூடாது, இது அந்தக் குறிப்பிட்ட தசையிலே தாக்கி நமக்கு இந்த வேதனையை உண்டாக்கும். அதற்கு நம் முன்னவர்கள் அருமையான பரிகாரங்களை அளித்திருக்கிறார்கள் என்றால் அவர்களெல்லாம் போற்றுதலுக்குரிய வர்களல்லவா?

அத்தகையவர்கள் அருளியிருக்கும் பரிகாரங்களை நாம் நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

ஒரு அற்புதமான பரிகாரம் என்னவென்றால் இந்நோயில் அடிபட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நண்பர்கள் புதுக்கோட்டையின் அருகாமையிலுள்ள

பேரையூர்" என்ற திருத்தலத்திற்கு ஒரு சனியன்று ஒன்பது பத்தரை மணியில் வரும் ராகு காலத்தில், ராகு பெருமானை தரிசனம் செய்தால், அந்நோய் உங்களைவிட்டு, அகலத்துவங்கி விடும் மறையத்துவங்கிவிடும், அதனால் அதிலிருந்து விடுதலை கிடைக்கிறது

செவ்வாயின் ஆதிக்கத்திலே உருவாகுகின்ற தோல் வியாதியான இந்த வெண்குஷ்டம் ஒரு முறை பௌர்ணமி தினத்தன்று திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்கி அவருடைய ஆலயத்தின் அருகாமையிலே இருக்கின்ற கடலிலே நீராடி உருக்கமாக "ஸ்ரீம் சரவணபவா" என்ற மந்திரத்தை ஆறுமணி நேரம் உட்கார்ந்து ஓதி அதன்பின் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மிக வேகமாக வேலை செய்து இந்நோயை பூரணகுணம் பெறச்செய்கின்றது என்றால் அதற்கு முருகப்பெருமானின் திருவுள்ளமே முழுமுதற்காரணமாக இருக்கின்றது என்பதி வேறொரு ஐயமுமில்லை

நம்மால் செய்ய இயலாத அனைத்து செயல்களையும் இறைவனால் செய்ய இயலும் என்பதை நீங்கள் தாராளமாக தைரியமாக நம்ப வேண்டும். அதற்கு உங்களுக்கு பிடிவாதமான பக்தி இருக்க வேண்டும். அதுவே உங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

Thursday, June 18, 2020

கதிர்காம சித்தரின் ரகசியம்

அன்பர்களே ,இன்று நாம் காணவிருக்கும் சித்தர்,கதிர்காமர் சித்தர். வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் நூறாண்டுகளுக்கு முன்பு சீர்காழிக்கு வந்தவர். இளம் வயதில் வீட்டை விட்டு வெளியே வந்த இச்சித்தர் வட இந்தியாவில் ஆன்மீகத்தை நாடி ஆன்மீக யாத்திரை புரிந்து ஈழ நாட்டிற்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற முருகனின் தலமான கதிர்காமத்தில் தவமிருக்க முருகனின் அருளாசி பெற்றதோடு மட்டுமின்றி, நேரிடை தரிசனத்தையும் பெற்றவர்

இவரின் பூர்வீகம் பற்றி முழுமையாக எத்தகவலும் தெரியவில்லை . 65 ஆண்டு கால கடுந்தவத்தின் பயனாக "கதிர்காமர் என்ற பெயரை பெற்றார். பின்பு தமிழ்நாட்டில் சீர்காழிக்கு வந்தார்

சீர்காழிக்கு பல பெருமைகள் உண்டு

நாகை மாவட்டத்து ஊர்களில் புகழ்பெற்றது சீர்காழி. அன்னை உமாதேவி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய திருத்தலம் (பிரம்ம புரீஸ்வரர் திருக்கோயில்) இதுவாகும்

சீர்காழியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உப்பாறு கரையிலே ஓர் குடிசையிலே எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கின்றார்

தினமும் ஒரு வேளை உணவில் மூன்று பிடி மட்டுமே உண்டு தனது தவ வாழ்க்கையை மேற்கொண்ட இவர், முருகனின் நேரிடை அருளைப் பெற்றவர் என்பதால், 1925 ஆம் ஆண்டு முருகனுக்கு ஆலயம் அமைத்து அந்த சன்னிதியிலே ஜல எந்திர பிரதிஷ்டை செய்திருக்கின்றார். ஜல எந்திரம் என்பது ஜலத்தின் மேல் தங்கத்தட்டில் எந்திரம் ஒன்று சுழலும் வகையிலே அமைக்கப்படுவதாகும். இவர் நீரிலும் தனது ஞான சக்திகளை பிரயோகிப்பவர்

பெண்மணி ஒருவர் குடிக்கு அடிமையான தன் கணவனை இவரிடம் அழைத்து வர அவரின் துயர் துடைத்தார். "ஜெய் சீதாராம்"

அப்பனே, அப்பனே என்பது இவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகளாகும்

அன்னதானம் அளிப்பதில் நாட்டம் கொண்டவர். தன்னை நாடி வரும் மக்களின் துயர் துடைப்பார்.மூலிகை, மற்றும் சித்த மருந்துகளின் மூலம் மக்களின் பல நோய்களை குணமளித்திருக்கின்றார்

தனது இறுதி காலத்தை முன்னமே உணர்ந்த கதிர்காம சித்தர் தான் குறிப்பிட்ட இடத்தில் சமாதி வைக்க வேண்டி, 1962-ஆம் ஆண்டு 19-ஆம் தேதி கார்த்திகை மகம் நட்சத்திரம் அன்று இரவு 10 மணிக்கு மஹா சமாதி அடைந்தார். இவரது ஜீவ சமாதி சீர்காழியின் தெற்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் மயிலாடுதுறை சாலையிலே உப்பனாற்று வடக்கரை பாலத்திலே அமைந்துள்ளது. இங்கு சென்று வேண்டும் பக்தர்களுக்கு நோய் நொடி குணமாகி அவர்களது வாழ்விலே பல்வேறு அதிசயங்களும் அற்புதங்களும் நடக்குமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்

சனி லக்னத்தில் இருந்து இரண்டாவது இடத்தில் இருந்தால் பரிகாரம்

இன்று நாம் ஒரு ஜாதகரின் ஜாதக அமைப்பில் ஜென்ம லக்னத்திலிருந்து எண்ணிவர 2-ஆம் வீட்டில் சனியானவர் சஞ்சரித்தால் அந்த ஜாதகருக்கு ஏற்படக்கூடிய , சாதக, பாதகத்தையும் அதற்குரிய தோஷ பரிகாரங்கள் பற்றியும் காணவிருக்கிறோம்

இத்தகைய ஜாதக அமைப்பு பெற்றவர்கள் சேர்த்து வைத்த பொருள்கள் மொத்தத்தையும் இழப்பார்கள்

குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்படலாம் அல்லது பணி மாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லவேண்டி இருக்கும்

சிலருக்கு குடும்பத்தில் நிம்மதி குறையும்

சொந்த பந்தங்களால் தொந்தரவு அதிகரிக்கும். கடனால் அவதிப்படுவர்

பண மாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லவேண்டி இருக்கும்

சிலருக்கு குடும்பத்தில் நிம்மதி குறையும்

சொந்த பந்தங்களால் தொந்தரவு அதிகரிக்கும். கடனால் அவதிப்படுவர்

பரிகாரம்

ஒரு சனிக்கிழமை அன்று குடும்பத்திலுள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து வீட்டில் கணபதி ஹோமம், பீடாபரிஹார ஹோமம் ஆகிய இரண்டையும் செய்யலாம்

குலத்தெய்வத்திற்கு படையல் படைத்து வழிபடலாம். விட்டுப்போன கட்டளையை தொடர்ந்து செய்யலாம். தினமும் மூன்றுமுறை ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது சிறந்த பலனை தரும்

காச நோய் அல்லது டீ பி நோய் நீக்க பரிகாரம்

தினம் ஒரு பரிகார வரிசையிலே டிபி என்றழைக்கப்படும் காசநோய், சைனஸ் என்றழைக்கப்படும் சீதள நோய் ஆகியவற்றை பற்றி காணவிருக்கின்றோம். மேலும், அது யாரைத்தாக்கும், அதற்கான வாய்பாடு என்ன

ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே சந்திரன் எட்டில் மறைந்தால் இந்தக் கடுமையான, கொடுமையான காசநோயும்,சீதள நோயும் மருத்துவத்திற்கு கட்டுப்படாது

அம்மனிதரை தாக்கி, இறுதி பயணம் செய்ய உறுதி செய்துவிடும். இதை சிறு வயதில் வேண்டும். நாம் தெரிந்து கொள்ள

ஒருவருடைய ஜனன ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கனத்திலிருந்து எட்டாவது இடத்திலே சந்திரன் அமையப்பெற்றவர்கள், நிச்சயமாக கண்டிப்பாக காசநோயையையும் சீதளநோயையும் அடைவார்கள்

எனக்கு சந்திரன் எட்டிலே ஆட்சி உச்சம் என்று சொல்லி உங்களை ஏமாற்றிக்கொள்ளாமல் "வருமுன் காப்போம்" என்ற முறையை பயன்படுத்தி பரிகாரத்தோடு, நீங்கள் மருத்துவத்தையும் ஏற்று தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று நிம்மதி அடைவீர்கள். இதைப்பார்த்து ஏமாந்து கொண்டே இருந்தால், அது கிரகத்தின் கோளாறல்ல, உங்களின் கோளாறேயாகும். சில அருமையான பரிகாரங்கள் தினமும் உங்களை வந்தடைகின்ற காரணம் நீங்களெல்லாம் பாக்யசாலிகள் என்பதனாலேயாகும்.

அந்த நோயிலிருந்து நீங்கள் பூரண குணம் பெற வேண்டும். அதற்கு இறை உணர்வை அடைய வேண்டும். இறைவனின் திருவுள்ளத்தை அறிந்து அதற்கேற்றார்போல, பரிகாரம் செய்து வந்தால் இப்படிப்பட்ட சீதள நோய், காசநோய் போன்றவற்றிலிருந்து நீங்கள் விடுதலை அடையலாம்

குழந்தைகளின் ஜாதகத்தில் இது காணப்பட்டால், இருபது வயது வரை ஒவ்வொரு திங்களன்றும்

"அங்காளபரமேஸ்வரி" என்று அழைக்கப்படும் அம்மனின் ஆலயங்களுக்கு அவர்களை நீங்கள் அழைத்துச் செல்லும்போது, சந்திரனால் ஏற்படும் இந்நோய் கட்டுக்குள் வரும்

என்றால் அதில் சிறிதளவும் சந்தேகமில்லை

அதுபோன்று, மாடம்பாக்கத்திலுள்ள

"சிவவாக்கிய சித்தர்" என்ற சித்தர் திங்கள் அன்று வெள்ளை வஸ்திரம் சகிதமாக சென்று "ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தரே போற்றி, போற்றி" என்ற மகாமந்திரத்தை முழங்குங்கள், தினமும் முறை கூறிவாருங்கள். பின்பு அதற்கான மருத்துவம் உங்களை வந்து எட்டும். நீங்கள் சாப்பிட்ட மருந்துகள் எல்லாம் நோயை விழுங்கும்

நோய்க்கண்டிப்பாக மருந்தை விழுங்காது

என்ற நிலை உங்களை வந்தடையும்

மேலும், பௌர்ணமி தினத்தன்று, உங்கள் இல்லங்களுக்கு அருகில் இருக்கின்ற சக்தி ஸ்தலங்களுக்குச் சென்று எலுமிச்சை மாலையை 18, 27,36 என்ற கணக்கில் தொடுத்து அம்மனுக்கு சாற்ற அணிவியுங்கள், அப்படி அணிவதால் நீங்கள் பெறும் பலன் என்ன வென்றால் சந்திரன் உங்களை ஆசீர்வதித்து இந்த நோயிலிருந்து விடுதலை பெறும் ரகசியத்தை அருளுவார். அது கனவு நிலையிலோ அல்லது நினைவு நிலையிலோ உங்களை எட்டும்

சிறுவர்களுக்கு ஒரு தாந்த்ரீக பரிகாரம் என்னவென்றால், பச்சரிசியை மாவாக்கி கூழாக்கி, அதைக்கட்டி வெள்ளி தாயத்திலே அணிந்து வர இப்படிப்பட்ட மோசமான நோயிலிருந்து அவர்கள் நிவாரணம் பெறுவார்கள் என்றால் அது உண்மை என்று கூறி இந்தப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்

Wednesday, June 17, 2020

திருவாதிரை நட்சத்திரத்தின் மகிமை

இந்த ஒவ்வொருநாளும் ஒரு பரிகாரம் என்ற பகுதியில் இன்று நாம் காணவிருப்பது, நம்மால் கட்டுப்படுத்த முடியாத நோயை, கண்டுணர முடியாத நோயை குணப்படுத்த நாம் செய்யவேண்டிய பரிகாரம் என்ன என்பது குறித்ததாகும்

ஜோதிட சாஸ்திரத்திலே 6வது இடம்தான் ரண,ருண,சத்ரு என்று கூறப்படுகிறது

ரணம் என்றால் நமக்கு உடலில் வருகின்ற வியாதியைக் காட்டுகின்ற பகுதியாகும்

ஒரு சிலருக்கு மட்டும், நோயானது மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுகின்றது ஆனால் ஒரு சில நோய்கள் மருந்துகளை கட்டுப்படுத்துகிறது. இது ஏன்.? நாம் இதை சற்றே கூர்ந்து நோக்கி பார்த்தோமென்றால், "ஔவடதகாரகன்"

என்று குறிப்பிடப்படும் "புதனாகப்பட்டவர்

நாம் பிறக்கின்ற நேரத்திலே புதன் கிரகம் வர் நமக்கு பலமாகவும் சார்பாகவும் இல்லாமல், நமக்கு எதிராக இருந்தால், அந்த நோய்க்குரிய தசைகள் நோய் உருவாகும். இதுதான் ஜோதிடம் காட்டும் நீதியாகும்

அப்படிப்பட்ட அந்த நோய் உருவாகின்ற நேரத்திலே, நாம் மருத்துவர்களிடம் சென்றால் கூட, சில நேரங்களில் நம் நோயை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. சோதனைகள் பல இருந்தாலும் மருத்துவ சாதனைகள் பல நடந்தாலும் கூட ஒரு சில நோய்களை அடையாளம் கண்டுகொள்ள இயலாது. அதற்கு எப்படி சிகிச்சையை துவங்குவது, அப்படி துவங்கினால் அந்த சிகிச்சை பலன் தருமா? என்பதுதான் நாம் கண்டுகொண்டிருக்கும் பகுதியின் தொகுப்பாகும்

எப்படிப்பட்ட வியாதியாக இருந்தாலும் எப்படிப்பட்ட சிகிச்சையாக இருந்தாலும் ஒரு எளிமையான, அதேநேரம் சக்திவாய்ந்த பரிகாரம் என்னவென்றால் நட்சத்திரங்களில், மிக முக்கியமானதும், சிவபெருமானின் நட்சத்திரமாக இருப்பதுவுமான

திருவாதிரை இதனை "ஆதிரை என்றும் கூறுவார்கள். அன்று நீங்கள் உங்களின் நோய்க்கான மருத்துவ சிகிச்சை துவங்கும் நாள் வைத்துக் கொண்டால் எப்பேர்ப்பட்ட நோய்கள் இருந்தாலும் அது கட்டுக்குள் வரும், அந்த சிகிச்சை நமக்கு நன்மையை தரும் விதத்தில் மாறும் என்றால், இந்த பலனைத் தரும் திருவாதிரை நட்சத்திரத்தின் சிறப்பம்சமே காரணம் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறினால் அது மிகையல்ல

இதை ஆழ்ந்து அனுபவித்தவர்கள் கண்டுபிடிக்கவும்,தீர்க்க முடியாமல் இருக்கின்ற நோய்களை, ராகுவின் சாரத்திலே வருகின்ற சிறப்பம்சம் மிகுந்த இந்த நட்ச்சத்திரத்திற்கு பெருமதிப்பளித்து அந்த தினத்திலே சிகிச்சையை துவங்கினால் நல்ல பலனடையலாம்

இதை ஆழ்ந்து அனுபவித்தவர்கள், அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மையாகும்.இது மட்டுமல்ல ஜோதிடத்தின் ஒரு ரகசியமும் கூட இப்படிப்பட்ட ரகசியங்களையும் சூட்சுமங்களையும் கண்டு படித்துக் கொண்டிருக்கும் அன்பர்களாகிய நீங்கள் பெரும் பாக்யம் செய்தவர்கள் என்று எண்ணும்போது மகிழ்ச்சி பொங்குகிறது

அன்பர்களே, "திருவாதிரை" அன்று

நோயை வென்று பெருமகிழ்வுடன் வாழ்வீர்களாக" என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்