Wednesday, June 17, 2020

கலக்காய் சித்தரின் ரகசிய வரலாறு

அன்பர்களே, நாம் இன்று காணவிருக்கும் சித்தர்,களாக்காய் சித்தர் இச்சித்தர் மதுரை-தேனி, முத்துதேவன்பட்டியிலே 1628

ஒரு தாமரையின் மீது ருத்திர ஜோதியாக தோன்றினார்

வது வயதிலேயே புராண சொற்பொழிவுகளையும் கதா காலட்சேபம் கேட்கத் துவங்கிய இவர் "ருத்திராக மகிமை" என்னும் ஆன்மீக பேருரைக்கு தன் தாயிடம் விளக்கம் கேட்டார். மேலும் ஒரு உத்திராட்சத்தை தன் கழுத்தில் அணிவிக்குமாறு அடம் பிடித்தார்

பக்திமான்கள், தெய்வீகப் பெரியார்கள் மட்டுமே ருத்திராட்சத்தை அணிந்திருந்தனர். அவரின் தாயாரும் ருத்திராட்சத்திற்கு பதில், களாக்காயை இறைவனிடம் வேண்டி அணிவித்தார்

சித்தர் களாக்காயிலேயே மந்திர உச்சாடணங்களைச் சொல்லி வரலானார்

வது வயதில் இடைவிடாது ஆரம்பித்த ருத்ர கோடி மந்திர பாராயணத்தால், தன் உள்ளங்கையில் களாக்காயை வைத்தவுடன் தன் எதிரே இருப்பவரின் கர்ம வினைகளை உணர்ந்து அதன் மூலம் அருள் வாக்கும் கூறினார்

இவர் திருவண்ணாமலைக்கு வந்து நாள்தோறும் கிரிவலம் வருவதை சிவபூஜையாகக் கொண்டார். இதைக் கண்ட சில பொறாமை குணம் கொண்டவர்கள், வெறும் களாக்காய் அணிந்து தீட்சை அளிப்பதாக சில பொய்ப்புகார்களைக் கூறினார்கள்

அதை முறியடிக்கும் வகையில் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையிலே சித்தரின் களாக்காய் மாலையில் மட்டும் சிவலிங்க ஜோதி பிரகாசமாய் எரிந்தது. அதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில்,ஆச்சர்யத்திலும் வியந்தனர்

அப்படிப்பட்ட களாக்காய் லிங்க தரிசனம் காட்டிய பிறகுதான் இவருக்கு களாக்காய் லிங்கசாமி சித்தர் என்ற பெயர் ஏற்பட்டது.

இவர் வணங்கும் முறை என்னவென்றால் எப்பொழுதும் கிரிவலம் வந்த வண்ணமாக இருப்பார். அதைப் பின்பற்றி தன் வாழ்க்கையிலே பல அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தவர்

மண் பானை, கண்ணாடி, செப்பு, மூங்கில் தங்கப் பாத்திரம் போன்றவற்றில் ருத்திரங்களை எந்த பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை பருகினால் எந்த வியாதிகள் குணமாகும் என்று ருத்திராட்சத்தின் வைத்திய சிகிச்சை முறையை விளக்கினார். இவர் அணிந்திருந்த ருத்ராட்சம் ஆனது அருணாசலேஸ்வரரே அணிந்திருந்த ருத்ராட்சம் என்பதால், இவருடைய சிவஜோதி வடிவத்தைக் காண எண்ணற்றோர் கூடினார்கள் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்

No comments:

Post a Comment