அன்பர்களே, இன்று நாம் காணலிருப்பது,கணவன் மனைவிக்கிடையே எப்பொழுதும் சண்டை ஏற்படுவதைப் பற்றியதாகும். இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி என்ற குடும்ப அமைப்பிலே, வாக்குவாதம் ஏற்பட்டு, விவாகரத்து வரை சென்று விடுகிறது. அதற்கு காரணம் என்ன? பேச்சு வழக்கிலே சிலர் கூறுவார்கள். 'அவனுக்கு நுனி நாக்கிலே சனி" என்று
அப்படியென்றால் என்ன
ஒருவருடைய ஜாதகத்தில் லக்கனத்திலிருந்து இரண்டாவது இடத்தை எடுத்துக்கொண்டால், அங்கே சனி இருக்கப் பிறந்தவர்கள், எப்பொழுதும் சாபம் இடுவதைப்போன்று பேசுவார்கள்
மனிதனுக்கு பேச்சில்தான் அவன் மூச்சு இருக்கின்றது. பேசும் பேச்சு நன்றாக இருந்தால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும். பேச்சு என்பது, அவனே நினைத்து பேசக்கூடியதா? என்றால் இல்லை, ஒவ்வொரு மனிதனுக்கும் லக்கனத்திற்கு இரண்டாவது இடத்தில் இருக்கும் கிரகங்கள்தான், ஒருவருடைய பேச்சைக் கட்டுபடுத்துகிறது
லக்கனத்திலிருந்து இரண்டாவது இடத்திலே சனி இருக்கப்பிறந்தவர்கள் அவர்களுடைய பேச்சு எரிச்சலாக இருக்கும், தன்னம்பிக்கை அற்றதாக இருக்கும். எப்பொழுதும் சிடுசிடுப்பாக இருக்கும். அவர்கள் சொன்னால் வாக்கு பலிதமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு பரிகாரம் என்ன? வாக்குஸ்தானத்திலேயே சனி இருந்தால், அவர்கள் ஆஞ்சநேயரை வழிபடவேண்டும். இந்த ஆஞ்சநேயர் வழிபாடு, கால பைரவர் வழிபாடு, அவர்கள் நினைத்துப்பேசும்பொழுது அந்த பேச்சில் எரிச்சல் இருக்காது, அன்பு இருக்கும். ஈவிரக்கம் இருக்கும். அதனால் அவர்களின் வாழ்வு அமைதியாக செல்லும்
எப்பொழுதும், நாம் நமது குலதெய்வத்தை முதலிலே நினைக்க வேண்டும். பிறகு இஷ்டதெய்வத்தை நினைக்க வேண்டும் மூன்றாவது பரிகார தெய்வத்தை நினைக்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பவர்கள் எதிர்மறையாக பேசக்கூடாது, சாபம் போடக்கூடாது
அப்படியென்றால், பேசத்தொடங்குவதற்கு முன்பு, ஆஞ்சநேயப்பிரபுவை அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நினைத்து, நான் பேசுவதை கவர்ச்சியாகவும், கண்ணியமாகவும், சாபம் இல்லாமலும் பேசும்படி ஆஞ்சநேய மூர்த்தி எனக்கு வழிகாட்டு என்று கூறவேண்டும். அப்படி செய்தால், அவர்களுடைய பேச்சில் கனிவு இருக்கும்
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருக்காது
இரண்டாவதாக ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே, லக்கனத்திற்கு இரண்டாவது வீட்டிலே, செவ்வாய் இருக்கப்பிறந்தவர்கள், பேச்சிலே ஆக்ரோஷம் இருக்கும். ஆணவம் இருக்கும். அதிகாரம் இருக்கும். பிறர் மனம் புண்பட பேசுவார்கள். எதையும் தைரியமாக சொல்வார்கள், வெளிப்படையாக பேசுவார்கள், அப்படி பேசும்பொழுது, பிறர் மனம் அறிந்து பேச மாட்டார்கள் இப்படிப்பட்டவர்கள் வைணவ கடவுள்களை வணங்க வழி இருந்தால் நரசிம்ம மூர்த்தியை வணங்கலாம்
சைவ சித்தாந்தத்தின் படி முருகப்பெருமானை வணங்கலாம்
முருகப்பெருமானை நினைத்து அல்லது நரசிம்மமூர்த்தியை நினைத்து வழிபட்ட பிறகு, அவர்கள் பேசத்தொடங்கினால், அந்தபேச்சிலே ஈரம் இருக்கும். இரக்கம் இருக்கும். கனிவு இருக்கும், அன்பு இருக்கும், அடக்கம் இருக்கும் அதனால் காந்த சக்தி உருவாகும் மூன்றாவதாக, ஒரு சிலரது ஜாதகத்தில் ராகு இருந்தால் அவர்களுடைய பேச்சு கேலி, கிண்டல் இருக்கும், பிறரை தாக்கி பேசுவர். குதர்க்கமாக பேசுவர் விளங்காதபடி பேசுவர். சில நேரங்களிலே வாய்க்கு வந்தபடி பேசுவர் அது மற்றவர்களை பாதித்து, அவருடைய வாழ்க்கையை பாதித்து, கணவன், மனைவி இருவருக்கும் சண்டையை ஏற்படுத்தி, சதா குழப்பத்தை தொடரும்படி செய்து விடும் இப்படிப்பட்டவர்கள், ராகுவின் அதிதேவதையான "பத்ரகாளியை வணங்க வேண்டும். "பத்ரகாளியை நினைத்து, அவர்கள் வழிபட அவர்களுடைய பேச்சிலே சாந்தம் இருக்கும், காந்தம் இருக்கும்
இப்படி ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டாவது ஸ்தானத்தை பார்த்தால் அவர்களின் பேச்சு, உயர்வு இருக்கிறதா? இல்லையா என்பதை எளிதாக கண்டுவிடலாம்.ஆகையால் மேற்கூறிய பரிகாரங்களை முறையாக கடைபிடித்து, நாக்கையும், சொல்லும் வாக்கையும் காப்பாற்றும்படி கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்
No comments:
Post a Comment