அன்பர்களே, இன்று நாம் காணவிருக்கும் சித்தர், நவநாத சித்தர் இவர் கொல்லி மலையிலும், இலங்கை குயின்ஸ்பெரியிலும் பல சித்துக்களை புரிந்தவர்
அகன்ற மார்பு, கூரிய பார்வை, நீண்ட சடை முடியோடு காணப்படுபவர். கொல்லி மலை குகையிலிருந்து பசியோடு வந்தா பெருமாள் அம்மையார் என்ற பெண்மணியின் வீட்டின் முன்பு பசிக்கு உணவு கேட்டார். வழக்கமாக சித்தருக்கு உணவளிக்கும் அம்மையார் அன்றைய தினம் காய்ச்சலில் பாதிக்கப்பட்டதால் இவரின் குரல் கேட்டு வாசற்படியில் வந்து நின்றார். அதைக்கண்ட சித்தர், மீண்டும் உணவு கேட்டார்
தான் காய்ச்சலால் உடல்நலக்குறைவுற்றதைக் கூறிய அம்மையாரிடம் சித்தர், நீங்கள் பொய் சொல்லுகின்றீர்கள், இன்று ஏகதடபுடலாக உணவு சமைத்துள்ளீர்கள் என சிரித்துக் கொண்டே கூற, தன் நிலையைக் கூறி தான் சமைக்காததையும் கூறினார் அந்த அம்மையார்
அவரை இடைமறித்த சித்தர், உள்ளிருந்து உணவை எடுத்து வருமாறு கூறினார்
குழப்பத்துடன் உள்ளே சென்ற அம்மையார் அங்கு கண்ட காட்சி அதிர்ச்சி அளித்தது
அங்கு அறுசுவை உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. அம்மையார் ஆச்சர்யப்பட்டு ஒரு இலையில் சித்தருக்கு உணவை எடுத்து அவரிடம் அளித்தார்
சித்தர் அதை வாங்கி மகிழ்வுடன் சாப்பிட்டு விட்டு, அந்த அம்மையாரிடம் வீட்டினுள் குவளையில் உள்ள கஷாயத்தை அருந்தினால் காய்ச்சல் குணமாகும் என்று கூறிச் சென்றார். அதன்படி அம்மையார் அந்த கஷாயத்தை அருந்த காய்ச்சல் விலகி புத்துணர்வு பெற்றார். பின்பு அவருக்கு பசி உணர்வு தோன்ற பாத்திரங்களில் இருந்த உணவுகளை வயிராற உண்டார்
இந்த அம்மையாருக்கு கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள வீட்டைத் தவிர்த்து இலங்கை குயின்ஸ்பெரியில் ஒரு தேயிலைத் தோட்டமும் உள்ளது. இரண்டு இடங்களிலும் 6 மாதகால இடைவெளியில் தங்கியிருப்பார். ஒரு சமயம் இலங்கை குயின்ஸ் பெரியில் முருகன் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவதற்காக இந்த அம்மையார் சென்றார். அப்பொழுது சித்தரை அழைத்துச் செல்ல மறந்துவிட்டார். நாட்களோ மிகக்குறைவாக இருந்தது. அதற்குள் அவரை அழைத்துவர இயலாது. அம்மையார் வருந்திய நிலையிலிருக்கும்போது, நவநாத சித்தர் எதிரே வந்தார்
சுய நினைவு பெற்ற அம்மையார் சித்தருடன் மகிழ்வுடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார். அதுமட்டுமின்றி சித்தர் அங்கிருந்து அம்மையாருடன் கோயிலின் பின் வழியாக ஒரு தோட்டத்திலே நுழைந்து கொல்லி மலைக்கு அழைத்து வந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இது தான் சித்தர்களின் மகிமை
சித்தர்கள் நினைத்த இடத்திற்கு, நினைத்த மாத்திரத்தில் சென்று விடும் வல்லமை படைத்தவர்கள் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்
No comments:
Post a Comment