Monday, June 15, 2020

பாம்பன் சாமி சுருக்கமான வரலாறு



சுவாமிகள் இராமேஸ்வரத்திலுள்ள பாம்பன் எனும் ஊரிலே 1852 -ஆம் ஆண்டு ஓர் வெள்ளிக்கிழமையன்று பிறந்தார்.

சிறுவயது முதலே முருகன் மீது பக்தி கொண்டவர். அருணகிரியை தன் குருவாக கொண்டு முருகனை வணங்கினால். முருக பக்தி அதிகரித்த நிலையில் அவருக்கு திருமணம் முடிந்தது, அச்சமயத்தின்போது ஒருமுறை காய்ச்சலால் தனது மனைவி அவதியுற்ற போது முருகப்பெருமானை வேண்டுமாறு கூறினார். அவரும் அவ்வாறே வேண்ட காய்ச்சல் குணமானது

முருகனின் உதவியால் பழனி சென்று அவரை வணங்கினார்

இவர் ஏற்றிய சண்முக கவசத்தை அடிக்கடி பாராயணம் செய்து பலரது நோய்களையும் கவலைகளையும் தீர்த்து வந்தார். ஒரு சமயம் சுவாமிகள் கொடிய நோயால் பீடிக்கப்பட்டு சுய நினைவின்றி மூன்று நாட்கள் படுக்கையில் இருந்த பொழுது அவர் இறந்து விட்டதாக நினைத்து அவரது மனைவி அழத் தொடங்கிவிட்டார்

அப்பொழுது, காவி உடை தரித்த ஒருவர் சுவாமிகளின் மனைவியைத் தேற்றி அவர் குணமடைவார் என்று கூறினார். அவ்வாறே அவரும் குணமடைந்தார்

ஒருமுறை, சுவாமிகள் கண்டிப்பாக முருகனை காணவேண்டுமெனக்கூறி குழி ஒன்றில் இறங்கி மந்திரங்கள் சொல்லி வரும்பொழுது அங்கு தோன்றிய சில பேய்கள் இவரது தவத்தைக் கலைத்தன. இருப்பினும் முருகன் மீது கொண்ட பக்தியில் 7-வது நாளில் முருக தரிசனம் கிடைத்தது. முருகனும் தான் சொல்லும் வரை பழனி வர வேண்டாம் என்றுகூற, அவரது சொற்படியே காலம் முழுதும் நடந்தார். இறந்த தன் தாய்க்கு நற்கதி தரவேண்டுமென முருகன் வேண்டினர்

ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் ஸ்டான்லி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகள் வயது 73

ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார். அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.சென்னை மருத்துவமனையில் மன்ரோ வார்டில் பாம்பன் சுவாமிகள் திருவுருவப்படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறார்

மே 30, 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதி அடைந்தவர்கள்.

சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31, 1929 திருவான்மியூரில் சமாதி வைக்கப்பட்டது

இப்பேற்பட்ட பெருமை வாய்ந்த பாம்பன் சுவாமிகள் திருவான்மியூர், கலாசேத்திரா காலனியிலுள்ள இவரது சமாதியில் பௌர்ணமி அன்று நடைபெறும் பூஜையில் கலந்து வணங்கி எல்லா வல்ல முருகனின் அருளைப் பெறுவோம் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்

No comments:

Post a Comment