Monday, June 22, 2020

அகப்பை சித்தர் வழிபாடு

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான

அகப்பைச்சித்தர் பற்றியாகும்

இந்த அகப்பை சித்தர் என்பவர் யாரென்றால், திருவள்ளுவர் வம்சத்திலே தோன்றிய ஒரு அருமையான நெசவாளர் குடும்பத்திலே பிறந்து, வறுமை என்பதையே அறியாதவர், செழிப்பான வாழ்கையை வாழ்ந்துகொண்டிருந்த நம் சித்தர் பெருமான் அவர்கள், தனக்கு இந்த பொருளாசை தேவையில்லை, அருளாசை ஒன்றே போதும், என்று கூறி இறைவனைத் தேடி காடுகளில்,மேடுகளில்,நடந்தது ஓய்ந்தார், காய்ந்தார், யோசித்தார் கண்டார்

அப்பொழுதுதான், அவரின் கண்ணுக்கு ஒன்று தெரிந்து, அதுதான் "ஜோதிமரம்

அந்த ஜோதிமரத்திலே, இவர் உள்ளே நுழைந்து அந்த மரத்தின் உள்ளே உட்கார்ந்து கொண்டு, தன் குருவைத் தேடுகின்றார். தேடிக்கொண்டே இருக்கின்றார். இறுதியில் வேதவியாசர் இவருக்கு குருவாக அமர்ந்து அனைத்துவிதமான ஞானங்களை வாரி வழங்குகின்றார்

இந்த அகப்பை சித்தர் அருளாசி பெற்று ஞானம் அடைந்து, அஞ்ஞான நிலையிலேயே மக்களை வழி நடத்துகின்றார். அவர் கண்ட ரகசியம்தான் அனைத்து விதமான துன்பங்களுக்கும் காரணம் இந்த மனம் என்று. அதாவது அகமே அனைத்துவிதமான பாவங்களுக்கும், துன்பங்களுக்கும் காரணமாக இருக்கின்றது என்று இவர் கண்டுணர்ந்தவர்

அப்பொழுது அகப்பைச்சித்தர் நாளடைவில்

"அகப்பேய்ச் சித்தர்" என்றழைக்கப்பட்டார் இவரைவியாழனன்று மஞ்சள் வஸ்திரம் மஞ்சள் நிற மலர், வாழைக்கனி ஆகியவற்றுடன் வணங்கி வந்தால் பின் வரும் பலன்களை அன்பர்களுக்கு அருளுகின்றார்

யார்யாருக்கெல்லாம் குருவால் குழந்தை பாக்கியம் இல்லையோ, குதூகலம் இல்லையோ, பணப்பிரச்சினை அரசாங்கப்பிரச்சினை அனைத்தும் இவரை வணங்குவதால் தீர்க்கப்படுகின்றன

வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், தொழில் செய்து நஷ்டப்பட்டவர்களுக்கு கஷ்டப்பட்டவர்களுக்கு இவர் ஆறுதல் கொடுத்து தேற்றுவார்

மேலும், லஷ்மி கடாட்சம் இல்லாதவர்கள் இவரை வணங்கும் பொழுது, லஷ்மி கடாட்சம் தோன்றிவிடும். உடலில் இருக்கின்ற குடலிலே நோய் ஏற்பட்டால் இவரை வணங்கும்பொழுது, அந்நோய் குணமாகி மறைந்து விடும்

நீங்கள் புகழ் பெற்றவராக, ஞானம் பெற்றவராக , மனத்தெளிவு, ஆத்மதெளிவு பெற்றவராக விளங்கிவிடுகின்றீர்கள் என்றால் அது அகப்பை சித்தரின் கருணையும், அருளுமேயன்றி வேறேதும் இல்லை

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு வியாழனன்று சென்னை தாம்பரம் மாடம்பாக்கத்திலுள்ள தேன்புரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அகப்பைச்சித்தரை மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் மலர் வாழைக்கனி சகிதமாக வணங்கும் பொழுது அதன் நன்மைகளை நாம் ஏராளமாகப்பெருகின்றோம். என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

அகப்பைச்சித்தர் குரு என்ற கிரகத்திற்கு சாட்சியாக இருக்கின்றார். இவரை வணங்கும்பொழுது குருவால் ஏற்பட்ட தீமைகள் யாவும், நன்மையாக மாறி கடாட்சம் அளிக்கின்றார்

எப்பொழுதெல்லாம் குரு உங்கள் ஜாதகத்தில் மறைகின்றாரோ அப்பொழுது நாம் அகப்பைச்சித்தரை வணங்க நமக்கு அருள் பாலிக்கின்றார். என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment