Monday, June 15, 2020

கல்வியில் உயர்வு நிலை பெற பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது கல்வித்தடை நீங்க நாம் மேற்கொள்ளும் பரிகாரம் பற்றியதாகும். நமது ஜனன ஜாதகத்தை எடுத்து சற்று கூர்ந்து கவனிக்கும் பொழுது, அடிப்படை படிப்பு லக்கனத்திலிருந்து எண்ணிவர 4வது இடம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும்

மேற்படிப்புக்கு 9வது இடத்திலே இருக்கின்ற கிரகங்கள் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும்

இவ்விதம் இயற்கையாகவே, நமது ஜாதகத்தில் 4 மற்றும் 9ஆம் இடங்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் அந்த நபர் மிக அழகாக கல்வியையும், கல்வியால் இலக்கையும், இலக்கினால் நற்பலன்களையும் அடைந்து விட்டார்

மேலும், சந்திரன் என்ற கிரகம் ஞாபக சக்தியைக் காட்டுகின்ற கிரகம். குரு என்ற கிரகம் பேரறிவை கொடுக்கின்ற கிரகம் புதன் என்ற கிரகம் நுட்பத்தைக் காட்டுகின்ற கிரகம் இவை மூன்றும் நல்ல நிலையிலிருந்து 4வது வீடும், 9வது வீடும் பாதிக்கப்படாமல் இருந்தால் அவர் நிச்சயமாக தன் கல்வியில் ஒரு நல்ல நிலையை அடைவார் என்பது உறுதி

இந்தக் கல்வி ஞானத்தை அருளும் "ஸ்ரீ ஹயக்ரீவர்" கடலூர் "திருவந்திபுரம்"

எனப்படும் ஸ்தலத்திலே உறைபவர். இவர்

"செட்டிப்புண்ணியம்" என்று சொல்லப்படுகின்ற "தேவநாத ஸ்வாமி

ஆலயத்தில் "ஹயக்ரீவர்" காட்சி தருகின்றார். இவரை புதனன்று வியாழனன்றோ சென்று வணங்குபவர்கள் நிச்சயமாக தங்கள் கல்வி, கேள்விகளில் வல்லவர்களாக இருப்பதோடு மட்டுமின்றி தங்கள் இலக்குகளையும் அவர்கள் எட்டுகிறார்கள்

இத்தலத்தினுடைய வழித்தடம் சென்னை செங்கல்பட்டு சாலையிலே சிங்கபெருமாள் கோவில் நிறுத்தத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள செட்டிபுண்ணியத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு ஒரு வியாழனன்று தேன், ஏலக்காய் மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வணங்கி எழுதுகோல் அல்லது நோட்டுப்புத்தகங்கள் ஆகியவற்றை ஏழை மாணவர்களுக்கு கொடுக்க அற்புதமான பலனைக் காட்டும்

ஹயக்ரீவர் - ஹய என்றால் குதிரை, கிரீவர் என்றால் குதிரையின் உடைய தலையை உடைய பெருமாள் என்று பொருள்

"மதுகைடபர்" என்ற அரக்கன் வேதத்தை பிரம்மாவிடமிருந்து பறித்துச் செல்லும் பொழுது இவர்தான் அவனிடமிருந்து மீட்டு சரஸ்வதியிடம் கொடுத்து சரஸ்வதிக்கே குருவாக விளங்கியவர்

இப்பேற்பட்ட மகிமை வாய்ந்த "ஸ்ரீ ஹயக்ரீவரை" வணங்கும்பொழுது நமது கல்விதாகத்தை தீர்த்துவைக்கின்றார் என்றால் அது உண்மையிலும் உண்மை என்று கூறி, இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்

No comments:

Post a Comment