அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது பெற்ற தாய்க்கும், பிள்ளைகளுக்கும் ஏன் பிரச்சினை ஏற்படுகின்றது என்பது பற்றியதாகும்
ஜோதிடத்திலே நான்காவது இடம் தாயாரைக் குறிக்கின்ற இடம் அந்த இடத்திலே சந்திரன் தாயாரைக் குறிக்கின்ற கிரகம், கேது சந்திரன் சேர்ந்து இருக்கும் பொழுது குழந்தைகளுக்கு, தாய்க்கும் அங்கே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
அதனால், அந்தக்குடும்பத்தில் மனமகிழ்ச்சி இன்றி அவர்கள் போராடுகிறார்கள்.
இந்தப் போராட்டத்தை தவிர்ப்பதற்கு கேதுவை வசியம் செய்ய விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். விநாயகரை வசியம் செய்ய அருகம்புல்லை ஒவ்வொரு திங்களன்றும் விநாயகரிடம் வைத்து, நாம் வணங்கி வர வேண்டும். சந்திரன் அம்பாளின் அம்சமாக இருப்பதால்
ஆதிபராசக்தியை வணங்க சந்திரன் பலம் பெறுகின்றார். விநாயகரை அருகம்புல் வைத்து வணங்க கேது வசியமாகின்றார்
அதனால், தாய்க்கும், மகனுக்கும் மகளுக்குமிடையே இருந்த கசப்பான உறவு அங்கு இனிப்பான உறவாக மாறி விடுகின்றது, இந்தப்பரிகாரம் அதனுடைய பலனைக் கொடுக்க ஆரம்பித்து வருகிறது
சந்திரனை மனோகாரகன் என்றும் அழைக்கின்றார்கள். ஒரு ஜாதகத்தில் சந்திரனும்,குருவும் இணையும்போது அவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு அறவே நமக்கு வரக்கூடாது என்று எண்ணினால், அதற்குரிய சக்தி வாய்ந்த பரிகாரம் என்னவென்றால், நாம்
"ஸ்ரீகாளஹஸ்தி க்கு" ஒரு ஞாயிறன்று சென்று மாலை 41/2-6 ல் வரும் ராகுகாலத்திலே "சர்ப்பசாந்தி" பூஜை செய்ய வேண்டும். அன்று மாலை அங்கு தங்க வேண்டும். வேறு எந்தக் கோயிலுக்கும் செல்லாது, திங்களன்று அங்கே பார்வதி தேவியை வணங்கி, 101/2 மணியளவில் பாதாள கணபதி வழிபட வேண்டும். இதை வாழ்க்கையில் ஒருமுறை செய்யும்பொழுது, கேதுவால் பாதிக்கப்பட்ட சந்திரனுக்கு அங்கே நிவர்த்தி உண்டாகி, அவர்களுக்கு மனரீதியிலான பாதிப்பு ஏற்படா வண்ணம் காத்து, மகிழ்ச்சியான எண்ணம் ஏற்படுகிறது
அதன்பிறகு, இந்தக்கேதுவை வசியம் செய்ய, கொள்ளு தானியத்தை ஒவ்வொரு திங்களன்றும் இவர்கள் கேது பகவானிடம் வைத்து அதன் மீது நெய்விளக்கேற்றி வர கேதுவால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களுடைய ஜாதகத்திலே வராது. மேலும், திங்களன்று சக்திக்கு எலுமிச்சை பழ மாலைகள் அல்லது எலுமிச்சையை இரண்டுதுண்டாக அறுத்து அதில் விளகேற்றி சக்தியை வணங்கி வர அவர்களுக்கு சந்திரன் பலமாகி, அவர்களுக்கு "மனோபலம் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட பரிகாரங்களைச் செய்தால் எங்களுக்கு ஏதாவது பலன் கிடைக்குமா என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக பரிகாரங்களைச் செய்து வர, உங்களுக்கு பலன் கிடைக்கும். ஏனென்றால் ஜோதிடத்திலே இவ்வாறான ரகசியங்களை பார்த்து படிக்கின்ற பாக்கியம் அனைவருக்கும் கிடைத்து விடாது
ஏனென்றால், இந்த ரகசியங்களெல்லாம் யார்யாருக்கெல்லாம் எட்டுகின்றது யார்யாருக்கெல்லாம் இது கிடைக்கின்றது என்றால், பரிகாரங்களை முறையாக பின்பற்றி பாதை மாறாமல் நடக்க வேண்டுமென்ற நோக்கிலே இந்தப்பரிகார விளக்கங்களை மனதொருமித்து படித்துணர்பவர்களுக்கே முழுமையாக எட்டும் என்பதே உண்மையாகும்
அதுமட்டுமின்றி, அன்னையின் அருளும் விநாயகர் கருணையுமின்றி இந்த விளக்கங்களை பெற முடியாது
எனவே, பரிகாரத்திற்கான முறைகளை முறையாக பின்பற்றி செய்யும் எண்ணத்தை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்து பலன்களைப் பெறுபவர்களே பெரும் பாக்கியசாலிகள் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்
No comments:
Post a Comment