Tuesday, June 23, 2020

ஆறுமுக சித்தரின் ரகசியம்



அன்பர்களே, இன்று நாம் காணவிருக்கும் சித்தர்,ஆறுமுக சித்தர்

சிவகங்கை மாவட்டம், கோட்டையூரிலே குடிகொண்டிருக்கும் இவரின் பூர்வீகம் கொங்குநாடு. 5 வயதிலேயே வீட்டை விட்டு வெளியே இந்திய தேசம் முழுவதும் சுற்றி பல மஹான்களைச் சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றார்

எச் சிக்கலையும் (துன்பங்களையும்) பொறுக்கும் சுவாமி" அதாவது எந்த வித சிக்கலையும் தீர்த்து வைக்கும் சித்தர் என்பதால் எச் சிக்கலையும் பொறுக்கு ஆறுமுக சித்தர் என்ற பெயர் மருவியதாகக் கூறுவர்

ஒருமுறை திருநெல்வேலியிலே கோவணத்துடன் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, காவலர்கள் அவரை துரத்த சித்தர் ஓடிச்சென்று ஒரு குப்பைத்தொட்டியின் அருகில் ஒளிந்துகொண்டார். அவரைப்பிடிக்க முயற்சி செய்த காவலர் சிலையாய் மாறிப்போனார். அப்பொழுதுதான் மக்கள் இவரின் பெருமையை உணர துவங்கினர்.பின்பு காவலருக்கு உயிர் கொடுக்க உயிர் பெற்ற காவலர் அதன் பின்பு சித்தருக்கு மிகுந்த மரியாதை செலுத்தத் துவங்கினார்

மூதேவியின் உபாசகராக இருக்கின்ற இவர் முருகனின் அருளைப் பெற்றவர்

விராலிமலையில் வராஹியை வழிபடுபவர். தான் முக்தி பெறப்போவதை முன்கூட்டியே அறிவித்தவர். ஒருமுறை காஞ்சி மஹா பெரியவர் இவரைப் பார்க்கும்பொழுது இவரின் பெருமையைக் கூற, மக்கள் சித்தரின் சிறப்பை அறிந்து பெண்களின் இன்னல்கள் பலவற்றைத் தீர்த்துக் கொண்டனர்

சித்தர் அவர்கள் முருக பக்தர் என்பதால் முருகனுக்குரிய வைகாசி விசாகம் நாளன்று முக்தி அடைந்ததாக கூறுவர்

இவரின் சமாதி காரைக்குடியின் வடக்கிலே கோட்டையூர் சிவன் கோயிலிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலே டவுன் எக்ஸ்டன்ஷன் பகுதியிலே உள்ளது

சித்தர்களின் மகாபுருஷராக விளங்கிய ஆறுமுக சித்தர் பிறர் துன்பங்களை தனதாக எண்ணி போக்கினார்.

விராலிமலை குகையிலிருந்து பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார். அயல்நாட்டு அன்பர்களின் நோய்களையும் தீர்த்து. இன்னும் இவரின் சமாதியில் சென்று வணங்கும் பொழுது அனைத்து துன்பங்களும் அகலுகின்றன

விஞ்ஞானத்தின் அதிவேக வளர்ச்சியால் மெய்ஞானமென்பதின் மீது நமக்குள்ள நம்பிக்கை குறைந்து போயுள்ளது என்பது உண்மை. இருப்பினும் நாம் காணும் சித்தர்களின் அருளாலும், சக்தியாலும் நமது துன்பங்களை கரைப்போம் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்

No comments:

Post a Comment