அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது ஒருவரது ஜாதக அமைப்பினை நாம் கவனிக்கும்பொழுது அவருடைய ஆரோக்கிய காலம், அவர் நோய்வாய்ப்படுகின்ற காலம் இவற்றை எளிதாக கூறிவிடலாம்
ஒவ்வொரு மனிதனுக்கும் தித்திப்பான ஒரு பகுதி இருக்கும்பொழுது, கசப்பான ஒரு பகுதியும் இருக்கும். ராசி சக்கரம் சதா சுழன்று கொண்டிருப்பதால், இன்பம் துன்பம், ஆரோக்கியம், நோய் என்று மாறி,மாறி ஒருமனிதனுக்கு வரும்
இந்தக்கால கட்டத்தில் நம் முன்னோர்கள் சில வியாதிகளை கர்ம வியாதிகள் என்றும் சில வியாதிகளை மர்ம வியாதிகள் என்றும், சில வியாதிகளை தீரும் வியாதிகள் என்றும், சில வியாதிகளை தீராத வியாதி என்றும் வகுத்து வைத்திருக்கின்றனர்
இப்படி தீராத வியாதிகள் ஏன் ஒரு மனிதனைத் தாக்குகின்றது, என்றால் அவன் சென்ற பிறவியிலே செய்த பாவம்.
அவன் செய்த வினையே அவனுக்கு செய்வினையாக செயல்படுகின்றது. நம் ஜாதகத்தை சற்று உற்று நோக்கும் போது
பதவி பூர்வ புண்ணிய பத்திரிகை
என்றுதான் நம் ஜாதகத்தை கூறுகிறார்கள்
ஒரு மனிதன் மரணம் என்று சொல்லப்படுகின்ற பகுதியிலே பாதிக்கப்படும்பொழுது, அபாயகரமான அறுவை சிகிச்சைகள், குணப்படுத்த முடியாத கொடிய நோய்கள், மரணத்தை நோக்கி தள்ளுகின்ற வியாதிகள் அம்மனிதனை தாக்கும் பொழுது அவன் திண்டாடி விடுகின்றான்
மனிதச் சந்தையிலே அவன் அனாதையாகி விடுகின்றான்
அப்பொழுதுதான் அவன் எப்படிப்பட்ட சொர்க்கமயமான வாழ்க்கையை வாழ்ந்தான் என்பது தெரியும். வியாதி வராதவரை நாம் நம் உடலுக்கு ராஜாவாக இருக்கின்றோம். வியாதி எப்போது நம்மை பாதிக்கின்றதோ அங்கிருந்து நம் வாழ்க்கை தடம் மாறி விடுகிறது
அப்படிப்பட்டவர்கள் நான் எந்த மருந்து சாப்பிட்டும் என் வியாதி தீர வில்லையே எந்தக்கோயிலுக்குச் சென்றும் என் வியாதி குணப்படவில்லையே, மருந்து மாத்திரை எல்லாவற்றையும் ஏன் நோய் விழுங்கி விடுகின்றதே என்று கவலைப்படுபவர்கள் ஒரு முறை "வாலாஜாப்பேட்டை தன்வந்திரி பெருமானிடம்" செல்ல வேண்டும். இத்திருத்தலம் உள்ள இடம் வேலூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் வாலாஜாப்பேட்டை, அங்கிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் 3கி.மீ தொலைவிலே "கீழ்புதுப்பேட்டையில்"
இந்த ஆலயம் அமைந்துள்ளது
இவ்வாலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் ஒரு "தன்வந்திரி படத்தை" ஒரு புதனன்று வாங்கி வைத்து கொண்டு
ஓம் ஸ்ரீம் தன்வந்திரி மூர்த்தியே போற்றி போற்றி" என்று நெய் தீபம் ஏற்றி அதை தண்ணீரிலே கரைத்து அந்தத்தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்திவர அப்பொழுது அவர்களின் நோய்கள் கட்டுப்படத் துவங்கும்
ரங்கநாத மூர்த்திக்கே ராஜ வைத்தியராய் இருந்த "தன்வந்திரியை
வணங்கும்பொழுது எந்தவித நோய் இருந்தாலும் அதிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கின்றது என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்
No comments:
Post a Comment