Wednesday, June 10, 2020

குழந்தை வரம் தரும் பரிகாரம்



ஜோதிடம் உங்களுக்காக -

அன்பர்களே, இன்றைய பகுதியில் நாம்

காணவிருப்பது, பலருக்கு ஒரு பெரும் குறையாகவே இருந்து வரும்

"குழந்தை வரம்" பற்றியதாகும். இதற்கான பரிகாரத்தை ஒளிவு மறைவின்றி நாங்கள் அளிப்பதில் மனநிறைவு அடைவது மட்டுமல்ல, பிறவிப்பயனை அடைவதாகவும் எண்ணுகிறோம், ஏனென்றால் அந்தளவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது "இந்த குழந்தை வரத்திற்கான பரிகாரம்,

ஒரு சிலருக்கு குழந்தைகள் உருவாகிறது, ஆனால் குறைமாதத்திலே பிறந்து இறந்து விடுகிறது. இதை ஆங்கிலத்தில் "ஸ்டில் பெர்த்" என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட அமைப்பிற்கு ஜோதிடத்திலே ஒரு வாய்ப்பாடு இருக்கிறது.

ஒரு ஆண்மகன் ஜாதகத்திலும், ஒரு பெண்கள் ஜாதகத்திலும் ஐந்தாவது இடத்திலே, ராகு அல்லது கேது செவ்வாயில் இருக்கும் பொழுது, இந்த இறந்து பிறக்கின்ற குழந்தைகளின் நிகழ்வுகள் தொடர்கதையாகும், துயர்கதையாகவும் தொடர்கிறது. அல்லது சுக்கிரனுக்கு 4லிலோ, 8லிலோ செவ்வாய் இருந்தால் அந்த குழந்தைகள் இறந்த நிலையிலே பிறந்து பெற்றவர்களை கலங்கடித்து விடுகின்றன. அந்த குடும்பத்தில் நிம்மதியை குலைத்துவிடுகின்றன. இதற்கெல்லாம் நம்முன்னோர்கள் முத்தான, மிகவும் சத்தான பரிகாரங்களை கண்டு, அனுபவித்து நமக்கு அருளியிருக்கிறார்கள்.மிகவும் அற்புதமான பரிகாரங்களை தந்திருக்கிறார்கள்.

அன்பர்களே, நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அந்த பரிகாரங்களை தெரிந்து, அறிந்து, புரிந்து, நீங்கள் முழுநம்பிக்கையுடன் சொல்லியவற்றை சொல்லியபடி செய்ய வேண்டும், இப்படிப்பட்ட பாதிப்பை உடைய தம்பதிகள் என்ன செய்ய வேண்டுமென்றால், குழந்தை பெற்ற ஒன்பது தாய்மார்களைத தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக வெற்றிலை, கொட்டைப்பாக்கு, எலுமிச்சங்கனி இவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒன்பது தாய்மார்களிடமிருந்து பெற்று, அதை ஒரு வெண்ணிற துணியில் முடிந்து, உங்களுடைய பூஜையறையில் வைத்து ஒன்பது நாட்கள் அதை பூஜை செய்ய வேண்டும்.

பின்பு, ஒரு விடியற்காலையிலே, ஒரு நதியிலோ அல்லது ஒரு சமுத்திரத்திலோ மனதார பிரார்த்தித்து போட வேண்டும்.

கிணறுகளிலோ, கண்மாய், குட்டை போன்றவற்றிலோ போடக்கூடாது. ஒன்பது தாய்மார்களிடம் தானம் பெறுவதை வெட்கமாக கருதும் தம்பதிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கான மாற்றுப்பரிகாரம் ஒன்று உள்ளது.

அந்தத் தம்பதிகள் ஒன்றுசேர்ந்து ஒரு விடியற்காலையில் எழுந்து சூரியன் உதிப்பதற்கு முன்பு, வடக்குப்பகுதியில் ஒரு

"சாண்" அளவிற்கு குழிதோண்டி, ஒரு லிட்டர் பசும்பாலை ஊற்றி இறைவனிடம், இறைவா.., பிறந்து இறந்த குழந்தைகள் மீண்டும் எங்களுக்குப் பிறக்கும்படி அருள்புரியவேண்டுமேன்று மனமுருகி ஒன்பது தினங்கள் பிரார்த்தித்து வேண்டும்பொழுது, நிச்சயமாக அந்த இறை சக்தியின் மூலம், அந்த குழந்தைகள் மீண்டும் பிறக்க அருள்பாலிப்பார் என்பது உங்களுக்கான முத்தான ஒரு பரிகாரமல்லவா.? நீங்கள் புண்ணியம் செய்தலோழிய இந்த பரிகாரம் உங்களை வந்தடையும்.

அதாவது, வேண்டுவதற்கும், யாசிப்பதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும் நாம் வெட்கப்படக் கூடாது.

இந்த உலகமே அந்தரத்தில் தொங்கி, பந்து போன்று சுழன்று கொண்டிருக்கிறது, இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டல்லவா இந்த பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதுபோலவே, இப்படிப்பட்ட பரிகாரங்களனைத்தும் இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று நினைத்து நீங்கள் முறையாக அவற்றை செய்ய வேண்டும். முழு பலன் பெற வேண்டும் என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment