Saturday, June 13, 2020

அதிர்ஷ்டம் பெற பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது

மனிதர்களில் பலர் தான் பிறந்ததிலிருந்து இன்று வரை கஷ்டப்படுகிறேன், என் வாழ்க்கையில் துரதிஷ்டமே தொடர்கிறது

என்னைபோன்ற அதிர்ஷ்டமில்லாத மிகவும் துர்பாக்கியசாலி இவ்வுலகில் வேறு எவரும் இல்லை . நான் கஷ்டப்படுவதற்காகவே பிறந்திருக்கின்றேன், முற்பிறவியிலே நான் விதைத்த பாவ விதைகளின் கதிர்களை இப்பிறவியில் அறுவடை செய்து கொண்டிருக்கின்றேன். அதன் பலன் என்னை என் மரணம் வரை விடப்போவதில்லை, அதிலிருந்து எனக்கு விடுதலையும் இல்லை , என்று கனலில் விழுந்த புழுவினைப் போன்று தினம் தினம் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு துடித்தாலும், மன ஓரத்தில் அத்துன்பங்களிலிருந்து தங்களுக்கு ஓர் விமோசனம் கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் உயிரினும் மேலான அன்பர் பெருமக்களே, உங்களின் துடிப்பைக் கண்டு எங்கள் மனம் பொறுக்குமா? எத்தனையோ கஷ்டங்களுக்கு பரிகாரங்கள் அளித்து உங்கள் கண்ணீரைத் துடைத்த நீங்கள் இதற்கு மட்டும் பரிகாரங்கள் கூறாமல் விடுவோமா என்ன சரி, கேளுங்கள் பரிகாரத்தை, பெறுங்கள் பலன் பெற்றபின் மகிழ்ந்து ஆனந்தக்கூத்தாடுங்கள் அதுதானே எங்களுக்கும் வேண்டும்,

நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் நான் நமச்சிவாயா என்று சொல்லும்போது அப்பர் பெருமான் சொல்லும் வாக்கைப் பாருங்கள் நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும், நாள்தான் அதிர்ஷ்டமில்லாததாக இருந்தால் என்னை என்ன செய்துவிடும். கோள்தான் கொடூரமாக நான் பிறக்கும்போது ல் என்ன செய்து விட முடியும்

நமச்சிவாயா என்ற அடையாள வார்த்தையை சொன்னால் போதும் அனைத்தும் தகர்ந்து விடும். என்ற தாரக மந்திரத்தை அப்பர் பெருமான் சொல்லும்பொழுது

நீங்கள் கவனியுங்கள், ஆழ்ந்து ஆடை காத்து அதை சிந்தனை செய்தால், விதியை வெல்லலாம், விதியை வெல்வதற்கு வழி இருக்கின்றது. அதாவது, "நமச்சிவாய நமஹ என்று சிந்திப்போர்க்கு அபாயம் இல்லை , உபாயம் இதுவே, என்று சொல்லும் ஒளவைபிராட்டி, சிவாய நமஹ"

என்று சிந்திப்பவர்களுக்கு அபாயம் இல்லை , உபாயம், உபயம் என்றால் இதுதான் வழி. "விதி வழி மதி, மதி வழி விதி நாமனைவரும் என்ன நினைக்கிறேன் நம் ஜாதகத்தை பார்க்கும்பொழுது இதுதான் விதி என்று நொந்துகொள்வோம், அப்படிப்பட்டவர்களுகுத்தான் "விதியை மதி வெல்லும்' என்று

எப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் கஷ்டங்கலிருக்கும், அவர்களின் ஜாதகத்தைப் பார்க்கும் பொழுது லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் பனிரெண்டாம் ஆதி இருந்தால் லக்னாதிபதி ஆறாவது இடத்தில் இருந்தா பத்தாம் ஆதி பனிரெண்டாவது இடத்தில் இருந்தால் துன்பம் தொடரும், அதிலிருந்து மீள ஒரு உபாயம் உள்ளது

ஸ்ரீ ராமர் ராஜகுலத்திலே பிறந்த அற்புதமான ஜாத அமைப்பை உடையவர்

அவர் மானிடப்பிறவியை எடுத்ததால் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்

அச்சமயத்தில் ஸ்ரீ அனுமன் அப்படிப்பட்ட அனுமனின் சுந்தர காண்டத்தை நாம் படிக்கும் பொழுது உங்களுக்கான அற்புதமான பலன்கள் உங்கள் வாழ்க்கையிலே வந்து விடும் எப்படிப்பட்ட, தரித்தரமான ஜாதகமாக இருந்தாலும், சரி எப்படிப்பட்ட துரதிஷ்டமான ஜாதக அமைப்பாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

அது

மாதத்திலே ஒரு நாள், புனர்பூசம் என்ற நட்சத்திரம், கடக ராசியிலே இருக்கும்பொழுது, இராமரின் பட்டாபிஷேகப்படம் ஒன்றை எடுத்து அதை பூஜை செய்வதற்குரிய இடத்தில் வைத்து இராமன், சூரியன் அம்சமாக இருப்பதால் தூய கோதுமையில் செய்த சர்க்கரைப்பொங்கலை அவருக்கு நைவேத்யம் செய்து, ஒரு புனர்பூச நட்சத்திரம் கடக ராசியிலே ஜொலிக்கும் பொழுது, சந்தித்து சஞ்சாரம் செய்யும்பொழுது, நீங்கள் சுந்தரகாண்டத்தை இராமரின் பட்டாபிஷேகப்படத்திற்கு முன்பாக அமர்ந்து பாராயணம் செய்யத்துவங்க வேண்டும்

அது போன்று நாளொன்றுக்கு ஒரு சர்கம் அதாவது ஒரு அத்தியாயம் என்ற விகிதத்திலே, அறுபத்தெட்டு சர்கங்கள் நிறைவடைந்த பிறகு மறுபடியும் இந்த நைவேத்யத்தை படைத்து, இராமர் பட்டாபிஷேகப்படத்திற்கு முன்பு, உங்கள் ஜாதகத்தை வைத்து நாளொன்றுக்கு இந்த சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்து பூஜை செய்து வர அனுமனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்து நீங்கள் வாழ்வில் மிகவும் உயர்ந்த நிலைக்குச் சென்று விடுவீர்கள் என்பது நிச்சயம்

இப்படிப்பட்ட அமைப்பை உடைய அன்பர்கள் மேற்கூறிய பரிகாரத்தை பக்தி சிரத்தையுடன் செய்து வாருங்கள், அப்படி செய்வதிலினால் முன்பு கூறியதைப்போன்று ஆனந்தக்கூத்தாடுவீர்கள், என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை , என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கின்றோம்

No comments:

Post a Comment