அன்பர்களே இன்று நாம் காணவிருப்பது,
"மஹாளய பக்ஷம் அமாவாசை
பற்றியதாகும்.
ஒரு வருடத்திலே மூன்று முக்கிய அமாவாசைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒன்று "தை அமாவாசை",
இரண்டு "ஆடி அமாவாசை", மூன்று
"மஹாளய பக்ஷ அமாவாசை" என்று கூறுகிறார்கள்.
"மஹாளயம்" என்றால் கூட்டம் என்று பொருள். கூட்டம் கூட்டமாக பித்ருக்கள் வசிக்கும் லோகமானது நம் பூமியிலிருந்து 9 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள சூரியனிலிருந்து 9 கோடி மைல்களுக்கு அப்பால் இந்த பித்ரு லோகம் இருக்கிறது.
இருப்பவர்கள் அதிகமா? அல்லது இறந்தவர்கள் அதிகமா? என்று கணக்கீடு செய்யும் பொழுது, இறந்தவர்கள் தான் அதிகம். அவ்வாறு இறந்த மக்கள் "பிதுர் லோகம்" என்று கூறப்படும் இடத்திலே இருக்கும் பொழுது, ஒளி மிகுந்த சரீரத்தைப் பெறுகின்றார்கள். அத்தகைய சரீரத்தைப் பெற்ற அவர்களுக்கு நமது உணவானது சாதகமாக இருக்காது. அதனால் வருகின்ற
வருகின்ற மஹாளாய பக்ஷ அமாவசை"-யில் நாம் பூஜை செய்ய இருக்கிறோம்.
திதி தெரியாதவர்களுக்கும் அற்புதமான பலனைக் கொடுக்கக் கூடியது இந்த மஹாளய பக்ஷம் க்ஷ அமாவாசை.இறந்தவர்கள் ஒளி சரீரத்தைப் பெற்றிருப்பதால் அன்று நாம் கொடுக்கும்
"எள்", சூரியனால் அமிர்த்தமாக்கப்பட்டு உணவாக அளிக்கப்படுகின்றது.
நம் உலக கணக்குப் படி 365 நாட்கள் இருந்தால் தான் அது ஒரு வருடம். நம் நிலவுலகக் கணக்குப் படி 1 வருடமானது பிதுர் லோகக் கணக்குப் படி 1 நாளாகக் கருதப்படுகின்றது. உதாரணத்திற்கு நம் தாத்தா இறந்து 50 வருடங்கள் ஆகின்றது என்று எடுத்துக் கொண்டால், அவர்களின்
"பித்ரு லோக" கணக்குப்படி பார்த்தால் 50 நாட்கள் மட்டுமே.
அவர்களின் உருவப் படத்தை நாம் தெய்வங்களுக்கிடையில் வைத்து வணங்கக் கூடாது. அவர்களுக்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்க வேண்டும். அதாவது ஒரு பொது அறையில் கிழக்கு முகமாகவோ அல்லது வடக்கு முகமாகவோ படத்தை வைக்க வேண்டும். அவர்களின்
அமாவாசை தினங்களிலே கோலம் போடக் கூடாது. அது பித்ருக்களைத் தடுக்கும். இது
"பக்ஷக்ஷம்" என்று அழைக்கப்படுவதால் பதினைந்து நாட்கள் நம் பூமியிலே வந்து நம் நிலையைக் கண்டு செல்வார்கள்.
அப்பொழுது, அவர்களை நாம் நினைவு கூறும் விதத்திலே அவர்களுடைய உருவப் படங்களை மேற்கு நோக்கியோ அல்லது தெற்கு நோக்கியோ வைக்கக் கூடாது.
அப்படங்கள் எப்போதும் நாம் பேசும் பகுதியிலேயே இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் அவர்களுக்கு ஆனந்த நிலை வரும். பித்ருக்கள் கடவுளை விட உயர்ந்தவர்களா என்றால் இல்லை. இருந்த போதிலும் கூட, மனிதர்கள் என்ற நிலையைக் காட்டிலும் உயர்ந்தவர்கள், அப்படிப்பட்டவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் மூன்றாவதாக வருகின்ற "மஹாளய பக்ஷ
அமாவாசையிலே அவர்களை மனமார பிராத்தித்து வணங்கி என்றென்றும் அவர்களின் நல்லாசிகளைப் பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை நிறைவு செய்கிறேன்.
No comments:
Post a Comment