Wednesday, June 17, 2020

திருவாதிரை நட்சத்திரத்தின் மகிமை

இந்த ஒவ்வொருநாளும் ஒரு பரிகாரம் என்ற பகுதியில் இன்று நாம் காணவிருப்பது, நம்மால் கட்டுப்படுத்த முடியாத நோயை, கண்டுணர முடியாத நோயை குணப்படுத்த நாம் செய்யவேண்டிய பரிகாரம் என்ன என்பது குறித்ததாகும்

ஜோதிட சாஸ்திரத்திலே 6வது இடம்தான் ரண,ருண,சத்ரு என்று கூறப்படுகிறது

ரணம் என்றால் நமக்கு உடலில் வருகின்ற வியாதியைக் காட்டுகின்ற பகுதியாகும்

ஒரு சிலருக்கு மட்டும், நோயானது மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுகின்றது ஆனால் ஒரு சில நோய்கள் மருந்துகளை கட்டுப்படுத்துகிறது. இது ஏன்.? நாம் இதை சற்றே கூர்ந்து நோக்கி பார்த்தோமென்றால், "ஔவடதகாரகன்"

என்று குறிப்பிடப்படும் "புதனாகப்பட்டவர்

நாம் பிறக்கின்ற நேரத்திலே புதன் கிரகம் வர் நமக்கு பலமாகவும் சார்பாகவும் இல்லாமல், நமக்கு எதிராக இருந்தால், அந்த நோய்க்குரிய தசைகள் நோய் உருவாகும். இதுதான் ஜோதிடம் காட்டும் நீதியாகும்

அப்படிப்பட்ட அந்த நோய் உருவாகின்ற நேரத்திலே, நாம் மருத்துவர்களிடம் சென்றால் கூட, சில நேரங்களில் நம் நோயை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. சோதனைகள் பல இருந்தாலும் மருத்துவ சாதனைகள் பல நடந்தாலும் கூட ஒரு சில நோய்களை அடையாளம் கண்டுகொள்ள இயலாது. அதற்கு எப்படி சிகிச்சையை துவங்குவது, அப்படி துவங்கினால் அந்த சிகிச்சை பலன் தருமா? என்பதுதான் நாம் கண்டுகொண்டிருக்கும் பகுதியின் தொகுப்பாகும்

எப்படிப்பட்ட வியாதியாக இருந்தாலும் எப்படிப்பட்ட சிகிச்சையாக இருந்தாலும் ஒரு எளிமையான, அதேநேரம் சக்திவாய்ந்த பரிகாரம் என்னவென்றால் நட்சத்திரங்களில், மிக முக்கியமானதும், சிவபெருமானின் நட்சத்திரமாக இருப்பதுவுமான

திருவாதிரை இதனை "ஆதிரை என்றும் கூறுவார்கள். அன்று நீங்கள் உங்களின் நோய்க்கான மருத்துவ சிகிச்சை துவங்கும் நாள் வைத்துக் கொண்டால் எப்பேர்ப்பட்ட நோய்கள் இருந்தாலும் அது கட்டுக்குள் வரும், அந்த சிகிச்சை நமக்கு நன்மையை தரும் விதத்தில் மாறும் என்றால், இந்த பலனைத் தரும் திருவாதிரை நட்சத்திரத்தின் சிறப்பம்சமே காரணம் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறினால் அது மிகையல்ல

இதை ஆழ்ந்து அனுபவித்தவர்கள் கண்டுபிடிக்கவும்,தீர்க்க முடியாமல் இருக்கின்ற நோய்களை, ராகுவின் சாரத்திலே வருகின்ற சிறப்பம்சம் மிகுந்த இந்த நட்ச்சத்திரத்திற்கு பெருமதிப்பளித்து அந்த தினத்திலே சிகிச்சையை துவங்கினால் நல்ல பலனடையலாம்

இதை ஆழ்ந்து அனுபவித்தவர்கள், அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மையாகும்.இது மட்டுமல்ல ஜோதிடத்தின் ஒரு ரகசியமும் கூட இப்படிப்பட்ட ரகசியங்களையும் சூட்சுமங்களையும் கண்டு படித்துக் கொண்டிருக்கும் அன்பர்களாகிய நீங்கள் பெரும் பாக்யம் செய்தவர்கள் என்று எண்ணும்போது மகிழ்ச்சி பொங்குகிறது

அன்பர்களே, "திருவாதிரை" அன்று

நோயை வென்று பெருமகிழ்வுடன் வாழ்வீர்களாக" என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

No comments:

Post a Comment