Sunday, June 14, 2020

வாழ்ந்து சரிந்தவர்களுக்கு பரிகாரம்.



அன்பர்களே, இன்றைய தினம் நாம் காணவிருப்பது, நன்கு வாழ்ந்து கெட்ட மக்களைப் பற்றியும்.

ஒரு காலகட்டத்தில் ஊர், உலகம் மெச்ச வாழ்ந்தகுடும்பம், காலத்தின் கோலத்தால் மிகவும் தாழ்ந்துவிடுகின்றது என்றால், அது எவ்வளவு பெரிய வேதனை என்பது அனுபவித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தலைவலியும், தரித்தரமும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும். அதாவது செருப்பை அணிந்தவனுக்குத்தான் அது எங்கு கடிக்கின்றது என்பது தெரியும் என்பார்கள். நன்கு வாழ்ந்துகெட்டவர்களிடம் கேட்டால் தெரியும் வசந்தகாலத்திலே அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று

ஒரு மனிதன் உயர்ந்த நிலையிலே இருக்கும்பொழுது, அவனைப் பலரும் வந்து பாராட்டிப்புகழ்வார்கள். ஆனால் அவன் நிலை சற்று தாழ்ந்துவிட்டால், அப்படியே அவனை நடைபிணமாக்கி விடுவார்கள்.

ஏனென்றால், இந்தச் சமுதாயம் அப்படிப்பட்டது

இது ஒரு புறமிருக்க, நாம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், ஒரு சிலருக்கு காலதேவன் நடத்திய நாடகமே இது என்று எளிதாக புரிந்துவிடும் நல்லவர்களை காலதேவன் எப்பொழுதும், கைவிடுவதில்லை, அவர்களைச் சீண்டிப் பார்த்த அதே மக்களைச் சரணடையச் செய்வதும் இந்தக்கால தேவனின் மகிமையாகும்.

ஒருவருடைய ஜனன ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், அந்த லக்கனத்தை சுக்கிரனோ அல்லது குரு அவர்களுக்கு சுவராக இருந்து பார்த்தால் எப்படிப்பட்ட அதளபாதாளநிலைக்குச் சென்றாலும் 'பீனிக்ஸ் பறவை" போன்று மறுபிறப்பு எடுத்து வருவார்கள்

ஒருவருடைய லக்கனாதிபதி ஒன்பதிலே இருந்தாலும் இந்த அற்புதம் தொடரும். இரண்டாம் ஆதி ஒன்பதாம் ஆதி, லக்கனாதிபதி என்று சொல்லப்படுபவர்கள் மூன்றாவது நிலையிலே இருந்தாலும் இது நடக்கும். இப்படிப்பட்டவர்கள் சோர்வடைய வேண்டாம்.

ஒரு காலத்திலே நீங்கள் மிகவும் பண வசதி படைத்தவர்களாக இருந்தோம், இப்பொழுது ஏழ்மையில் மிகவும் துன்பப்படுகிறோம், என்று நீங்கள் கதறினால், அப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் ஜாதகத்திலே மேற்கூறிய வாய்ப்பாடு இருக்கின்றதா என்று பாருங்கள். அப்படி இல்லையென்றால், நீங்கள் உங்களை எப்போழுதும் உயர்வாக நினையுங்கள், மறுபடியும் இழந்த செல்வத்தை வெல்வோம் என்று திடமாக நம்புங்கள்.

திடமான எண்ணம் பாதி வெற்றிக்குச் சமம்.

வேதம் என்ன சொல்கின்றது என்றால், ஒருவன் எப்படி நினைக்கிறானோ, அப்படிதான் அவன் வாழ்க்கை என்று திருமூலர் அதற்கு சான்றாக "சிவசிவ' என்ற சிந்தனையோடு, உங்கள் வாழ்கையை நடத்துங்கள். அந்த சிவன் நிச்சயமாக உங்களைக் கட்டிக் காப்பாற்றுவார் என்று கூறுகிறார்.

இதற்கு மாற்றுப்பரிகாரம் என்னவென்றால்

ஓம் நமோ நாராயணாய நமஹா" என்று 108 முறை நாராயணனின் துதிபாடி வர, தரித்தரம் கரைந்து செல்வநிலை, லக்ஷ்மியின் தாண்டவத்தின் மூலம் உங்களைக் கவ்வும். அது உங்களுக்குக் கிடைக்கப்பெறும் என்றால், இந்த இரண்டு எளிய பரிகாரங்கள் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிவர வேண்டும். வறுமையைப் பற்றிக் கூறிக்கொண்டிருக்க கூடாது, நாம் எப்படி நினைக்கின்றோமோ அப்படித்தானே நம் வாழ்க்கை அமையும் என்றால், இந்தக்கிரகங்கள் நம்மை ஒன்றும் செய்யாதா?)

இந்த கிரகங்கள் இப்படி செய்ததனால்தானே எனக்கு இந்நிலை?

என்று நீங்கள் கேட்பீர்களேயானால், நீங்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் நாமனைவரும் அந்த கிரகங்களின் கட்டளைப்படிதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்று. அந்த கிரகங்களை நாம் எதிர்கொள்வதற்கு இறைவனை மனதில் நினைத்து அன்றாடம் செய்யப்படும் மந்திர உச்சாடனங்கள் உங்களைக் காப்பாற்றும், உங்களை மறுபடியும் செழுமைக்கு அழைத்துச் செல்லும் என்றால் இது உண்மை. அதற்கான வாய்ப்பாடும் ஏற்கனவே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒருவருடைய ஜனன லக்கனத்தை குரு,சுக்கிரன் சுவராக இருந்து பார்த்தால், அவர்கள் இப்பொழுது மோசமான நிலையில் வாழ்ந்தாலும் கூட, செழுமையான நிலைக்குச் சென்று விடுகின்றாகள் அல்லது ஒன்பதாவது இடத்திலே லக்கனாதிபதி இருக்கப்பெறாதவர்களுக்கும் இந்த நிலை வந்துவிடும் என்று கூறுகின்றார்கள். இதன் மூலம் உங்களின் வாழ்க்கையில் செல்வச் செழிப்பும், மன நிம்மதியும் குடிகொள்ளும் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment