Thursday, June 11, 2020

எளிய வலிய வாஸ்து சாஸ்திரம் பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, ஏற்கனவே நாம் வேறொரு கோணத்தில் கண்டு பயன்பெற்ற "வாஸ்து பரிகாரம்"

அல்லது "வாஸ்து தோஷத்தின் மற்றொரு கோணமாகும். அதிகபட்ச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப்பரிகாரம் அளிக்கப்படுள்ளது. இனி மேற்கொண்டு பகுதிக்கு செல்வோம்,

அன்பர்களே, இன்று எங்குபார்த்தாலும் பரவலாக பேசப்படுவது வாஸ்து குற்றம், வாஸ்து தோஷம் பற்றியதாகவே இருக்கின்றது. அதிலிருந்து விலக நீங்கள் செய்ய வேண்டிய பரிகார முறைகளைக் காணவிருக்கின்றீர்கள்.

பொதுவாக பண வசதி படைத்தவர்கள், எத்தனை முறை வீடு கட்டினாலும், அதில் வாஸ்து தோஷம் இருக்கின்றது என்று தெரிந்தால் அவர்களால் இடிக்க முடியும், கட்டவும் முடியும். அது இன்றைய அளவிலே ஒரு நாகரீகமான செயலாகி விட்டது.

ஆனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு நிலம் வாங்குவது, வீடு கட்டுவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது, நிறைவேற்றப்பாடுபடுகின்ற கனவாக இருக்கின்றது அவர்கள் எப்படி தங்களின் வீட்டைக் கட்ட முடியும். அவர்கள் எப்படி இடிக்க முடியும், அவர்கள் எப்படி இந்த

வாஸ்து குற்றத்திலிருந்து" தப்பிக்க முடியும், என்று நாம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு 'வாஸ்து தோஷம்" பற்றிக் கொண்டால், அவர்கள் அவ்வீட்டினை இடிப்பது என்பது எங்ஙனம் சாத்தியமாகும் என்று சற்றே நம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் எல்லாம், மன உளைச்சலிலே, அந்த வீட்டில் இருந்து படுகின்ற துன்பங்களுக்குக் காரணம் இந்த

வாஸ்து தோஷமே' என்று அவர்கள் மனம் புழுங்கி, மனம் வெதும்பி வேதனை அடைகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு அற்புதமான பரிகாரம், அதாவது ர்ந்த வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கின்றது என்று சொல்லுகிறார்களோ அந்த வீட்டின் பிரதான வாசல் அதாவது தலைவாசலின் உயரத்தையும் அகலத்தையும் அளந்து கொள்ளுங்கள், அளவிற்கு ஏற்ப அருகம்புல் மாலையையும், வெற்றிலை மாலையையும் விற்பவரிடமிருந்து பேரம் பேசாத, சொல்லுகின்ற விலை கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள், தலைவாசலிலே அம்மாலைகளை ஒரு தினம் முழுதும் இருக்கச்செய்யுங்கள். மறுதினம் ஒரு வாளியிலே நிரப்பப்பட்ட தண்ணீரிலே அவ்விரண்டையும் ஊறவைக்கவும், அதன்பின் அந்தத்தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் சுற்றி தெளியுங்கள். பிறகு அந்த வெற்றிலைக் கொடியும், அருகம்புல் மாலையையும் எடுத்து இஸ்திரி இடப்பட்ட ஒரு வெள்ளைத்துணியிலே முடிந்து, சூரியன் வருவதற்கு முன்பு, கால்வாய்களிலோ குளம், குட்டைகளில் அதைப்போட்டு அந்நீர்நிலைகளிலே விட்டுவிட, தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு, இந்த வாஸ்து தோஷம் நிவர்த்தியாகி மகாலக்ஷ்மியினுடைய பார்வை உங்கள் வீட்டில் பதியும், அதனால் உங்கள் வீட்டில் இழந்த மகிழ்ச்சியை பெறுவீர்கள்.

இது, நிச்சயம், அவ்வீட்டினில் நீங்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்வீர்கள் என்பது உறுதி.

மேலும், நடுத்தர வர்க்க மக்கள் வீடு கட்டுவது என்பது அவர்களின் சொந்த ஜாதகத்தின் அடிப்படையிலேயாகும். நிலம் வாங்குவதும் அவ்வாறே. அப்படி இருக்கும்பொழுது இந்த வாஸ்து குற்றம் வந்து, அவர்களை வதைக்கும் பொழுது, இப்படிப்பட்ட பரிகாரங்களை தக்க தருணத்தில் நீங்கள் செய்தீர்கள் என்றால், நீங்கள் அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்து உங்கள் காலத்தைக் கழிக்கலாம், இந்தக் குற்றத்தைப் போக்கும்,

அன்பர்களே, ஒவ்வொரு பரிகாரமும், தங்களுக்கு மனமுவந்து நல்லெண்ணத்தில் வழங்கப்படுகின்றது என்று கூறினால் அது நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அதீத அன்பினால், தெய்வத்தின் கட்டளைப்படியினாலும் மேயன்றி வேறொன்றுமில்லை. என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment