பட்டினத்தடிகளார் சித்தர் தியானச்செய்யுள்
சந்திர விழியும் மந்திர மொழியும் கொண்ட சிவபக்தரே கரும்பு வில்லும், அரும்பு சொல்லுமாய் ஆண்டவனிடம் கலந்தவரே பற்றற்று, உற்றற்று, சுற்றற்று ஈசன் கால் பற்றி இருக்கும் உங்கள் பாதம் பற்றினோம். பரிவுடன் காப்பர் பட்டினத்தாரே!
எனும் செய்யுளைத் தொடர்ந்து பரிகாரமும் பலன்களும் பகுதியில் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தரைப் பற்றி காண்போம்
இவர் ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷங்களை கட்டுப்படுத்த கூடியவர்.
முன்வினை கோளாறு, பித்ரு சாபம் நீங்கி, நிம்மதி கிடைக்க தாம்பரம் மாடம்பாக்கம் சென்று இவரை வழிபாடு செய்ய வேண்டும்
தந்தை, மகன், தந்தை மகள் சம்மந்தப்பட்ட எந்தப்பிரச்சினையாக இருந்தாலும், அதைத்தீர்க்கக் கூடிய வல்லமை இந்த பட்டினத்துச் செட்டிக்கு உண்டு. இவரை பட்டினத்து அடிகள் என்றும் கூறுவார்கள், இவர்தான் பட்டினத்துச் சித்தர். பிதுர் ராஜ்ஜிய சொத்துக்களிலே தகராறு இருந்தால், அரசியல் வெற்றிகள் பெற திறமை இருந்தும் புகழ் கிடைக்கவில்லையே என்ற நிலை அகல இருதய சம்மந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் உஷ்ண சம்மந்தப்பட்ட கோளாறுகள் நீங்க உலகம் முழுவதும் பெரும், புகழும் கிடைக்க இவரை ஒரு ஞாயிறன்று வணங்குவது சிறப்பு
நம்முடைய ஜனன ஜாதகத்தில், 9 வது இடம்தான் நம் தகப்பனாரைப் பற்றி சொல்லுகின்ற இடம் அந்தச் சூரியனுடைய கிரகம் எப்படி இருக்கின்றது என்பதை நம் ஜனன ஜாதகத்திலே பார்க்கும் பொழுது சூரியன் பழுதுபட்டால், பழுதுபடுவது என்றால் ராகு அல்லது கேது அல்லது சனியோடு தொடர்பு கொண்டிருந்தால், அவர்களுக்கு தந்தை வழியிலே பல சிக்கல்கள் உருவாகும். உறவு முறைகள் சிக்கல்கள் உருவாகும். பல பகுதிகளிலே சிக்கல்கள் உருவாகும்
அப்படிப்பட்டவர்கள், சூரியனால் ஏற்படுகின்ற தோஷத்தினால், அத்தோஷத்தினால் வருகின்ற சிக்கல்களை போக்க பட்டினத்து செட்டி என்றழைக்கப்படும் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தரை ரோஜா வஸ்திரம், ரோஜாமாலை இவைகளைக்கொண்டும், நிவேதனமாக கரும்புச்சாறு படைத்தும் வணங்க வேண்டும்
ஸ்ரீ பட்டினத்தடிகளர் அவர்கள் பெரும் வணிகர் குடும்பத்திலே பிறந்தவராவார்.
வாலிப வயதிலே பொருள் ஈட்டுவதற்குச் சென்றபொழுது, ஒரு சிறிய பெட்டியை தாயிடம் கொடுத்துவிட்டு இவர் பட்டினத்து செட்டி என்ற என்ற பெயரைப் பெற்று வாணிபத்தில் புகழ் பெற்றார்.
அதன்பிறகு சிவனே இவருக்கு மைந்தனாகப் பிறந்து காதறுந்த ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே” என்ற பொருளை எழுதிக் கொடுத்துவிட்டு மறைந்தார். அதன் பிறகுதான் அவர் பல உண்மைகளை உணர்ந்தார்.
ஒரு சமயம் பட்டினத்தடிகளின் மீது திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டது. இவரை
"கழுமரம் ஏற்ற உத்தரவிட்டான் அந்நாட்டு மன்னன். அதற்கு பட்டினத்தடிகள், அந்த மரம் இந்த மரத்தை ஏற்றப்போகின்றதோ"
என்று சிரித்து ஒரு பாடலைப் பாடினார்.
உடனே, அக்கழுமரம் தீப்பற்றி எரிந்தது.
அப்படிப்பட்ட பட்டினத்தார் சித்தர் பின் வரும் பதினாறு போற்றிகளைக் கூறி மருதாணி பூ சம்பங்கி புஷ்பம், மரு ஆகிய புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும்
பதினாறு போற்றிகள்
கரும்பு பிரியரே போற்றி சுயம்பு லிங்கத்தை பூஜிப்பவரே போற்றி
ஞானஸ்கந்தரே போற்றி
சிவனின் அருளை வழங்குபவரே போற்றி
நிசியில் பூஜிப்பவரே போற்றி
மந்திரசித்தி அளிப்பவளே போற்றி
கண் ஒளி உடையவரே போற்றி
ஜீவன் முக்தரே போற்றி
சிவனின் மைந்தரே போற்றி
வியாபாரத்தை பெருக்குபவரே போற்றி அஷ்ட பீஜாட்சரத்தில் இருப்பவரே போற்றி
ஞானத்தை அளிப்பவரே போற்றி உலக மக்களின் நண்பரே போற்றி
கோவண வஸ்திரம் உடையவரே போற்றி
சந்திரனின் ஒளியே போற்றி கரும்பில் நாட்டம் உள்ள ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தர் ஸ்வாமியே போற்றி போற்றி
என்று பாடி, "ஓம் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தர் ஸ்வாமியே போற்றி!" என்று 108 முறை ஜெபித்து வணங்க சூரியனால் ஏற்பட்ட தோஷங்கள் நம்மை அணுகாது மறைந்து, சூரியனுடைய அருளாசி நமக்கு கிடைக்கும். அதனால் நம் வாழ்கையிலே பல சிறப்புகள் பிறக்கும் என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்கிறேன்
No comments:
Post a Comment